அருமொழி விருது 2021

வரலாற்றுத்துறையில் சிறப்பான பங்காற்றி வருபவர்களை ஊக்கமூட்டும் வகையில் சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் பேரரசர் இராஜராஜர் பெயரால் அருமொழி விருது என்ற விருதினை வழங்கி கௌரவிக்கின்றது.

அவ்வகையில் இந்த ஆண்டு வரலாற்று இளம் ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர். களப்பணியாளர். வரலாற்றுப்புதினங்கள், வரலாற்று ஆய்வு நூல்கள், வரலாற்றுக் கண்டுபிடிப்புகள், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வரலாற்றுக்குழு, வரலாற்று இணையதளம், தேவாரத்திருமுறை, சமண பௌத்த ஆய்வு, தமிழ் மரபு, வரலாற்று புகைப்படக்கலைஞர், வரலாற்றுப் பணியில் வாழ்நாள் சாதனையாளர் என்று பல பிரிவுகளில் 36 விருதுகளை வழங்கியது.

2021ஆம் ஆண்டிற்கான அருமொழி விருதினை பௌத்த மரபு ஆய்வாளர் என்ற பிரிவில் இச்சங்கம் எனக்கு வழங்கியுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 26 டிசம்பர் 2021இல் தஞ்சாவூர் அருகில் உள்ள மானாங்கோரையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினைப் பெற்றேன்.

அருமொழி விருது, 2021






சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கத்தின் தலைவர் திரு என். செல்வராஜ் தலைமையுரையாற்றினார். 

சிறப்பு விருந்தினர்களாக பணிநிறைவு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு என்.கிருபாகரன், மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு என்.ஆர்.இளங்கோ, இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டத்தின் கண்காணிப்பாளர் முனைவர் டி.அருண்ராஜ், இந்தியத்தொல்லியல் துறையின் தஞ்சை துணை வட்டத்தின் பராமரிப்பு உதவியாளர் திரு எஸ்.சங்கர், ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு ஜி.மதனகோபால், முனைவர் கோ.தெய்வநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர். பொழிவாளர்கள் வரலாற்றின் முக்கியத்துவம்,  இக்காலகட்டத்தில் தமிழக வரலாறு பெற்று வருகின்ற புதிய பரிமாணங்கள், தமிழின் தொன்மை ஆகியவற்றை எடுத்துரைத்ததோடு இளம் ஆய்வாளர்கள் வரலாற்றுக்கு அளித்து வருகின்ற பங்களிப்பினைப் பாராட்டினர்.   மதிய அமர்வில் முனைவர் இர. அகிலா சிறப்புரையாற்றினார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் அய்யம்பேட்டை செல்வி ஹணா/ஸ்ரீனிவாசனின் வரவேற்பு நடனம், கோவை ஹரிணி ராஜேந்திரன் & தங்கவேல் மற்றும் குழுவினரின் நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்றன.

சங்கச்செயலாளர் திரு எம்.பி.செந்தில்குமார் நன்றியுரை கூறினார். முன்னதாக  சங்கத்தின் பொருளாளர் திரு ஏ.வி.மணிவண்ணன் வரவேற்புரையாற்றினார். விழா நிகழ்ச்சிகளை திரு எம்.மாரிராஜன், திருமதி ரூத் ஆகியோர் தொகுத்தளித்தனர்.

 


பல துறைகளில் பங்களித்து வருகின்ற வரலாற்றறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு அருமொழி விருது வழங்கப்பட்டது. கீழ்க்கண்ட ஆய்வாளர்கள், அறிஞர்கள், துறைசார்ந்த பெருமக்களோடு (விருது பெற்றோர் விவரம் அகரவரிசைப்படி) நானும் இவ்விருதினைப் பெற்றேன்.

  • இளம் வரலாற்று ஆய்வாளர் திரு அன்பு வந்தியத்தேவன், திரு சிற்றிங்கூர் மு.ராஜா,   திரு ஈ.செந்தமிழ்செல்வன், திருமதி பௌசியா இக்பால், திரு ஜி.ஸ்ரீநிவாஸ்
  • கல்வெட்டியல் ஆய்வறிஞர் திரு மீ.மருதுபாண்டியன்
  • கல்வெட்டு களப்பணி ஆய்வாளர் முனைவர் த.ரமேஷ்
  • கல்வெட்டு பயிற்றுநர் அறம் குழுவினர்
  • கோயில் கட்டிடக்கலை பயிற்றுநர் திரு பாபுமனோ
  • கோயில் காப்பாளர் திரு சங்கர்
  • கோயில் பாங்கன் டாக்டர் அருண்ராஜ்
  • சமணர் மரபு ஆய்வாளர் முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன்
  • தமிழ் மரபு பாதுகாவலர் வழக்கறிஞர் திரு என்.ஆர்.இளங்கோ, நீதியரசர் திரு என்.கிருபாகரன் 
  • திருமுறை பயிற்றுநர் திரு திருச்சிற்றம்பலம்
  • தொல்லியல் களப்பணி ஆய்வாளர் திரு ஜான் பீட்டர்
  • தொல்லியல் மரபு ஆய்வாளர் திரு வே.இராஜகுரு
  • பௌத்த மரபு ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்
  • மரபு கட்டிடக்கலை ஆய்வாளர் திரு இராமன் ஸ்தபதி
  • மரபு சிற்பக்கலை ஆய்வாளர் திருவி.வீரமணி
  • வரலாற்று ஆய்வு நூல் திருமதி அர.அகிலா, திருமதி மு.நளினி, திரு இரா.கலைக்கோவன் (புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில்), முனைவர் எஸ்.சாந்தினிபீ (கல்வெட்டுகளில் தேவதாசி), திரு இரா.மன்னர்மன்னன் (இராஜ ராஜசோழன்) 
  • வரலாற்று இணையப்பக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை
  • வரலாற்றுக் கண்டுபிடிப்பு  திரு ச.பாலமுருகன் (பராந்தகச்சோழர் நடுகல் கல்வெட்டு),  திரு எஸ்.பாலாஜி (பிரம்ம சிரச்சேத மூர்த்தி), திரு ராஜ் பன்னீர்செல்வம் (பல்லவர் கால ஓவியம்)
  • வரலாற்றுக் கருத்தரங்க உரையாளர் முனைவர் இல.தியாகராசன்*
  • வரலாற்றுக் குழு சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு
  • வரலாற்றுப் பணி வாழ்நாள் சாதனையாளர் முனைவர் இராஜவேலு
  • வரலாற்றுப் புகைப்படக்கலைஞர் திரு மது ஜெகதீஷ்
  • வரலாற்றுப் புதினம் திரு உதயணன் (சோழ குலாந்தகன்), திரு உளிமகிழ் ராஜ்கமல் (பெருவுடையார்), திரு காலச்சக்கரம் நரசிம்மா (கூடலழகி), திரு ரங்கநாதன் ஞானசேகரன் (உத்தம நந்தினி),  திரு ஸ்ரீமதி (தில்லையழகி)  

*25 டிசம்பர் 2021இல் இயற்கையெய்திய வரலாற்றறிஞர் திரு இல.தியாகராசன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


சங்க உறுப்பினர்கள் விழாவினை ஒருங்கிணைந்து நடத்திய விதம் மிகவும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. விழா நிகழ்ச்சிகள் சற்று தாமதமாகத் தொடங்கிய போதிலும் உறுப்பினர்கள் நேர்த்தியாக நிகழ்வுகளை நடத்திச்சென்றனர். இவ்விருதினை எனக்கு வழங்கிய சங்கத்தாருக்கு என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்., சிறப்பாக விழாவினை நடத்திய பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஒளிப்படங்கள் நன்றி: சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்

தொடர்புடைய நாளிதழ் நறுக்குகள்:



முந்தைய விருதுகள்
சித்தாந்த இரத்தினம், 1997


அருள்நெறி ஆசான், 1998

பாரதி பணிச்செல்வர், 2001






***************************
1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற பொருண்மையிலான என்னுடைய ஆய்வினை நூலாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் வலைப்பூவில் கட்டுரைகள் எழுதுவதிலும், நண்பர்களின் பதிவுகளைப் பார்த்து கருத்தினைப் பதிவதிலும் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்கள் அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்.  
***************************

Comments

  1. முனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    விருதுகள் மேலும் பெறவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  3. மிகச்சிறப்பு..
    வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  4. மட்டற்ற மகிழ்ச்சி ஐயா! இன்னும் பல உயரிய விருதுகளால், தங்களது ஆய்வுரைகள் என்றும் நிலைக்க விரும்புகிறேன்

    ReplyDelete
  5. வாழ்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. பெளத்த மரபில் தங்களும் ந்தரா ந்தராசசமண மரபில் நண்பர் தில்லை கோவிந்தராசனும் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. தொடரட்டும் தங்கள் களப்பணி.

    ReplyDelete

Post a Comment