போற்றத்தக்க முயற்சி : முனைவர் பா.மதுசூதனன்

உலக மக்களை நல்வழியில் பண்படுத்தி அவர்களின் வாழ்வு சிறப்புற வழிநடத்தும் மகான்கள் அவதரித்த இப்புண்ணிய பூமியில், மனிதகுலம் சிறக்கவும் அவர்களின் வாழ்வு மேம்படவும், அவர்களது இன்னல்கள் களைந்தெறியவும் ஒரு அணையா ஜோதியாக அவதரித்தவர் மகான் கௌதம புத்தர் ஆவார்.

அத்தகைய மகான் தோற்றுவித்த புத்த சமயம் சோழநாட்டில் தொன்றுதொட்டு வளர்ந்து வந்ததாக பல வரலாற்றுச் செய்திகளை நான் படித்துள்ளேன். அதன் வழியில் நண்பர் முனைவர்.பா.ஜம்புலிங்கம் அவர்கள் ‘சோழநாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பில்  வழங்கியுள்ள அற்புதமானதொரு வரலாற்று ஆய்வு நூல் மிகவும் சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கும் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமிதம் அடைகிறேன்.

சைவம் வைணம் போன்ற சமயங்கள் தமிழகத்தில் தொன்றுதொட்டு வளர்வதற்கு முன்னர் பௌத்த மதம் பரவியிருந்த செய்திகள் வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது. சோழ நாட்டில் பௌத்தம் வளர்ந்ததற்கான குறிப்புகள் பல ஆய்வு நூல்கள் மூலமாக அறியப்பெறுகிறது.

அவ்வழியில் நண்பர் ஜம்புலிங்கம் அவர்கள் எழுதிய இப்புத்தகம் சோழ நாட்டில் பௌத்தம் வளர்ந்த செய்திகள் போன்றவை அவரது ஆய்வுத்தேடல்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாய்விற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் போற்றத்தகுந்தவையாக உள்ளன.

1982 முதற்கொண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவருடன் பணியாற்றிய காலகட்டங்களில் அவர் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளை நான் நன்கறிவேன். மேலும் மற்றவர்களும் நூல்களை வெளியிடவேண்டும் என்ற உயரிய நோக்கத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது அவரது சிறந்த குணத்தைக் காட்டுகின்றது. ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ தொடர்பான என்னுடைய நூலினை வெளிக்கொணர்வதற்கு அவர் என்னிடம் காட்டிய உந்துதலும் அதற்காக அவரிடமிருந்து பெறப்பட்ட அறிவுரைகளையும் இந்நேரத்தில் எண்ணிப் பகிர்வதில் நான் அகமகிழ்றேன்.

தொடர்ந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவரும் அவர் வரும் காலங்களில் மேலும் இதுபோன்ற ஆய்வு நூல்களை வெளிக்கொணர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அன்பன்,
பா.மதுசூதனன்
கும்பகோணம்.

-------------------------------------------------------------------------------------------
நன்றி: முனைவர் பா. மதுசூதனன்
-------------------------------------------------------------------------------------------

நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள:


Comments