Posts

அரியலூர் மாவட்டம் பிள்ளைபாளையத்தில் வழிபாட்டில் புத்தர் சிலை : சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா மலர்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: சித்தார்த்தா புத்தக சாலை நூற்றாண்டு விழா (1919-2019) மலர் ------------------------------------------------------------------------------------------- 7 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகம்

Image
2021 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  இளமைப்பருவத்தில் சில எண்ணங்களைச் சுமந்துகொண்டு வாழ்க்கையில் பயணிக்கும் அனைவரும் தாம் நினைத்தவற்றை அடைந்துவிடுவதில்லை. வாழ்க்கைச்சூழல் வேறுவேறு பாதைகளுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. இருப்பினும், எழுச்சி எண்ணங்கள் உடையோர் தமக்குக் கிடைத்த பாதையில் ஆற்றலுடன் பயணித்துப் புதிய இலக்குகளை எட்டிப் புகழ் வாழ்வில் பூரித்துப் பயணிக்கின்றனர்.   ஆய்வியல் (எம்ஃபில்) பட்டத்திற்கு கல்கியின் வரலாற்றுப்புதினங்களை ஆய்வு செய்த நினைத்தவர், பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற நாகப்பட்டின விகாரைப் பற்றிய சிந்தனையில் பௌத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய நேர்ந்து பௌத்தவியலுக்குப் பல அருங்கொடைகள் அளித்திருக்கின்றார் முனைவர் பா.ஜம்புலிங்கம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திருவாளர் பாலகுருசாமி-திருமதி தர்மாம்பாள் இணையருக்கு 02.04.1959இல் பிறந்தவர் பா.ஜம்புலிங்கம். தொடக்கக்கல்வியை கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இள...

பொன்னி நாட்டில் பௌத்தம் : புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம்

Image
புதுவைத் தமிழாசிரியர்கள் - மின்முற்றம் தமிழ்ச் சிந்தனையில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒரு வார தொடர்ப்பொழிவினை (121-126) ஏற்பாடு செய்திருந்தது. அதில் (122ஆவது நிகழ்வில்) கலந்துகொண்டு, 16 நவம்பர் 2020, மாலை 6.30-7.30 அன்று பொன்னி நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அறிஞர்களோடும், நண்பர்களோடும், ஆய்வாளர்களோடும் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பினைத் தந்த மின் முற்றத்திற்கும், நிகழ்வினைத் தொகுத்த நண்பர் திரு மாதவன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. பொழினைக் கேட்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். பொழிவிற்கான யுட்யூப் இணைப்பு : பொன்னி நாட்டில் பௌத்தம் ------------------------------------------------------------------------------------------- நன்றி:  புதுவைத் தமிழாசிரியர்கள் மின் முற்றம்/16 நவம்பர் 2020 / இணையவழி உரை ------------------------------------------------------------------------------------------- 13 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

களப்பணியில் இணைவோம் இணைய வழியால் : முக்குடை

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: முக்குடை ,  செப்டம்பர் 2020 (9 ஆகஸ்டு 2020, களப்பணியில் சமணம் பொழிவின் எழுத்து வடிவம் ) ------------------------------------------------------------------------------------------- 22 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

பௌத்த சுவட்டைத் தேடி : சீதக்கமங்கலம்

Image
2002ஆம் ஆண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த ஆய்வாளர் திரு கோவிந்தராஜன் என்னிடம் தமிழகத்தில் காணப்படுகின்ற புத்தர் சிலையின் அமைப்பைப் பற்றி விசாரித்தார். அவர் தத்துவத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அவரைப் போலவே துறை சார்ந்த பலர் அவ்வப்போது நான் பார்க்கின்ற, பார்த்த புத்தர் சிலைகளை பற்றி பேசுவது வழக்கம். தொடர்புடைய துறைத்தலைவர்கள் கூட என்னிடம் இவ்வாறு கேட்டதுண்டு. தொலைபேசியில் ஆர்வமாகப் பேசுவார்கள். சிலை இருக்கும் இடம், அமைப்பு, மற்றும் தொடர்புடைய விவரங்களைக் கேட்பார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது எதுவுமே பேசாமல் சென்றுவிடுவார்கள். அடுத்தடுத்து அவர்களிடம் ஆய்வு செய்யும் மாணவர்கள் மூலமாக மறைமுகமாகக் கேட்பதும் உண்டு. அவ்வாறான பல நண்பர்களை என் ஆய்வின்போது சந்தித்துள்ளேன். திரு கோவிந்தராஜன் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை பின்னர் தான் அறிந்தேன். நான் பார்த்த புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றி எனக்குத் தெரிந்த வரை கூறினேன். தொடர்ந்து சில நாள் கழித்து அவர் என்னிடம் கேட்ட கேள்விகள்: புத்தர் சிலையின் தலையை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்? புத்தரா சமண தீர்த்...