புத்தரைத் தேடி : தினமணி
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான ஆய்வு தொடர்பாக 2008 தொடங்கி கீழ்க்கண்ட இதழ்களில் எனது பேட்டிகள் வெளியாகியுள்ளன. தினமணி பேட்டியை இப்பதிவிலும், பிற பேட்டிகளை கீழ்க்கண்ட இணைப்புகளிலும் காணலாம். வெளியிட்ட இதழ்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
புத்தரைத்தேடி (எனது முதல் பேட்டி)
6.1.2008 நாளிட்ட தினமணி கதிர் இணைப்பு
-------------------------------------------------------------------------------------------
எந்தக் காரியத்தையும் ஆதாய நோக்கத்தோடே பார்த்துப் பழகிய நம் சமூகத்தில் ஓர் ஆய்வாளராக இருப்பது பெரிய பாடுதான். அதுவும் வயல்களிலும், மரத்தடிகளிலும், தலை தனியாக முண்டம் தனியாக அடையாளம் சிதைந்து சிதைந்து கிடக்கும் சிலைகளைப் பற்றியும் அதை ஆய்வு செய்து கொண்டிருப்பவரைப் பற்றியும் அரசுக்கோ சமூகத்துக்கோ என்ன அக்கரை இருக்கிறது; ஆதாயம் இருக்கிறது?!
தமிழ்நாட்டில் பழங்கால சிலைகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. யாரோ ஓர் ஆய்வாளர் சிலையைக் கண்டறிகிறார்; குறிப்பெடுக்கிறார். நம் ஆள்கள் அட அப்படியா! என வாய் பிளந்துவிடு வேறு வேலையைப் பார்க்க சென்றுவிடும்போதும் ஆய்வாளர்கள் தன் வேலையைத் தொடருகிறார்கள்.
முனைவர் பா.ஜம்புலிங்கமும் அப்படித்தான். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்கிறார். கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல் சோழ நாட்டில் பௌத்த சமயம் வேரூன்றியது குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இதுவரைக்கும் 64 புத்தர் சிலைகளை அவர் கண்டறிந்திருக்கிறார்.
ஜம்புலிங்கத்துக்குப் பூர்வீகம் கும்பகோணம். சின்ன வயதிலிருந்தே வரலாற்றில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஏதோ ஓர் ஆய்வு செய்வோம் என்றிருந்த அவரிடம் எங்கிருந்தோ வந்து புத்தர் ஒட்டிக்கொள்ளவும் இப்போது புத்தரைத் தேடி ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறார் அவர்.
ஜம்புலிங்கம் சொல்கிறார் : "என்ன தகவல் கிடைத்தாலும் குறித்து வைத்துக்கொள்வேன். வார விடுமுறை நாள்களில் கிளம்புவேன். பஸ்ஸில், சைக்கிளில், நடையில் எனத் தொடரும் பயணம். புத்தர் சிலைகள் பெரும்பாலும் ஊ ஒட்டியுள்ள வயல்களிலும் மரத்தடியிலும்தான் கிடைக்கின்றன. சிலை சேதமடைந்திருந்தாலும் உச்சிக்கொண்டை, நீள செவிகள், ஆடை, தியான நிலை, நெற்றித் திலகம் என ஏதாவது ஓர் அடையாளம் புத்தரைக் கண்டறிவித்துவிடும்.
சில இடங்களில் புத்தர் எனத் தெரிந்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் இன்ன சிலை என்றே தெரியாமல் வழிபடுகிறார்கள். மங்கலம் என்ற ஊரில் மீசை உள்ள புத்தரைக் கண்டறிந்தோம். உள்ளூர் மக்கள் அதைச் செட்டியார் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர். இதேபோல் முனிசுவரர், அம்மணசாமி என்ற பெயர்களில் வணங்கப்படும் புத்தர் சிலைகளும் உண்டு. இங்குள்ள சிலைகள் பெரும்பாலும் கி.பி.10, 11ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக உள்ளன. தமிழகத்தில் சங்க காலத்தில்தான் புத்த சமயம் வேரூன்றியதாகக் கருதப்படுகிறது. ஆனால் மயிலை. சீனி.வேங்கடசாமி கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். கி.பி.6ஆம் நூற்றாண்டில் செழித்தோங்கிய புத்த மதத்தின் தாக்கம் 16ஆம் நூற்றாண்டு வரை இங்கு இருந்திருக்கிறது. எனவே, இன்னும் நிறைய சிலைகள் இருக்கக்கூடும். அவையெல்லாம் கண்டறியப்பட்டால் பௌத்த சமய வரலாற்றுக்குப் புதிய தகவல்கள் கிடைக்கும்" என்கிறார் ஜம்புலிங்கம்.
ஜம்புலிங்கத்தின் ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. தமிழகத்திலேயே காவிரி கரையோர-கடலோரப் பகுதிகளில்தான் பௌத்த மதம் செழித்திருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, அப்பகுதியில் இவர் ஆய்வு மேற்கொண்டிருப்பது தமிழக பௌத்த வரலாற்றுக்கு நல்ல பங்களிப்பாகும்.
சிலைகள் மதம் சார்ந்தவை மட்டுமல்ல; கலை, பண்பாடு, கலாசாரம் எனக் காலம் உறைந்த - புதையுண்டுக் கிடக்கும் வரலாறுகள். ஜம்புலிங்கம்போல் தனித்தனியே வெவ்வேறு ஆய்வாளர்கள் கண்டறிந்த சிலைகள், அவை தொடர்புடைய செய்திகள் எல்லாம் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு பெரியளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் தமிழகப் பௌத்த வரலாற்றில் புதிய கோணம் புலப்படலாம். நம் சமூகத்தில் இதெல்லாம் பெரிய கனவுதான். புத்தரை வேண்டிக்கொள்வோம்!
பேட்டிகள்
1.ச.ம.ஸ்டாலின், "புத்தரைத் தேடி", தினமணி, 6 ஜனவரி 2008
2.M.T.Saju, “Buddha spotting in Chola country fills is weekends”, The Times of India, Madurai/Trichy, 11.10.2012
3,ராசின், “தமிழர் வழிபாடு முனீஸ்வர புத்தர்”, ராணி, 3.5.2015,
4. N.Ramesh, "Tracing footprints of Buddhism in Chola country", The New Indian Express, 15 May 2005
5. N.Ramesh, "Writer of 250 articles in Tamil Wikipedia", The New Indian Express, 13 November 2005
6.சு.வீரமணி, "தமிழகத்தில் புத்தர் இருக்கிறார்", புதிய தலைமுறை, ஆண்டு மலர் 2017
7.ஆசை, "நீரோடிய காலம்", துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும், காமதேனு, 10 பிப்ரவரி 2019
8."வியக்கவைக்கும் விக்கிப்பீடியா பதிவர்", புதிய தலைமுறை, 13.2.2020
9.முனைவர் இளமாறன், "பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்", முகப்போவியம், 412, முகம், பொங்கல் இதழ், சனவரி 2021
-------------------------------------------------------------------------------------------
3 பிப்ரவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது.
மிகவும் மகிழ்ச்சி ஐயா... உங்கள் தேடல், ஈடுபாடு கண்டு பலமுறை வியந்துள்ளேன்... வாழ்த்துகள்...
ReplyDeleteமுதல் வருகைக்குக்கும் கருத்திற்கும் நன்றி.
DeleteT.M 2
ReplyDeleteதங்களின் தாய்நாட்டுப் பயணத்திலும்கூட தளத்திற்கு வந்து வாக்களித்தமைக்கு நன்றி.
Deleteமகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteமகிழ்ச்சி கண்டு நன்றி.
Deleteஉங்களின் தேடல், முனைப்பு கண்டு பெருமையாக இருக்கிறது ஐயா...மகிழ்ச்சி நன்றி தம +1
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Delete//தினமணி 6.1.2008 நாளிட்ட (தினமணி கதிர்) இதழில் வெளியான எனது முதல் பேட்டியைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். இதனை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி. முதன்முதலாக என் ஆய்வின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது இந்தப் பேட்டி.//
ReplyDelete//பிற இதழ்களில் வெளியான பேட்டிகள்
டைம்ஸ் ஆப் இந்தியா, 29.10.2012, Buddha spotting in Chola country fills his weekends
ராணி, 3.5.2015, தமிழர் வழிபாடு, முனீஸ்வர புத்தர்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,15.5.2015,Tracing footprints of Buddhism in Chola Country//
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி, முனைவர் ஐயா.
பல நண்பர்கள் என்னுடைய முதல் பேட்டியையும், பிற பேட்டிகளைப் பற்றியும் கேட்டதன் விளைவே இப்பகிர்வு. வருகைக்கு நன்றி.
Deleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதங்களின் தேடல்கள்
சாதனைகள் தொடரட்டும்
தம +1
தங்களைப் போன்றோர் உடன் இருக்கும்போது தேடல்கள் தொடரும். நன்றி.
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteஅவைகள் நம்மின் அடையாளங்கள்,
தொடரட்டும் தங்கள் பணி,
நன்றி.
தொடர் வாசிப்புக்கு அன்பான நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தேடலுக்கு கிடைத்தவெற்றி ஐயா... தங்களின் தேடல் பற்றி நான் சிந்தித்ததும் உண்டு... பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி. நன்றி.
Deleteஅருமை ஐயா.
ReplyDeleteபுத்தர் ஆலயங்களில் இருக்கும் பேரமைதி எப்போதும் விரும்பத்தக்கது. மற்ற சில ஆசிய நாடுகளிலும் புத்தரை தரிசித்துள்ளேன். நம்நாட்டு சாரநாத்திலும் கூட.
கோயில் உலாக்களின்போது தாங்கள் சாரநாத் சென்றதறிந்து மகிழ்ச்சி. நன்றி.
Deleteஉங்களைப் போன்ற தமிழ்ப்பணியாளர்களின் பணியை இனம் கண்டு வெளியிடும் இதழியலாளர்களுக்குப் பாராட்டும், உங்களுக்க வாழ்த்தும், இதுபோன்ற அரிய செய்திகளை மேலும் அறியத் தாருங்கள் என்ற கோரிக்கையும்..!
ReplyDeleteநன்றி.
வாழ்த்துக்கு நன்றி. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன்.
Delete7. தமிழ் மணத்தில் நுழைய.
ReplyDeleteதங்களின் ஆய்வு பற்றி ‘தினமணி’ நாளேடு வெளியிட்டிருப்பதை படித்தேன். பாராட்டுக்கள்! தங்களின் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பான பாராட்டுக்கு நன்றி.
Deleteகளப்பணி, களைகள் நீக்கும் பணி. அதனைத் தொடர்ந்து மெருகேற்றி செய்து வருவதற்கு, என் வணக்கங்கள். நானும் என் பணியில் உங்களைப் போன்று உழைக்க, என்னுள் வித்திட்டமைக்கு நன்றி. தங்கள் முனைப்புகளில், மென்மேலும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள். வணக்கம். (தகவலுவன்)
ReplyDeleteஎன் ஆய்வு உங்களை எழுதத்தூண்டியமையறிந்து மகிழ்ச்சி, நன்றி.
Deleteசெய்தித் தாளில் தங்களது ஆய்வு பற்றிய முதல் கட்டுரை....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
தங்களது பணி சிறப்புற வாழ்த்துகள்.
முன்னரே வந்துவிட்டாலும், நண்பர்களுக்குத் தெரிவிக்கவே இப்பகிர்வு. நன்றி.
Deleteதினமணியில் வந்த உங்கள் பௌத்த மத ஆய்வுக்கட்டுரை பற்றி படித்தேன். உங்களைத் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. ஆய்வு தொடரட்டும். பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி. தொடர்ந்து தங்களது வருகையினை எதிர்பார்க்கிறேன்.
Deleteதினம்ணியில் தங்களது ஆய்வு குறித்து வெளிவந்தமைக்கு எங்கள் மனமார்ந்த வாழ்துகள் ஐயா! அதைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.
ReplyDeleteதங்களது ஆராய்ச்சிகள் தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! ஐயா!
பல பணிகளுக்கிடையில் தாங்கள் வந்து மறுமொழி தந்தமைக்கு நன்றி.
Deleteஎந்த ஒரு பணிக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது மனம் மகிழும்/ கிராமப் புறங்களிலும் கண்காணா இடங்களிலும் நாம் தேடும் பொருள் இருப்பது தேடுவதன் பலன் தரும் அதற்கான அங்கீகாரம் பத்திரிக்கை வாயிலாகக் கிடைக்கும் போது அதன் வீச்சு அதிகம் ஏற்கனவே உங்கள் சீரிய பணிபற்றி வலைப்பூக்கள் மூலம் அறிந்துள்ள என் போன்றோர்க்கு இந்தப் பத்திரிக்கை செய்தி இன்னும் மகிழ்ச்சிதருகிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteஎங்களது இல்லத்தில் இப்பேட்டி எடுக்கப்பட்டது. அப்பேட்டி எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. உங்களின் வாழ்த்துக்கு நன்றி.
Deleteதங்கள் தேடல்களுக்கான அங்கீகாரம் இந்த பத்திரிகை நேர்க்காணல்கள் தொடருங்கள். தங்களுக்கு மகிழ்வான வாழ்த்துகள்.
ReplyDeleteதொடர்வேன். வாழ்த்துக்கு நன்றி.
Deleteஅயரா முயற்சிக்கு வாழ்த்துகள் ஸார்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.
Deleteபணி தொடரட்டும்..........
ReplyDeleteதொடர்வேன், நன்றி.
Deleteதகவல்கள் நிறைந்த அருமையான பேட்டி பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteத ம 9
அதிகத் தகவல்களைத் தரும் தங்களது பதிவுகளைக் கண்டுள்ளேன். வருகைக்கு நன்றி.
Deleteபேட்டி வெளியான ஏழாண்டுகள் கழித்தும் தங்களின் தேடல் தொடர்வது மகிழ்ச்சி தருகிறது !
ReplyDeleteஇடைவிடாது எங்களுக்கு நகைச்சுவைப் பகிர்வுகளைத் தரும் தங்களின் கருத்துக்கு நன்றி.
Deleteஉங்கள் உழைப்புக்கும்,திறனுக்கும் கிடைத்த அங்கீகாரம்.மிக ம்மகிழ்சீயாக இருக்கிறது
ReplyDeleteதங்களின் வருகையறிந்து மகிழ்ச்சி. நன்றி.
Deleteநீங்கள் செய்யும் சிறந்த பணியினை அங்கீகரித்து உங்கள் பேட்டியை வெளியிட்ட தினமணி கதிருக்கு நன்றி. இப்பொழுது இத்தனை ஆண்டுகள் கடந்தும் நீங்கள் பணியைத் தொடர்வதற்கு நன்றியும் வாழ்த்துகளும் ஐயா. இப்படிப் பல ஆய்வுகள் நம் வரலாற்றை உலகமறியக் கொண்டு வரவேண்டும்.
ReplyDeleteத.ம.10
தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் மென்மேலும் எழுத வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபுத்தரைத் தேடி - தினமணி வெளியான கட்டுரையைப் படித்தேன். தங்களின் அரிய முயற்சி சிலைகளைக் கண்டு ஆய்வதில் தெரிந்தது. பௌத்த சமய வரலாற்றுக்குப் பல புதிய தகவல்கள் தங்களால் கிடைக்கட்டும்.
வாழ்த்துகள்.
நன்றி.
த.ம.11
தங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் பணி தொடருகிறது. நன்றி.
Deleteசலிக்காமல் இம்முயற்சியை நெடுங்காலம் செய்து வருகிறீர்கள். நிச்சயம் பாராட்டப் படவேண்டியதும் உலகறியச் செய்வதும் அவசியமே.இந்நிலையில் தினமணி தங்களை இனங்கண்டு தங்களை சிறப்பித்தது பெருமைக்குரிய விடயமே. இது மேலும் தங்களை ஊக்கப் படுத்தும். தொடருங்கள் வெற்றி நிச்சயம்.
ReplyDeleteமிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!
அவசியம் தொடர்வேன். வரலாற்றுக்கு என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வேன். நன்றி.
Deleteஅற்புதம் அய்யா
ReplyDeleteஎங்களுக்கு மத்தியில் உங்களைப் போன்ற ஆய்வாளர்கள் இருப்பது எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேடல் தொடரட்டும் அய்யா.
உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன் தேடல்கள் தொடரும். நன்றி.
Delete64 புத்தர் சிலைகளைக் கண்டறிந்துள்ளீர்கள் என்ற தகவலின் பின்னெயுள்ள உழைப்பை ஒரு பயணியாக என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பௌத்தம் ஒரு அரசியல் மதமாக இல்லாமல் போயிருந்தால் தளைத்திருந்த அளவுக்கு தமிழகத்தில் அழித்தொழிக்கவும் பட்டிருக்காது. சமணர்களுக்கு இருக்கும் தடயங்கள் அளவுக்குக் கூட பௌத்தத் தடயங்கள் தமிழகத்தில் இல்லாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.
ReplyDeleteதமிழ்நாட்டின் கழுகுமலை வரைக்கும் புத்தர் தனது மதத்தை பரப்ப வருகை தந்திருந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது.
வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றி.
Deleteரொம்ப சந்தோஷம் ஐயா.. தங்கள் ஆய்வு தொடரட்டும்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.
http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html
நன்றி
சாமானியன்
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !
நன்றி
வாழ்த்துக்கள். Dr.R.MURALIDHARAN Muralidharan (மின்னஞ்சல் வழியாக)
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சி ஐயா... உங்கள் தேடல், ஈடுபாடு கண்டு பலமுறை வியந்துள்ளேன்... வாழ்த்துகள்...
ReplyDelete