பௌத்தம் சீர் பரவுவார் விருது
தஞ்சாவூர், மூத்த குடிமக்கள் சங்கம் சார்பாக 27.10.2026இல் பெசண்ட் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் "பௌத்தம் சீர் பரவுவார்" என்ற விருதினைப் பெற்றேன் என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். தேர்ந்தெடுத்த சங்க நிறுவனர் தமிழ்ச்செம்மல் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் அவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அழைப்பிதழில் கண்டவாறு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதே நிகழ்வில், இராசராசன் விருது பெற்ற ஆதி.நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
பௌத்த ஆய்வு/நூலுக்காகப் பெற்ற விருதுகள்
- அருமொழி விருது 2021-பௌத்த மரபு ஆய்வாளர், தஞ்சாவூர், சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம், அருமொழி விருது 2021 வழங்கும் விழா, 26.12.2021
- ஆவணக்குரிசில் விருது, தஞ்சாவூர், மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம்,57ஆவது தேசிய நூலக வார விழா, 17.11.2024
- 2024ஆம் ஆண்டின் சிறந்த பௌத்த எழுத்து-எழுச்சித்தமிழர் இலக்கிய விருது, சென்னை, விடுதலைக் கலை இலக்கியப் பேரவை, இளவந்திகை திருவிழா, எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் 2025, 21.3.2025
- அயோத்திதாசர் ஆதவன் விருது, சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, விருதுகள் வழங்கும் விழா, 24.6.2025
- சோழ நாட்டில் பௌத்தம் நூலுக்காக சிறந்த வரலாற்று நூலுக்கான அருமொழி சோழன் விருது, தஞ்சாவூர், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சாவூர் தமிழ்ச்சங்கம், மாமன்னனர் இராஜராஜசோழர் முடிசூட்டுப் பெருவிழா, 1040ஆவது ஆண்டு, 3.8.2025
- நல்லி திசை எட்டும் மொழியாக்க விருது, சென்னை, மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா, 2.10.2026
பெரிய கோயில் சதய விழாவில் மாமன்னன் ராஜராஜன் விருதுபெற்ற ஆதி.நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், பல துறை சார்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வு தொடர்பான செய்திகளை வெளியிட்ட மாலை முரசு (27.10.2026), தினமணி (28.10.2026), அங்குசம் (28.10.2026) இதழ்களுக்குமனமார்ந்த நன்றி.
-------------------------------------------------------------------------------------------
நன்றி: மூத்தகுடிமக்கள் நலச் சங்கம், தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------------------------















Comments
Post a Comment