Posts

Showing posts from 2020

பொன்னி நாட்டில் பௌத்தம் : புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம்

Image
புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம்  தமிழ்ச் சிந்தனையில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒரு வார தொடர்ப்பொழிவினை (121-126)  ஏற்பாடு செய்திருந்தது. அதில் (122ஆவது நிகழ்வில்) கலந்துகொண்டு, 16 நவம்பர் 2020, மாலை 6.30-7.30 அன்று பொன்னி நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அறிஞர்களோடும், நண்பர்களோடும், ஆய்வாளர்களோடும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பினைத் தந்த மின் முற்றத்திற்கும், நிகழ்வினைத் தொகுத்த நண்பர் திரு மாதவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு : பொன்னி நாட்டில் பௌத்தம் பிற யுட்யூப் பதிவுகள் 1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/ பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை  | வேர்கள்  | B Jambulingam speech/30.11.2018  2.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/ சோழ நாட்டில் பௌத்த களப்பணி  முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020) 3.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம்  களப்பணியில் சமணம் /9.8.2020 4. விக்க...

இணைவோம் இணைய வழியால் : முக்குடை

Image
அகிம்சை நடை நடத்துகின்ற “இணைவோம் இணைய வழியால்” நிகழ்வில் 9 ஆகஸ்டு 2020 மாலை 3.00 மணியளவில் ஆற்றிய பொழிவின் எழுத்து வடிவம், செப்டம்பர் 2020 முக்குடை இதழில் (மலர் 47, இதழ் 3, செப்டம்பர் 2020, பக்.15-17) வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட பேராசிரியர் கனக.அஜிததாஸ் அவர்களுக்கும், இதழ்க்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  யுட்யூப் பதிவுகள் 1.வேர்கள் மாதாந்திரச் சொற்பொழிவு/ பொன்னி நாட்டில் பௌத்தம் - ஜம்புலிங்கம் சிறப்புரை  | வேர்கள்  | B Jambulingam speech/30.11.2018  2.திரிபீடக தமிழ் நிறுவனம் – சென்னை ‘மானுடம் தேடும் அறம்’ உரை 1/ சோழ நாட்டில் பௌத்த களப்பணி  முனைவர் ஜம்புலிங்கம்/27.8.2020 (உரை 27.6.2020) 3.அகிம்சை நடையின் இணைவோம் இணைய வழியால் 4/முனைவர் ஜம்புலிங்கம்  களப்பணியில் சமணம் /9.8.2020 4. விக்கிப்பீடியாவில்தமிழகக் கோவில்கள் - அனுபவக் கட்டுரைகள் | GCHRG WEBINARS 2020| PART-3 | Webinar 8 /6.9.2020 5. புதுவைத் தமிழாசிரியர்கள்-மின்முற்றம்-122 “பொன்னி நாட்டில் பௌத்தம்”  முனைவர் ஜம்புலிங்கம்/16.11.2020 1 டிசம்பர் 2020இல் மேம்படுத...

பௌத்த சுவட்டைத் தேடி : சீதக்கமங்கலம்

Image
2002ஆம் ஆண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன்  என்னிடம்  தமிழகத்தில் காணப்படுகின்ற புத்தர் சிலையின் அமைப்பைப் பற்றி விசாரித்தார்.  அவர் தத்துவத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.  அவரைப் போலவே துறை சார்ந்த பலர் அவ்வப்போது நான் பார்க்கின்ற, பார்த்த புத்தர் சிலைகளை பற்றி பேசுவது வழக்கம். தொடர்புடைய துறைத்தலைவர்கள் கூட என்னிடம் இவ்வாறு கேட்டதுண்டு. தொலைபேசியில் ஆர்வமாகப் பேசுவார்கள். சிலை இருக்கும் இடம், அமைப்பு, மற்றும் தொடர்புடைய விவரங்களைக் கேட்பார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அவர்களிடம் ஆய்வு செய்யும் மாணவர்கள் மூலமாக மறைமுகமாகக் கேட்பதும் உண்டு. அவ்வாறான பல நண்பர்களை என் ஆய்வின்போது சந்தித்துள்ளேன்.   திரு கோவிந்தராஜன் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை பின்னர் தான் அறிந்தேன். நான் பார்த்த புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்த வரை கூறினேன். தொடர்ந்து சில நாள் கழித்து அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்: புத்தர் சிலையின் தலையை எ...

களப்பணியில் சமணம் : அகிம்சை நடை

Image
அகிம்சை நடை நடத்துகின்ற “இணைவோம் இணைய வழியால்” நிகழ்வில் 9 ஆகஸ்டு 2020 மாலை 3.00 மணியளவில் களப்பணியில் சமணம்  என்ற தலைப்பில் ஆற்றிய பொழிவின் சுருக்கம். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளைக் கொண்ட சோழ நாட்டில் பௌத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது சுமார் 70 இடங்களில் புத்தர் சிலைகளையும், சில இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் காணமுடிந்தது.  பள்ளிக்காலம் முதல் சொந்த ஊரான கும்பகோணத்தில் பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களைப் பார்த்துவரும்போது வித்தியாசமாக அங்கே காணப்பட்ட ஜீனாலயம், பல இடங்களில் புத்தரை சமணர் என்று அழைக்கப்படல் உள்ளிட்ட பல சூழல்கள் சமண தீர்த்தங்கரர் சிலைகளை ஆவணப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் (1998), திருவாரூர் மாவட்டம் தப்ளாம்புலியூர் (1998), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி (1999), திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் அருகில் (1999), தஞ்சாவூர் (1999), பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் (1999), தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகில் அடஞ்சூர் (2003), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் செர...

களப்பணி ஆய்வுகள் : மணற்கேணி ஆய்விதழ்

Image
1993இல் தொடங்கப்பட்ட களப்பணியின்போது ஒரு முறை கிடைத்த அனுபவம் வித்தியாசமானது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி என்று நினைவு. புத்தர் சிலை இருப்பதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பயணம். ஆட்களே இல்லாத காட்டுப்பகுதி போன்ற இடமாக இருந்தது. ஆங்காங்கே சில மரங்கள். ஒருவரும் கண்ணுக்குத் தென்படவில்லை. சரியான உச்சி வெயில். எங்காவது புத்தர் சிலை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றேன். 1970களில்  எங்கள் ஆத்தா, “உச்சுறுமும் நேரத்திலே கொல்லப்பக்கம் போகாதீங்க” என்று சொன்னது நினைவிற்கு வந்தது. சற்றே நடுக்கம். ஒருவர் வருவது போல இருந்தது. அருகில் வந்ததும் அவர், “உங்களுக்கு பூ வாசம் தெரிகிறதா?” என்றார். “இல்லை” என்றதும், “உங்களை உரசிக்கொண்டு ரயில் போவது போல இருந்ததா?” என்றார். எனக்கு பயம் அதிகமாகவே குலதெய்வம் முதல் தெரிந்த அனைத்து சாமிகளின் பெயர்களையும் உச்சரித்துக்கொண்டே நடந்தேன். மறுபடியும் தொடர்ந்து வந்த அவர், “உங்களுக்கு ஏதாவது ஆனால் அதோ அருகில் என் வீடு உள்ளது. வாருங்கள்” என்றார். “பேய், பிசாசு அடிப்பதைப் போலக் கூறுகின்றீர்களே? சுய நினைவில் இருந்தால்தான...

சோழ நாட்டில் பௌத்தம் : திரிபீடக தமிழ் நிறுவனம்

Image
27 ஜுன் 2020ஆம் நாளன்று, சென்னை திரிபீடகத் தமிழ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற தம்ம உரை-1 பகுதியில்,  சோழ நாட்டில் பௌத்தம்  என்ற தலைப்பில் என்னுடைய ஆய்வு மற்றும் களப்பணி தொடர்பாக உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். ஆய்வினைத் தெரிவு செய்த சூழல், தலைப்பினைத் தேர்ந்தெடுத்த முறை, முதலில் ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டதற்கான காரணம், களப்பணியின்போது 17 புத்தர் சிலைகளையும், 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடு கண்டெடுத்தது உள்ளிட்டவை பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். இணைய வழியாக நேரடியாக முதன்முதலாக இவ்வாறாக உரையாற்றியது சற்றே வித்தியாசமாக இருந்தது. தொல்லியல் அறிஞர் திரு ஸ்ரீதரன், மதுரை அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு மருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   வாய்ப்பினைத் தந்த திரிபீடக தமிழ் நிறுவனத்திற்கும் திரு ஈ.அன்பன், திரு ஜெயபாலன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கும், உரையினைக் கேட்ட நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...

சோழ நாட்டில் பௌத்தம் : 50,000 பக்கப் பார்வைகள்

Image
           கடந்த 10 ஆண்டுகளாக எழுதி வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவின் மூன்று முதன்மைப்பக்கங்கள் ஒவ்வொன்றையும் சுமார் 50,000 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். ஆய்வு தொடர்பான இந்த வலைப்பூவிற்கு ஆதரவு தருகின்ற நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. முதலில் சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பாக மட்டுமே எழுத ஆரம்பித்தேன். பின்னர் நண்பர்கள் கேட்டுக்கொண்டபடி பௌத்தம் தொடர்பான பொதுவான பதிவுகளையும், ஆங்கிலக்கட்டுரைகளையும், பௌத்தம் தொடர்பான நூல்களைப் பற்றியும்   எழுதி வருகிறேன்.   முக்கியமான பதிவுகளை தமிழ் மொழி அறியாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிவருகிறேன். அந்த வகையில் பிற ஆங்கில நூல்களிலும், இதழ்களிலும் என்னுடைய இந்த வலைப்பூவிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இவ்வலைப்பூவின் கீழ்க்கண்ட பதிவுகள் 50,000க்கும் மேலான பக்கப்பார்வையைக் கொண்டுள்ளன. மேற்கோள் பதிவுகள் மூன்றாண்டுகளுக்குள் 54,000க்கும் மேற்பட்ட பக்க...

தஞ்சை பௌத்தச் சுவடுகள் : தஞ்சாவூர் சுழற்சங்கம்

Image
10 மார்ச் 2020 அன்று தஞ்சாவூர் சுழற்சங்கத்தில் (Rotary Club of Thanjavur) தஞ்சையில் பௌத்தச்சுவடுகள் என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இடமிருந்து வலமாக : தலைவர் எம்.தினேஷ்குமார், மகேந்திரன், ஜம்புலிங்கம், சி.குணசேகரன், செயலர் கே.விசாகன்    இடமிருந்து வலமாக : ஜம்புலிங்கம், தலைவர் எம்.தினேஷ்குமார், குணசேகரன், ஆஸ்திரிய நாட்டு சுழற்சங்க உறுப்பினர் ஜான் அடால்ப் கோகஸ், செயலர் கே.விசாகன் தத்துவம், இலக்கியம் என்பதற்கு மாறாக களப்பணியில் அடியெடுத்து வைக்க முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கருத்து கூறியது. 1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலைகள், காட்சிப்பேழையில் உள்ள நாகப்பட்டின புத்தச்செப்புத்திருமேனியைக் கண்டது. பல சிலைகளை ஆரம்பத்தில் புத்தரா சமணரா என்று அறிந்துகொள்ள இயலா நிலையில் சிரமப்பட்டது. அய்யம்பேட்டையில் வழிபாட்டில் இருந்த ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்...

சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் : இந்து தமிழ் திசை

Image
5 பிப்ரவரி 2020 ஆம் நாளன்று  தஞ்சாவூரில் நடைபெற்ற பெரிய கோயில் குடமுழுக்கு  நினைவாக, இந்து  தமிழ் திசை இதழ் வெளியிட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா இணைப்பில் வெளியான சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் என்ற என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன். 1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சோழ நாட்டில் பௌத்தம் என்ற ஆய்வு தொடர்பாக புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோழர் காலத்தில் சமணம் செழித்திருந்ததை எடுத்துரைக்கும் சான்றுகளாக இச்சிலைகள் உள்ளன.   கி.பி.10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலைகள் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிலைகளாகும்.     ஜெயங்கொண்டம் (1998), காரியாங்குடி (1998), ஆலங்குடிப்பட்டி (1999), செங்கங்காடு (1999), தஞ்சாவூர் (1999),  பெருமத்தூர் (1999), அடஞ்சூர் (2003), செருமாக்கநல்லூர்  (2009), சுரைக்குடிப்பட்டி (2010), பஞ்சநதிக்குளம் (2010),  தோலி (2011),  கவிநாடு ...