Posts

அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) : பட்டுக்கோட்டை குமாரவேல்

Image
நான் படித்த நூல்களில் ஒன்று அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) . 104 காட்சிகளைக் கொண்ட வரலாற்று நாடகமாக உள்ள இந்நூலில் புத்தரது வரலாற்றை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் பட்டுக்கோட்டை குமாரவேல். நாடகப்பாத்திரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளவிதம், ஒவ்வொரு காட்சியையும் அமைத்துள்ள முறை, நிகழ்வுகளை மனதில் பதியும்வகையில் தந்துள்ள பாங்கு போன்றவை மிகவும் சிறப்பாக இந்நூலில் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த இந்நூலை அண்மையில் மறுபடியும் படித்தேன். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அவ்வரலாற்று நிகழ்வை நாடமாக்கித் தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி, அந்நூலை வாசிப்போம், வாருங்கள். காட்சி 7 (இடம் : அரண்மனை / மன்னர், அரசி, அந்தணர்கள்) சுத்தோதனர் : ஜோதிட வல்லுநர்களே...இளவரசனின் ஜாதகம் பார்த்து பலனைச் சொல்லி இந்த நாட்டு இளவரசருக்கு நீங்கள் பெயரிடவேண்டும். அந்தணர்1 : இளவரசனுக்கு சித்தார்த்தன் என்று பெயரிடுங்கள். அந்தணர்2 : குழந்தையின்னி வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். அந்தணர்3 : குழந்தை இளவரசானதும் அவர் நாட்டம் அரசியலில் இருந்தால் பெரிய சக்கரவர்த்தியாக வாழ்வார...

புத்தரைத் தேடி....!

Image
எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும், மரத்தடிகளிலும், தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து சிதைந்து கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்து கொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கரை இருக்கிறது;  ஆதாயம் இருக்கிறது? ! தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார் ; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள் அட அப்படியா! என வாய் பிளந்துவிடு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள். முனைவர் பா.ஜம்புலிங்கமும் அப்படித்தான். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல் சோழ நாட்டில் பௌத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார். ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு...

Tracing footprints of Buddhism in Chola country

Image
------------------------------------------------------------------------------------------- Tracing footprints of Buddhism in Chola country B Jambulingam tells CE about his research on which led him to find at least 57 ancient Buddha statues in 10 districts of Tamil Nadu. by N.Ramesh Thanjavur:  B.Jambulingam (56), who has been working as an office Superintendent of Tamil University, an ardent Saivite, whose search for Buddhism in Chola Country led him to identify as many as 67 ancient Buddha statues made of granite in 10 districts. Of these, most of the statues were found in eight districts which could be called the Chola country. Reminiscing his foray into academic research, while still working as an administrator, Jambulingam said one of the Vice-Chancellor of Tamil University helped the non-academic staff to pursue their academic interests. “When I registered for MPhil at  Madurai   Kamaraj   University , I wanted to do research ...

தமிழர் வழிபாடு : முனீஸ்வர புத்தர்

Image
அரண்மனையைத் துறந்தவர்...துறவறம் பூண்டவர இளவரசர் கௌதம புத்தர். அவரது பௌத்த மதம் ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. அவருடைய சிலைகளை தேடுவதை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வேள்வியாக செய்து வருகிறார், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் ஜம்புலிங்கம். அவரது அனுபவங்கள்: "நான் 'எம்ஃபில்' பட்டத்துக்காக கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பினேன். ஆனால், ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தது. தமிழில் படித்து, ஆங்கிலத்தில் புரிந்துகொண்டு, எழுதுவது சிரமம் என்பதால் 'தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்தேன். முதலில், தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் போய்ப் பார்த்தேன். அவை தொடர்பான விவரங்களையும் நூல்களையும் படித்து....சிலைகள் காணப்பட்ட இடங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகளை சேகரித்தேன். பின்னர், நேரம் கிடைத்தபோது அந்தந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். இந்த மாவட்டத்தில் பெரும்பாலான புத்தர் சிலைகள்...அமர்ந்த நிலையில் அல்லது தியான கோலத்தில் உள்ளன. நின்றப...

சமண சுவட்டைத் தேடி: நாட்டாணி

Image
மணலூரில்   கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றி  எழுதியிருந்ததைக் கண்ட தஞ்சாவூர் அருகேயுள்ள நாட்டாணி கிராமத்தைச் சேர்ந்த  விஜயகுமார் என்பவர் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி. மாறனிடம் தன் ஊரில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறியிருந்தார். அச்சிலையைக் காண்பதற்கான நாளை எதிர்பார்த்தோம்.   14 பிப்ரவரி 2015  காலை 10.00 தஞ்சாவூரிலிருந்து நானும் மணி மாறனும் நாட்டாணி சென்றோம். செல்லும்போதே மனதுள் ஒரு எண்ணம். சுமார் கால் நூற்றாண்டாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஆய்வில் இவ்வாறாக ஒரு புத்தர் சிலையைப் பற்றிய நாளிதழ் செய்தி வந்த ஓரிரு நாள்களிலேயே மற்றொரு சிலையைப் பார்க்கச் செலவது இதுவே முதல் முறை. நாட்டாணியை அடைந்ததும் நண்பர் விஜயகுமாரைத் தொலைபேசியில் மணி.மாறன் தொடர்புகொண்டார். அவர் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார். அவருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நாட்டாணியைச் சேர்ந்த நண்பர்கள் வந்தனர்.  அவர்களுடன் சிலை இருக்கும் இடத்தினைப் பற்றி விசாரித்தோம். பேசிக்கொண்டே, சிலையைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும் பாதை முழுக்க முழுக்க முட்கள் அடர்ந்...