சோழ நாட்டில் பௌத்தம்: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்

நேற்று (9.5.2026) தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் "சோழ நாட்டில் பௌத்தம்" என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.

உரையில் சோழ நாட்டில் இருந்த/இருக்கின்ற பௌத்த சமயச் சான்றுகளைப் பற்றி எடுத்துரைத்தேன். அத்துடன் பின்வருவன உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தேன்.

  • புத்தர் கற்சிலைகள், புத்தர் கோயில்கள், சிற்பங்கள், விகாரம், புத்த பாதம் ஆகியவற்றைப் பார்த்த அனுபவங்கள்.
  • நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை இந்திய மற்றும் வெளிநாட்டு அருங்காட்சியகங்களிலிருந்து அஞ்சல் வழியாக (அப்போது அதிகமாக மின்னஞ்சல் அறிமுகமாகாத காலகட்டம்) பெற்று முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஆவணப்படுத்தியது.
  • கண்டுபிடிப்பு தொடர்பான செய்திகள் முதன்முதலாக நாளிதழ்களில் வெளியானபோது அடைந்த உணர்வு.
  • அடுத்தடுத்த களப்பணியின்போது முன்னர் பார்த்த சிலைகள் காணாமல் போதல்.
  • சில புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்களுக்கு இடம் பெயர்தல்.
  • சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகளின் (புது எழுத்து, 2022, 2023) அச்சேற்றம் பற்றிய அனுபவங்கள்.
  • ஒரு மழைக்காலத்தில் எங்கள் இல்லத்தில், சேகரிப்பில் இருந்த நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட சில கோப்புகள் மழையின் நனைந்து பயன்படுத்த முடியாத நிலையில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களை நூலாகத் தொகுப்பாகக் கொணரும் முயற்சியில் பின்னடைவு.
  • தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலையில், சிலை கிடைக்கப்பெற்ற விவரம் இல்லாத நிலையில் தஞ்சாவூர் என்று நூலில் பதிந்த விவரம். சிலை இருந்த இடம் தெரியவரும்போது அடுத்த நூலில் அது பற்றி குறிப்பிடப்படும் என்ற கருத்து.
  • களப்பணி அனுபவங்களை நூலாகக் கொணர மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொடர் முயற்சி.
  • மயிலை சீனி.வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் என்னுடைய கட்டுரை இணைப்பாக இடம்பெற்றது.
என் மனைவி பாக்கியவதியுடன், முதன்முதலாக எங்கள் பேரன்கள் தமிழழகன், தமிழமுதன் இருவரும் கலந்துகொண்ட நிகழ்வாக இது அமைந்தது. இருவரும் ஆர்வத்துடன் புகைப்படமெடுத்துக்கொண்டும், வீடியோ எடுத்துக்கொண்டும் உரையைக் கேட்டனர்.



முத்துக்குமார், ஜம்புலிங்கம், வரதராஜன்






தமிழமுதன், பாக்கியவதி, தமிழழகன்

-------------------------------------------------------------------------------------------
நன்றி: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்
-------------------------------------------------------------------------------------------

Comments

  1. சிறப்பான உரை ஐயா
    தங்களின் தேடல் தொடரட்டும்

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு. இதை படித்த பிறகு நேரில் கலந்து கொள்ளவில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது.

    ReplyDelete

Post a Comment