எழுச்சித்தமிழர் இலக்கிய விருது
விடுதலை கலை இலக்கியப்பேரவை 2025க்கான எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகளை அறிவித்திருந்தது. இதில் சிறந்த பௌத்த எழுத்திற்கான விருதினைப் பெற்றேன்.
இளவந்திகைத் திருவிழாவாகச் சிறப்பாக நடைபெற்ற, விருதுகள் வழங்கும் விழா 21 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 3.00 மணியளவில், சென்னை, தியாகராய நகர், சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது.
![]() |
நண்பர் முனைவர் மாதவனுடன் |
![]() |
திரு, திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை |
இவ்விருதிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த பேரவையின் மாநிலச் செயலாளர் திரு யாழன் ஆதி அவர்கள் உள்ளிட்ட தேர்வுக்குழுவினருக்கும், எழுச்சித்தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. இவ்விழாவில் விருதுகள் பெற்ற சக ஆளுமைகளுக்கு என் வாழ்த்துகள். பல துறைகளைச் சார்ந்த பெருமக்களையும், எழுத்தாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
நிகழ்விற்கு உடன் வந்த என் மனைவி திருமதி பாக்கியவதி, நண்பர் முனைவர் சு.மாதவன், குடும்ப நண்பர் திரு சரவணன், நிகழ்வில் கலந்துகொண்ட ஆர்வலர்களுக்கும், சமூக வலைதளங்களிலும், நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
நிகழ்வினைக் காண இணைப்புகள்:
Comments
Post a Comment