Posts

Showing posts from December, 2025

In search of imprints of Buddhism : Mangalam

Image
May 1998 From The Hindu of 8.5.1998  (10th century Buddha statue to get separate shrine )  I came to know about the prevalence of a Buddha statue in my study area. So far I had books and articles as source material for my research. This is the first time that a newspaper clippping became a source. From it I came to know that, according to historian Mr K.Sridharan, a 10th century CE Buddha was found in Aravandiamman temple in Mangalam, Musiri taluk, Trichy district of Tamil Nadu and a separate shrine was being built there for the Buddha statue. June 1998 After one month, I went to the All India Radio, Trichy, to record my talk entitled  Buddhism in Thanjavur district (in Tamil) . After the assignment, as I planned to go to Mangalam, I went to Musiri from Trichy.  It was noon. I enquired for the bus, I was informed that buses plying through Thatthayangarpettai and some buses to Mettuppalayam would go through Mangalam. In order to not to waste the time I had my meals t...

அடுத்த தலைமுறையினருக்கான வழிகாட்டி நூல் : அய்யம்பேட்டை என்.செல்வராஜ்

Image
தஞ்சாவூரில் உள்ள வரலாற்று அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் பா. ஜம்புலிங்கம். அவர், சோழ தேசத்தில் பௌத்தத்தின் எஞ்சிய சுவடுகள் தேடி, களப்பயணம் மேற்கொண்டு, கண்டறிந்த புத்தரின் திருமேனிகளை, நூலாக்கம் செய்து, அரிய பொக்கிஷமாக வழங்கி உள்ளார்.. தமிழ் கூறும் நல்லுலகிற்கு, "சோழ நாட்டில் பௌத்தம்" தந்த அறிஞர், பௌத்தத்தின் பொற்காலம், திக்கெட்டில் உள்ளோரையும் சென்றடைய வேண்டுமென்று, ஆங்கிலத்தில் வடித்துத் தந்துள்ள அற்புதமான நூல்... உயர்தரமான பேப்பரில், மௌன மொழி பேசிடும், புத்தர் பெருமானின், அரிதான புகைப்படங்களுடன், தகுந்த விளக்கங்களுடன், வரலாற்று உலகிற்கு வழங்கியுள்ளார்.... ஒரே ஆய்வாளர், தன்னுடைய படைப்பை, தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கி இருப்பது கூடுதல் சிறப்பு... அடுத்த தலைமுறையினர், இதன் தொடர்ச்சியாக, ஆய்வுகள் மேற்கொள்ள, வழிகாட்டும் நூலாகவும் இவை உள்ளன. வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், இல்ல நூலகத்தில், இவ்விரண்டு நூல்களும் உரிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை...... ------------------------------------------------------------------------------------------- நன்றி: திரு அய்யம்பேட்டை என...

வருங்கால ஆய்வாளர்களுக்கு முக்கியத் தரவு : ஜெயபால் இரத்தினம்

Image
உலகின் பழமையான ஆன்மீகப் பாதைகளில் ஒன்றான பௌத்தம், தமிழகத்தில் பொதுக்காலத்திற்கு முந்தைய இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் பரவத்தொடங்கி, பல நூற்றாண்டுகள் வரை உயர் செல்வாக்குடன் திகழ்ந்திருந்து, பின்னர் படிப்படியாக செல்வாக்குக் குறையத்தொடங்கி, பின்னர் சோழர்ஆட்சியில் புத்தெழுச்சி பெற்றது என்பதும், பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் செல்வாக்கிழந்தது என்பதும் ஆய்வாளர்கள் அளிக்கும் தகவல்கள். ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையுடனும், வாழ்வியல் நெறிகளை வலியுறுத்தும் இலக்குகளுடனும் செயல்பட்டு, நீண்ட நெடிய காலம் தமிழ் மண்ணில் நிலைபெற்றிருந்த பௌத்தம் ஆன்மீகம், தமிழ் மொழி மற்றும் பண்பாடு ஆகியப் பரப்புக்களில் பல அழியாத முத்திரைகளைப் பதித்துள்ளது. அது விட்டுச்சென்ற தடயங்கள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் புத்தர் பெருமான் சிலைகள். தமிழகத்தில் நிலவிய பௌத்தமதப் பரவலுக்கு சான்றளிக்கும் முக்கியத் தரவுகளில் ஒன்றாக விளங்குவது புத்தர் சிலைகள். சோழநாட்டுப் பகுதிகளில் காணக்கிடைக்கும் புத்தர் சிலைகள் குறித்த ஆய்வாக வெளிவந்திருக்கும் நூல் ‘சோழநாட்டில் பௌத்தம்’. நூலாசிரியர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் அவர்கள்...

தமிழ்ச் சமூகத்திற்கு அறிவுக்கொடை : திரு இரா.விஜயன்

Image
பௌத்தம் அது தோன்றிய காலத்திலேயேத் தமிழகத்தில் பரவத் தொடங்கிற்று. தமிழ் நிலம், தமிழ்ச்சமணம் என்ற வகைமையை உருவாக்கியது போன்றே, தமிழ்ப் பௌத்த  மரபு ஒன்றையும் ஒத்து உறழ்ந்து இங்கு உருவாக்கிற்று. தமிழ்க் காப்பிய மரபு அந்நிகழ்ச்சிப் போக்கின் பெரும் சான்றாய்த் திகழ்கிறது. குறிப்பாக சோழநாட்டில் அதன் தாக்கம் மிக வீரியமாய் இருந்தது. அத்தாக்கத்தின் அழியாச் சாட்சிகளாய்ச் சோழ நாட்டின் உள்ளொடுங்கிய கிராமங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெரும் புத்தர் கற்சிலைகள் நீடிக்கின்றன. முனைவர் பா. ஜம்புலிங்கம் தனது வாழ்நாள் பணியாக பல பௌத்தத் தலங்களையும், சிதறிக்கிடந்த சிறிய பெரிய புத்தர் சிலைகளையும் தளரா ஆய்வுவேட்கையோடுத் தேடிக் கண்டுபித்துத் தமிழ் சமூகத்திற்கு அறிவுக் கொடையாக அளித்துள்ளார். சோழ நாட்டில் பௌத்தம் என்ற அவரது நேரிய பெருநூலின் மேன்மையை உணர்ந்து போற்றித் தோழர் புது எழுத்து மனோன்மணி அவர்கள் தனது பதிப்புப் பணியின் சாதனைகளில் ஒன்றாக உயரிய வடிவமைப்புடன் துல்லியமான வண்ணப்படங்களுடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். சோழ நாட்டில் பௌத்தம், தமிழிலும் ஆங்கிலத்திலும், கெட்டி அட்டையுடன் பக்கத்துக்குப்பக்கம் உயர்...

ஆய்வுக்கு ஓய்வேது? : பேராசிரியர் இராம. குருநாதன்

Image
’சோழநாட்டில் பெளத்தம்’ நூலினைப் படித்து நெடுங்காலம் ஆயிற்று. பல்வேறு அலுவல்கள், பயணங்கள், கூட்டங்கள் எனக் காலம் கழிந்தது. இப்போதுதான் அந்நூல் பற்றி எழுதக் காலம் கனிந்தது. இருப்பினும் அலைபேசி வழியே தங்களின் நிகழ்வுகளைப் பார்த்துவருகிறேன். ஆய்வுக்கு ஓய்வேது? அலைகளுக்கும் காற்றுக்கும் ஓய்வுண்டா? தங்களின் ஆய்வுக்கும் தேடல் முயற்சிக்கும் ஓய்வேது?. இயங்கிக்கொண்டே இருப்பது உள்ளத்திற்கு உரமல்லவா! அது உடலுக்கும் உணர்வுக்கும் மகிழ்ச்சி அளிக்குமல்லவா? அந்த வகையில் இடைவிடாத முயற்சி தங்களுடையது. அதற்கென் வாழ்த்துகள். நூலில் நுழைந்ததுமே பதிப்புரையில் அரிய செய்திகளைக் குறிப்பிட்டிருப்பதும், தேடலில் பயணித்ததைத் தக்க வகையில் தந்திருப்பதும் பாராட்டுக்குரியவை. மிகவும் பழமையான மதங்களில் புத்த மதமும் ஒன்று. புத்தரின் சிந்தனைகள் தமிழகம் மட்டுமன்றி உலகெங்கும் பயணித்தவை. சங்க காலத்திலேயே புத்தர் சிந்தனைகள் இருந்துள்ளன என்பதற்குச் சங்க இலக்கியப்புலவர்களின் கருத்தோவியங்களே சான்று. சங்க காலத்திய புலவர்கள் சிலர் புத்தமதத்தையும் தழுவியிருந்தார்கள். ஒரு சொற்பொழிவுக்காக, இலங்கைக்கு நான் சென்றிருந்தபோது, நம்மூரில்...

போற்றத்தக்க முயற்சி : முனைவர் பா.மதுசூதனன்

Image
உலக மக்களை நல்வழியில் பண்படுத்தி அவர்களின் வாழ்வு சிறப்புற வழிநடத்தும் மகான்கள் அவதரித்த இப்புண்ணிய பூமியில், மனிதகுலம் சிறக்கவும் அவர்களின் வாழ்வு மேம்படவும், அவர்களது இன்னல்கள் களைந்தெறியவும் ஒரு அணையா ஜோதியாக அவதரித்தவர் மகான் கௌதம புத்தர் ஆவார். அத்தகைய மகான் தோற்றுவித்த புத்த சமயம் சோழநாட்டில் தொன்றுதொட்டு வளர்ந்து வந்ததாக பல வரலாற்றுச் செய்திகளை நான் படித்துள்ளேன். அதன் வழியில் நண்பர் முனைவர்.பா.ஜம்புலிங்கம் அவர்கள் ‘சோழநாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பில்  வழங்கியுள்ள அற்புதமானதொரு வரலாற்று ஆய்வு நூல் மிகவும் சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமிதம் அடைகிறேன். சைவம் வைணம் போன்ற சமயங்கள் தமிழகத்தில் தொன்றுதொட்டு வளர்வதற்கு முன்னர் பௌத்த மதம் பரவியிருந்த செய்திகள் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. சோழ நாட்டில் பௌத்தம் வளர்ந்ததற்கான குறிப்புகள் பல ஆய்வு நூல்கள் மூலமாக அறியப்பெறுகிறது. அவ்வழியில் நண்பர் ஜம்புலிங்கம் அவர்கள் எழுதிய இப்புத்தகம் சோழ நாட்டில் பௌத்தம் வளர்ந்த செய்திகள் போன்றவை அவரது ஆய்வுத்தேடல்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ...

வருங்கால ஆய்வு மாணவர்களுக்கான பாடம் : ந. பழநிதீபன்

Image
எனது நண்பர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றி, தனது கடின உழைப்பாலும் நேர்மையாலும் பணி உயர்வு பெற்று உதவிப் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றிருப்பவர் முனைவர் திரு. பா ஜம்புலிங்கம் அவர்கள். அவர் என் முகநூல் நண்பர் மட்டுமல்ல, நான் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது அலைபேசியில் உரையாடி மகிழும் அன்பரும் ஆவார். அவர் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் "சோழ நாட்டில் பௌத்தம்" என்கிற இந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஆவணமாகும். ஆசிரியர் குளிர்சாதன அறைக்குள் இருந்து, பல்வேறு புத்தகங்களை அருகில் வைத்துக் கொண்டு அவற்றிலிருந்து ஆங்காங்கே சில செய்திகளை உருவி உருவாக்கிய புத்தகம் அல்ல இது. இதன் ஒவ்வொரு பக்கத்திலும் நண்பரின் கடின உழைப்பும் அவரது நேர்மையும் அவரது வியர்வையும் நமக்கு வியப்பை ஏற்படுத்தி அன்னாரை அண்ணாந்து பார்க்க வைக்கும்! தனது கள ஆய்வின்போது சோழ நாட்டுப் பகுதிகளான தஞ்சாவூர், நாகப்பட்டினம் திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனது நேரடி கள ஆய்வின் வழியாக 19 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர்கள் சிலைகளையும் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனியைய...

பௌத்தக் கலைக் களஞ்சியம் : முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன்

Image
தமிழர் பண்பாட்டில் சிறந்து விளங்கும் கலைகளில் சிற்பக்கலை முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இக்கலையானது வேத ஆகமங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள் அடிப்படையில் பல்வேறு சமயங்களில் காணப்படுகின்ற இறை உருவங்களை வழங்க உருவானதாகும். முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜனுடன் நூலாசிரியர் மனித வடிவில் தோன்றி, மக்களைப் பண்படுத்தப் பல்வேறு ஒழுக்க நெறிகளைப் போதித்து இறை நிலையை அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மகாவீரரும், கௌதம புத்தரும் ஆவர். தமிழகத்தில் இன்றளவும் சமணத்தையும், பௌத்தத்தையும் பின்பற்றுபவர்கள் உள்ளனர்.  சைவ, வைணவ சமயங்கள் மறுமலர்ச்சி அடைவதற்கு முன்பாகச் சமணமும், பௌத்தமும் பரவியிருந்தன. நாளடைவில் அரசியல் மாற்றத்தால் அவை வீழ்ச்சியுற ஆரம்பித்தாலும் அவற்றைத் தொடர்பவர்கள் ஆங்காங்கே வாழ்ந்துள்ளனர். அவர்கள் தனிக்கோயில்கள் எடுப்பித்தும், தொழில் சார்ந்தவர்கள் தாம் செல்லும் இடங்களில் தனியாகச் சிற்பங்களை வைத்தும் வழிபட ஆரம்பித்துள்ளனர். இவ்வழிபாட்டில் பௌத்த சமயத்தினைச் சோழ அரச மரபினர் போற்றி வளர்த்த விதம் குறிப்பிடத்தக்கதாகும். அதற்குச் சான்றாக முதலாம் இராஜராஜசோழன் காலத்து நாகப்பட்டினப் புத்த விகார...

In search of imprints of Buddhism : Ayyampet

Image
After registering for research, among others, I started to search for a new Nagapattinam Buddha bronze in the study area. I attempted to find one such bronze since 1993. But only in 1999, I had the chance of seeing it. This is the second finding, the first one being the moustach Buddha.   Since 1856 more than 350 Buddha bronzes were unearthed, from Nagapattinam.  They are exhibited in many museums in India and abroad. During the field study carried out alongwith Mr Ayyampet Selvaraj, we found a new Nagapattinam Buddha bronze sculpture in Ayyampet, Thanjavur district. The family members who came from Nagapattinam and settled at Ayyampet worship the Buddha as Munisvaran, for the past three generations. It is of 9 cm height.  The left hand rests on the lap while the right hand is in bhumisparsa or earth-touching attitude. The face, body, and the upper garment are not clear. The iconographical feature of this image resembled one of the Nagapattinam Buddha bronzes exhibited ...