Posts

பௌத்த சுவட்டைத் தேடி : காஜாமலை

Image
7 அக்டோபர் 2018 தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளரான திரு அதிரடி அன்பழகன் (ஆசிரியர், பெரியார் தொடக்கப்பள்ளி, பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகம், காஜாமலை, திருச்சி) என்னை அலுவலகத்தில் சந்தித்து தான் பணியாற்றுகின்ற இடத்தில் ஒரு புத்தர் சிலை உள்ளதாகக் கூறினார். உடன் அங்கு களப்பணி மேற்கொள்ள திட்டமிட்டு, வாய்ப்பிருப்பின் அந்த புத்தர் சிலையின் புகைப்படத்தினைக் கேட்டிருந்தேன். 15 அக்டோபர் 2018 திருச்சிக்குச் செல்ல திட்டமிட்டோம். அவர் அந்த புத்தர் சிலையின் புகைப்படத்தைக் காண்பித்தார். படத்தைப் பார்த்து உறுதி செய்தபின் பயணத்தை மேற்கொண்டோம். காஜாமலை பகுதியிலுள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் அந்தப் புத்தர் சிலை இருந்தது. 72 செமீ உயரமுள்ள அச்சிலையின் தலையில் தீச்சுடர் உடைந்திருந்தது. நீண்டு வளர்ந்த காதுகள், மேலாடை, நெற்றிக்குறி, கையில் தர்மசக்கரக்குறி ஆகியவற்றுடன் அச்சிலை இருந்தது. வாய்க்கால் வெட்ட குழி தோண்டும்போது சிலை கிடைத்ததாகக் கூறினர். தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர் உதவியுடன் ஒரு புத்தர் சிலையைக் கண்டது மறக்கமுடி...

சமண சுவட்டைத் தேடி: ஜெயங்கொண்டம்

Image
டிசம்பர் 1998 என் முனைவர் பட்ட ஆய்விற்காக ( சோழ நாட்டில் பௌத்தம் , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999) டிசம்பர் 1998இல் ஜெயங்கொண்டத்தில் உள்ள புத்தர் சிலையைக்காணச் சென்றபோது சிறிய மேடையில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. அப்போது புகைப்படக்கருவியை எடுத்துச்செல்லாததால் புகைப்படம் எடுக்காமல் திரும்பினேன். அடுத்த களப்பணியின்போது அந்த தீர்த்தங்கரர் சிலையை அவ்விடத்தில் காணவில்லை . மார்ச் 2022 அண்மையில் நாளிதழில் (23 ஆண்டுகளுக்குப் பிறகு மகாவீரர் சிலையை மீட்ட இந்தியதொல்லியல் துறையினர், தினமணி , திருச்சி பதிப்பு, 15 மார்ச் 2022, ப.12) வெளியான செய்தியைப்பார்த்ததும் முன்னர் பார்த்த சிலை அதுவாக இருக்குமோ என்ற ஐயம் எழுந்தது. அதனை உறுதி செய்வதற்காக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தமிழ்நாட்டு சமணத்தளங்கள் குறுந்தகட்டினை நோக்கியபோது அச்சிலை இதுவென்பதை அறியமுடிந்தது. ------------------------------------------------------------------------------------------- நன்றி: தினமணி ,  புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் -----...

Quote in Inmathi article

Image
My comments in the article entitled "World-class tourism? Even basic facilities lacking in Jain, Buddhist sites in TN" (M.T.Saju, Inmathi , 22 March 2022) The recent TN budget promised to make Jain, Buddhist religious sites in Tamil Nadu world-class tourist centers. These sites now have poor access, have little or no facilities. Jainism was once popular across today’s Tamil Nadu. The abandoned and neglected Jain monuments across the state stand testimony to it. In 2018, two Jain scholars published a guide to 128 Jain temples and monuments in the state. Prepared by scholars K Ajithadoss and Rajendra Prasad, the  “Tamil Nadu Digamber Jain Temple Tour Guide”  had basic details about the temples and how to plan a visit to them. Lack of awareness among the Jains about the sites was the reason that provoked the scholars to bring out the guide. There are more than 130 Jain monuments and temples across Tamil Nadu, but 80% of them face serious threats due to vandalism and lack of care...

Buddhist Monuments in the Chola's country : Principal Millar Endowment Lecture 2021-22

Image
(அழைப்பிதழில் 2021 என்றுள்ளது) 9 மார்ச் 2022இல்  சென்னைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடத்திய முதல்வர் மில்லர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் கலந்துகொண்டு பொழிவினை நிகழ்த்தினேன்.  இணையவழி நடைபெற்ற இப்பொழிவின் சுருக்கத்தைப் பகிர்கிறேன்.   சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன. அவை பெரும்பாலும் 10 முதல் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். அவற்றிலும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகளே அதிகம். நின்ற நிலையில் உள்ள சிலைகள் மிகவும் குறைவே. புத்தர் சிலைகள் தமிழ்நாட்டு அருங்காட்சியகங்களிலும், பொதுவிடங்களிலும் உள்ளன. சிலைகளில் சில தலையின்றி உள்ளன. சிலவற்றின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. சில இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. புத்தரைப் பல்வேறு பெயர்களிட்டு அழைக்கின்றனர். புத்தமங்கலத்திலும், பெருஞ்சேரியிலும் புத்தர் கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் புத்தர் சிலைகள் வழிபாட்டில் உள்ளன. பூம்புகாரில் விகாரையின் எச்சங்கள் இன்னும் உள்ளன.  நாகப்பட்டின விகாரை இருந்ததற்கான எச்சத்தைக் காணமுடியவில்லை. நாகப்பட்டினத்தில் விகாரை இருந்ததாகக் கூற...

அருமொழி விருது 2021

Image
வரலாற்றுத்துறையில் சிறப்பான பங்காற்றி வருபவர்களை ஊக்கமூட்டும் வகையில் சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் பேரரசர் இராஜராஜர் பெயரால் அருமொழி விருது என்ற விருதினை வழங்கி கௌரவிக்கின்றது. அவ்வகையில் இந்த ஆண்டு வரலாற்று இளம் ஆய்வாளர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர். களப்பணியாளர். வரலாற்றுப்புதினங்கள், வரலாற்று ஆய்வு நூல்கள், வரலாற்றுக் கண்டுபிடிப்புகள், கட்டிடக்கலை, சிற்பக்கலை, வரலாற்றுக்குழு, வரலாற்று இணையதளம், தேவாரத்திருமுறை, சமண பௌத்த ஆய்வு, தமிழ் மரபு, வரலாற்று புகைப்படக்கலைஞர், வரலாற்றுப் பணியில் வாழ்நாள் சாதனையாளர் என்று பல பிரிவுகளில் 36 விருதுகளை வழங்கியது. 2021ஆம் ஆண்டிற்கான அருமொழி விருதினை பௌத்த மரபு ஆய்வாளர் என்ற பிரிவில் இச்சங்கம் எனக்கு வழங்கியுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 26 டிசம்பர் 2021இல் தஞ்சாவூர் அருகில் உள்ள மானாங்கோரையில் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினைப் பெற்றேன். அருமொழி விருது, 2021 சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கத்தின் தலைவர் திரு என். செல்வராஜ் தலைமையுரையாற்றினார்.  சிறப்பு விருந்தினர்களாக ...