ஆர்வத்தைத் தூண்டும் நூல்கள்: இந்தியக்குடியரசு துணைத்தலைவர் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணன்
புத்த பூர்ணிமா (1.5.2026) தினத்தன்று தினமணி நாளிதழில் இந்தியக் குடியரசு துணைத்தலைவர் மேதகு சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "புத்த பூர்ணிமா அன்பின் நிறைவு" என்ற கட்டுரை வெளியாகியிருந்தது.
அதனைப் படித்தபின் என் கருத்துகளைத் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியதோடு என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் தமிழ் மற்றும் ஆங்கிலப்பதிப்பின் (புது எழுத்து, காவேரிப்பட்டினம், 98426 47101) படிகளை 6.5.2026இல் அனுப்பியிருந்தேன்.
நூல்களைப் பெற்ற இந்தியக் குடியரசு துணைத்தலைவர் எனக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார். இன்றைய (19.5.2026) அஞ்சலில் பெற்ற அந்த கடிதத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
இதற்கு முன்பாக என்னுடைய படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2004) நூலுக்கு மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் பாராட்டு அனுப்பியிருந்தார்.










Comments
Post a Comment