Posts

நூல் மதிப்புரை/Book review

Image
அண்டனூர் சுரா/ புதிய புத்தகம் பேசுது அன்பன், இ. அய்யம்பேட்டை செல்வராஜ் / தமிழ் அமுது அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி/ புக் டே இந்தியக் குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன் இந்து தமிழ் திசை எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளம் கந்தசாமி, சோ.ந. கரந்தை ஜெயக்குமார் கனக. அஜிததாஸ்/ முக்குடை குடவாயில் பாலசுப்ரமணியன் குட்ரீட்ஸ் தளம் குருநாதன், இராம. சக்திவேல், பா./ கொலுசு சக்திவேல், பா./ தமிழ் நெஞ்சம் சந்திரசேகர், வே. / போதிமுரசு சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி (CIBF) 2023, 2025 சோமு. டி.வி. திருநாவுக்கரசு, ப. தில்லை கோவிந்தராஜன், கோ. தினமணி / இந்த வாரம் கலாரசிகன் தினமணி/ நூல் அரங்கம் தினமலர் நெடுஞ்செழியன், தி. பழநிதீபன், ந. மணி. மாறன்/தமிழ்ப் பல்கலைக்கழகம் மணி. மாறன்/மக்கள் சிந்தனைப் பேரவை மதுசூதனன், பா. மாதவன், சு./செம்மொழித் தமிழறம் மார்க்ஸ், அ./ மானுடம் ரவிக்குமார், க. விக்கிப்பீடியா விச்வநாதன், நா./ பேசும் புதிய சக்தி விஜயன். இரா/சிம்ளி புத்தக அங்காடி ஜெயபாலன், க. ஜெயபால் இரத்தினம் ஜெயபால், வீ. ஜெயபிரகாஷ், இ. Arangamallika Ayyampet N.Selvaraj   Deivanayagam, G. Federal Federal Jayab...

தஞ்சைப் பகுதியில் நூல் பிறக்கக் காரணமாயிருந்த மாமனிதர் திரு ச.அப்பாண்டைராஜ்

Image
தஞ்சாவூர் கோட்டை அமரர் திரு. சக்கரவர்த்தி முதலியார் இளைய மகன் அன்பகம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற, தஞ்சாவூர் ஜினாலயத்தின் அறங்காவலரும், ஏடகம் அமைப்பின் பெரும் புரவலரும் பொறுப்பாளருமான திரு அப்பாண்டைராஜ் ஐயா அவர்கள் இறந்த செய்தி எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. அவருடன் பழகிய அனைவருமே அவருடைய மென்மையான பேச்சு, கனிவான குணம், பழகும் இனிய பாங்கு போன்றவற்றை அறிவார்கள். அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகுவார். ஒருமுறை அவரிடம் பேசியவர்கூட அவரை என்றும் மறக்கமாட்டார்கள். அவர் ஏடகம் அமைப்பிற்கும், பழகிய என்னைப் போன்ற பலருக்கும் ஒரு பக்கபலமாக இருந்துவந்துள்ளார். சுறுசுறுப்பினையும், எப்பணியையும் ஏற்கும் துணிவையும் அவரிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். வயதுவேறுபாடு பார்க்காமல் களத்தில் இறங்கி உழைக்கும் பெருமகனார். பணியில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் அவர் தந்த ஊக்கமானது எங்களை புத்துணர்ச்சியோடு முன்னெடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருந்தது. எந்தவொரு சிரமமான சூழலையும் மாறாப்புன்னகையோடு எதிர்கொள்வார். நடக்கமுடியாது, சிரமம் என்று நாங்கள் நினைத்த பல பொறுப்புகளை தானே முன்னின்று நடத்திச் ச...

கோயில்களில் புத்தர் சிலைகள்

Image
  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன. இவை தவிர சுமார் 10 இடங்களில் பிற சிலைகளை புத்தர் சிலைகள் என்று கூறிவருகின்றனர். இப்பகுதியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சில சிலைகள் தலையின்றி உள்ளன. சில சிலைகளின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. 1993 முதல் சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பணியின்போது புத்தர் சிலைகளை புத்தர் கோயிலிலும், சைவ, சமண மற்றும் அய்யனார் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகிலும் காணமுடிந்தது. அருந்தவபுரம் தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் அருகில் திருக்கோயில்பத்தில் உள்ள சிவன் கோயிலின் திருச்சுற்றில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை உள்ளது. அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக...

On foot and Hercules cycles: In search of Buddha in the Chola country

Image
In the photo caption of Manalur Buddha, the word 'Kerala' should be read as 'Tamil Nadu', in the article . Relevant links: On foot and Hercules cycles... On foot and Hercules cycles... ------------------------------------------------------------------------------------------- Thanks: MT Saju / The Federal , 2 January 2024 ------------------------------------------------------------------------------------------- Updated on 7.1.2026.

அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்: முனைவர் க.ஜெயபாலன்

Image
அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்... சமகாலத் தமிழ் அறிவுலகில் பௌத்தம் குறித்த ஆய்வுகளில் புத்தபகவன் சிலைகள் சார்ந்து கள ஆய்வை மேற்கொண்டு பல புதிய ஆய்வுத்தடங்களைப் பதித்து வருவதில் மிக முக்கியமானவராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள். அதிகமாக எழுத்துப்பணிகளை மேற்கொள்ளும் சிலர் கள ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. கள ஆய்வுகளை மேற்கொள்ளும் சிலர் எழுத்தை விரும்புவதில்லை. ஆய்வையும் மேற்கொண்டு அதே நேரம் நிறைவாக எழுதுவதிலும் ஆழமாக ஆய்வுத்துறையில் பயணிப்பதில் அழுத்தமான முத்திரையை ஐயா முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் பதித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வினை மனதில் தேக்கி வைத்து அப்பொருள் தொடர்பாகவே தொடர்ந்து பயணித்து புதிய புதிய செய்திகளை கண்டறிந்து அவர் உருவாக்கிய ஒரு செம்பதிப்பான நூல் என்று "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்தியாவின் நிலப்பரப்பு பெரும் பகுதியாக உள்ளதாலும், பல்வேறு மொழிகள் பண்பாடுகள் கொண்ட பகுதியாகவும் உள்ளதாலும், இந்தியாவைத் துணைக்கண்டம் என்று பல...