அறிவுப்பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்) : பட்டுக்கோட்டை குமாரவேல்
நான் படித்த நூல்களில் ஒன்று அறிவுப்பேரொளி புத்தர் பெருமான். 104 காட்சிகளைக் கொண்ட வரலாற்று நாடகமாக உள்ள இந்நூலில் புத்தரது வரலாற்றை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் பட்டுக்கோட்டை குமாரவேல். நாடகப்பாத்திரங்களைப் பட்டியலிட்டுத் தந்துள்ளவிதம், ஒவ்வொரு காட்சியையும் அமைத்துள்ள முறை, நிகழ்வுகளை மனதில் பதியும்வகையில் தந்துள்ள பாங்கு போன்றவை மிகவும் சிறப்பாக இந்நூலில் அமைந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த இந்நூலை அண்மையில் மறுபடியும் படித்தேன். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அவ்வரலாற்று நிகழ்வை நாடமாக்கித் தந்துள்ள ஆசிரியரைப் பாராட்டி, அந்நூலை வாசிப்போம், வாருங்கள்.
காட்சி 7 (இடம் : அரண்மனை/மன்னர், அரசி, அந்தணர்கள்)
சுத்தோதனர் : ஜோதிட வல்லுநர்களே...இளவரசனின் ஜாதகம் பார்த்து பலனைச் சொல்லி இந்த நாட்டு இளவரசருக்கு நீங்கள் பெயரிடவேண்டும்.
அந்தணர்1 : இளவரசனுக்கு சித்தார்த்தன் என்று பெயரிடுங்கள்.
அந்தணர்2 : குழந்தையின்னி வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்.
அந்தணர்3 : குழந்தை இளவரசானதும் அவர் நாட்டம் அரசியலில் இருந்தால் பெரிய சக்கரவர்த்தியாக வாழ்வார்.
அந்தணர்4 : உலக வாழ்க்கை வெறுத்துத் துறவு வாழ்க்கை மேற்கொண்டால் மிகச்சிறந்த துறவியாக வாழ்வார்.
சுத்தோதனர் : என்ன சொல்கின்றீர்கள்?
அந்தணர்1 : அரசியலில் இவருக்கு நாட்டமிராது. துறவியாகத்தான் போவார்...
காட்சி 17 (இடம் : நகர வீதிகள்/சித்தார்த்தன், சந்தகன், கிரிஷா கோதமி)
கிரிஷா கோதமி : தோழி, இளவரசர் சித்தார்த்தரின் அழகைப் பார்த்தாயா? மன்மனதின் மறுவுருவோ என்று எண்ணும்படியான உருவம். மாவீரனின் தோற்றம். அழகியரைச் சுண்டி இழுக்கும் காந்தக்கண்கள்.உண்மையில் இளவரசரைப் பெற்ற பெற்றோர் பேறு பெற்றவர்கள். அவரைக் கணவராக அடைந்த பெண்ணும் பேறு பெற்றவள். இந்த இளவரசராவது என்றும் இளமையோடு பல்லாண்டு வாழவேண்டும். வாழ்க இளவரசர்....
சந்தகன் : இளவரசே.. கேட்டீர்களா..கிரிஷாகோதமியின் வாழ்த்துக்களை.
சித்தார்த்தர் : கேட்டேன் சந்தகா...பேறு பெற்றோர் என்று சொல்லி என்னை வாழ்த்திய வாழ்த்துக்களைக் கேட்டேன். அந்த வாழ்த்தொலிகள் என்னை சிந்திக்க வைத்திருக்கிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகிய மூன்றையும் தவிர்த்து மக்கள் பெரு வாழ்வு வாழ வழி காண என்னை சிந்திக்க வைத்துவிட்டது. மரணமில்லாப் பெருவாழ்வு வாழ சரியான வழி காண என் அறிவு எனக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது........என்னை சிந்திக்க வைத்த அந்த கிரிஷாகோதமிக்கு இந்த முத்துமாலையைப் பரிசாகக் கொண்டு போய்க்கொடு. ஓட்டு ரதத்தை, நம் அரண்னைக்கு. நாளை மற்ற உர்களுக்கு நகர் வலம் சென்று வருவோம்.....
காட்சி 33 (இடம் : நதிக்கரை/த்தார்த்தர், பணிப்பெண் சுஜாதா/சித்தார்த்தர் ஞானம் பெறுதல்)
சித்தார்த்தர் மனம்: (மகிழ்ச்சியான குரலில்) இன்று நான் புத்தனாகிவிட்டேன்...வைகாசித்திங்களான பௌர்ணமி நாளான இன்று என் அறிவில் தெளிவு ஏற்பட்டுவிட்டது. இந்த உலகில் இன்பமாக வாழத்துடிக்கும் மனித உயிர்கள் துன்பப்படுவதற்கான காரணத்தை நான் கண்டறிந்து கொண்டேன். மக்கள் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் றியாமையும் ஆசையும்தான். .....உலக உயிர்களுக்கெல்லாம் எவன் கடுகளவும் தீமை செய்யாது வாழ்கிறானோ அவன்தான் பிறப்பு இறப்பற்ற ஓர் ஒப்பற்ற நிலைமையை அடையமுடீயும். இந்த உண்மையை உலக மக்கள் உணரும்படி செய்கிறேன்....
காட்சி 52 (இடம் : வனம்/புத்தர்-பிக்குகள்)
துறவி: பேரின்பம் பெற விரும்பும் மனிதர்கள் எப்படி இருக்கவேண்டும்?
புத்தர்: பேசமய சிந்தனை உள்ளவன், இரண்டு முனைகளுக்குப் போகலாகாது. ஒன்று - காமபோகத்தில் இன்பம் காண்பது, இது இழிவானது, அருவருப்புத் தருவது, சாமானிய மக்கள் கடைப்பிடிப்பது, சிறுமையுடையது, அனர்த்தம் விளைவிப்பது. மற்றொன்று- உடலை வருத்துதல், இந்த முனை துன்பம் பயப்பது, அனர்த்தம் விளைவிப்பது. இவைகளை நீக்கி என் அறிவிற்கண்டவைகள், மக்களை இன்ப வாழ்விற்கு அழைத்துச்செல்லும் என நம்புகிறேன்.........ஒவ்வொருவரும் தன் துன்பமும் பிறர் துன்பமும் ஒன்றே என்று உணரவேண்டும்.
காட்சி 96 (இடம் : ஆசிரமம்/புத்தர், ஆனந்தர்/புத்தர் வயிறு பாதிக்கப்படுதல்)
புத்தர்: ஆனந்தா, எனக்கு திடீரென்று வயிற்று வலி தாங்கமுடியவில்லை.
ஆனந்தர்: நல்ல உணவுதானே படைத்தார் அந்தப் பொற்கொல்லன் சுந்தன்.
புத்தர்: நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். நறுமண சுவையுள்ள உணவோடு காட்டுப்பற்றி இறைச்சியையும் எல்லோருக்கும் போட சமைத்திருந்தார். அந்த இறைச்சியை எனக்கு மட்டும் போடச்சொல்லிவிட்டு மீதம் உள்ளதை மண்ணில் கொட்டிப் புதைக்கச் சொல்லிவிட்டேன்.
ஆனந்தர்: அப்படியா? நீங்கள் நேற்று என்னிடம் சொன்னது இன்று நடந்துவிட்டது. ததாகரரே.. ஏன் இப்படி உங்கள் உடம்பைக் கெடுத்துக்கொள்கிறீர்கள்.
புத்தர்: அந்த சுந்தன் எனக்காகச் செய்திருந்த காட்டுப்பன்றி இறைச்சியை நான் உண்ணாவிட்டால் அவன் மனம் நொந்துபோவான். நான் சாப்பிட்டது போல எல்லா பிக்குகளும் சாப்பிட்டிருந்தால் எல்லோரும் வயிற்று வலியால் துன்பப்பட்டிருப்பார்கள்....
காட்சி 99 (இடம் : ஆசிரமம்/சுபத்திரர், பிக்கு ஆனந்தர், அனுருத்தர்/கடைசி சீடர் சுபத்திரர் சந்திப்பு)
புத்தர்: சுபத்திரரே, தூய உள்ளத்துடன் நான் சொல்லியிருக்கும் எட்டு சீலங்களைக் கடைபிடித்து ஒழுகி, பிறர்பால் யார் தயையுடன் நடந்துகொள்கிறார்களோ அவர்கள் மேலான கதியை அடைவர்.....என்னுடைய அணுக்கத்தொண்டர் பிக்கு ஆனந்தரைக் கேட்டுத் தெரிந்தகொண்டு சங்கத்தில் சேர்ந்துகொள்ளுங்கள்.
சுபத்திரர்: நன்றி பெருமானே, வருகிறேன்..
புத்தர்: ஆனந்தா.......பிக்குகளே......நீங்களும் அருகில் வாருங்கள்.....ஏன் இப்படி துயரத்தோடு நின்றுகொண்டிருக்கின்றீர்கள்? உங்களுக்கு ஏதேனும் ஐயமிருந்தால் இப்பொழுதே என்னிடம் கேட்டு அவற்றை அகற்றிக்கொள்ளுங்கள். ததாகதர் உயிருடன் இருக்கும்போது ஐயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் இருக்கக்கூடாது. ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?....பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டான எந்தப் பொருளுக்கும் அழிவு உண்டு. இதை எப்பொழுதும் நினைவில் இருத்திக்கொண்டு விழிப்புடன் இருங்கள். நிர்வாணப்பேற்றை அடைவதற்கு உண்மையோடும், ஊக்கத்தோறும் உறுதியோடும் முயலுங்கள். (பெருமானின் கண்களின் பார்வை மேல் நோக்கி மறைந்துகொள்கிறது).
ஆனந்தர்: பெருமானே..பெருமானே...எங்களைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே...(புலம்பி அழுகிறார் குழந்தை போல)..பெருமை வாய்ந்த அனிருத்தரே பெருமான் காலமாகிவிட்டதைப் பார்த்தீர்களா? (அழுகை)
நூல்: அறிவுப் பேரொளி புத்தர் பெருமான் (வரலாற்று நாடகம்)
ஆசிரியர்: கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல்
பதிப்பகம்: சிந்துமலர் வெளியீடு, 57, டி.எஸ்.வி. கோவில் தெரு, மயிலாப்பூர்,
சென்னை 600 004
ஆண்டு : 1997
விலை : ரூ.70
----------------------------------------------------------------------
இந்நூலைப் பற்றி விக்கிபீடியாவில் நான் துவங்கியுள்ள பதிவினை பின்வரும் இணைப்பில் காணலாம். தொடர்ந்து இப்பக்கம் மேம்படுத்தப்படும்.
----------------------------------------------------------------------
நாடகங்கள் எழுதி இயக்கியவன் என்னும் முறையில் இதை மேடை ஏற்றினால் எப்படி இருக்கு என்னும் எண்ணம் எழுகிறது.
ReplyDeleteஉண்மை. படிக்கும்போது, அவ்வாறு அமைந்தால் எவ்வாறு இருக்கும் என நானும் எண்ணினேன்.
Deleteவணக்கம், புத்தர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட வேறு இரண்டு நாடகங்கள்:
ReplyDeleteபுத்த அவதாரம் 1930 - தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் (1873-1967)
https://archive.org/details/BuddhaAvataram
புத்த ஞாயிறு 1985 - நா. பார்த்தசாரதி
https://archive.org/stream/BuddhaGnanyiru
மேலும் நீங்கள் முன்னர் (October 1, 2014) விமர்சித்த கவிமணியின் 'ஆசிய ஜோதி'யை கீழ்கண்ட வளையத்தள முகவரியில் படிக்கலாம் என்பதை உங்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்:
http://bautham.net/asiajothi
நன்றி,
அன்புடன்,
அரசு
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அரசு அவர்களே!
Deleteஎனது வலைத்தளத்தில் நான் எழுதிய ஆசிய ஜோதி பௌத்தம் வலைத்தளத்தில் இடப்பட்டதறிந்து மகிழ்ச்சி. இப்பொழுததான் தெரிந்துகொண்டேன். புத்தர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட இரு வேறு நாடகங்கள் குறித்த தங்களின் தகவலுக்கு நன்றி. இணைப்பில் சென்று காண்பேன்.
Deleteமிக்க நன்றி தோழர்
Deleteபதில்கள் ஒவ்வொன்றும் அற்புதம்...
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா...
வழக்கம்போல வருகை தந்து, படித்து கருத்துக் கூறும் தங்களின் ஆர்வத்திற்கு நன்றி.
Delete
ReplyDeleteமுழுதும் உண்ணப் பசி தூண்டத்தக்கச் சில சோற்றுப் பதங்கள்.
வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகம்.
நன்றி ஐயா.
த ம கூடுதல். 1
படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் நாடகம். இரண்டாம் முறை படிக்கும்போது அதனை அதிகம் உணர்ந்தேன். நன்றி.
Deleteபகிர்விற்கு நன்றி ஐயா. நூலைப் படிக்கத் தூண்டும் பதிவு.
ReplyDeleteத.ம.4
இவ்வாறான நாடகங்கள் அரிதே. அதனாலேயே பகிர்ந்தேன். நன்றி.
Deleteநூலிலிருந்தே சில காட்சிகளத் தந்து, பட்டுக்கோட்டை குமாரவேல் அவர்களது எழுத்துக்களை படிக்கத் தூண்டி உள்ளீர்கள். N.C.B.H நடத்திய புத்தகக் கண்காட்சியில் இந்த நூலைப் பார்த்ததாக நினைவு. வாங்கிப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteத.ம.5
ஆரம்பம் முதல் நிறைவு வரை நாடக நிகழ்விடத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும். தங்களின் வருகைக்கு நன்றி.
Deleteநூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
தமிழ் விக்கிபீடியாவிலும் பதிவாக ஆரம்பித்துள்ளேன். விரைவில் இப்பதிவு என்னாலும் பிற விக்கிபீடியா நண்பர்களாலும் மேம்படுத்தப்படும். வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteபடித்துள்ளேன், துறையில்
தங்கள் அறிமுகம் அருமை,
நன்றி.
படித்ததறிந்து மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
ReplyDeleteநாடக நூலின் முக்கிய பகுதிகளை எடுத்துக் காட்டிய விதம் சிறப்பு
ReplyDeleteபடிக்க முயற்சிக்கிறேன்.
அன்பான வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.
Deleteதகவலுக்கு நன்றி! அய்யா...
ReplyDeleteதங்களின் வருகை மகிழ்வினைத்தருகிறது.
Deleteசிங்களர்கள் செய்த தவறினால் புத்த பெருமானுக்கும் இழுக்கு ஏற்படித்தி விட்டார்களே அய்யா !
ReplyDeleteசிந்திக்கவைத்துவிட்டது உங்களின் ஆழமான கருத்து. நன்றி.
Deleteநன்றி
ReplyDeleteநல்ல காட்டுகளுடன் நூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteநாடக அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி.
Deleteநூல் வாங்க வேண்டுமென்ற ஆவல் கொள்கிறது வார்தை ஜாலங்கள் அரருமை
ReplyDeleteதமிழ் மணம் 11
ஆவலைக் கண்டு மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
Deleteகண்டிப்பாய் வாங்கி வாசிக்க வேண்டிய நூல் அய்யா
ReplyDelete