Posts

சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம் : இந்து தமிழ் திசை

Image
கி.பி.10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலைகள் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிலைகளாகும். ஜெயங்கொண்டம் (1998), காரியாங்குடி (1998), ஆலங்குடிப்பட்டி (1999), செங்கங்காடு (1999), தஞ்சாவூர் (1999), பெருமத்தூர் (1999), அடஞ்சூர் (2003), செருமாக்கநல்லூர் (2009), சுரைக்குடிப்பட்டி (2010), பஞ்சநதிக்குளம் (2010), தோலி (2011), கவிநாடு (2013), நாட்டாணி (2015) ஆகிய இடங்களில் உள்ளன. இவை தனியாகவும் முனைவர் சந்திரபோஸ், முனைவர் மணி.மாறன், திரு தில்லை. கோவிந்தராஜன், முனைவர் வீரமணி உள்ளிட்ட ஆய்வாளர்கள் மற்றும் நண்பர்கள் துணையோடும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை திகம்பர மேனியாக, அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. பெரும்பாலும் முக்குடையுடன் காணப்படுகின்ற இச்சிலைகளில் யட்சர்கள் உள்ளனர். இச்சிலைகள் அனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும். ஜெயங்கொண்டம் (1998)  ஜெயங்கொண்டத்தில் வெள்ளாளத்தெரு-கோனார் தெரு சந்திப்பில், ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் இருந்தது. காரியாங்குடி (1998) வேதாரண்யம் பகுதி...

A resurvey of Buddha statues in Pudukottai region (1993-2009) : புத்தர் வழி

Image
2020 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். பிப்ரவரி 2020 முதல் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் நண்பர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்பெருமக்கள், ஊடக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ------------------------------------------------------------------------------------------- நன்றி: புத்தர் வழி , இதழ் 3, மார்ச்-ஏப்ரல் 2018 ( Tamil Civilization, Vol 23, Oct-Dec 2009  இதழில் வெளியான கட்டுரை) ------------------------------------------------------------------------------------------ Through the subsequent field study it is learnt that Sundarapandianpattinam is in Ramanathapuram district and not in Pudukottai district.  Updated on 18 March 2025.

சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : சான்லாக்ஸ்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி:  தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் பன்னாட்டுக் கருத்தரங்கம், 21, 22 ஜுன் 2019/ சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் ------------------------------------------------------------------------------------------- 7 மார்ச் 2025இல் மேம்படுத்தப்பட்டது.

In search of imprints of Buddhism : Pillaipalayam

Image
During our field study on 25 August 2019 we found a Buddha at Pillaipalayam in Ariyalur district of Tamil Nadu. Alongwith Dr M.Selvapandian and Mr Ravikumar the field work was carried out. We planned to meet at the Cross road near Gangaikondacholalpuram. I arrived earlier and as there was some delay in their arrival    due to non availability of the bus , I asked Mr Selvapandian if there were any interesting place nearby. He informed me about the sculptures found in Sengalmedu which was at a distance of 1.5 km from there. By walk I reached the place and saw the beautiful sculptures there. Then I returned. By now they also joined with me. After a brief discussion at Cross road we started searching  about the place where the Buddha was said to have been found. We were informed that from there at a distance of 3 km there was a place called Pillaipalayam (from Gangaikondacholapuram, 5 km). Some told the place name was Pillapalayam. We took an auto and started our fiel...

பௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்

Image
அண்மையில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இராஜேந்திரசோழன் அகழ்வைப்பகம் சென்றபோது, முந்தைய களப்பணிகளின்போது கண்ட அங்கிருந்த புத்தர் சிலைகளைக் காணச் சென்றேன். அங்குள்ள காட்சிப்பேழையில் உள்ள புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா? கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா? என்பதைத் தெளிவு செய்யவே இப்பதிவு.     வலங்கைமான்புத்தூர் புத்தர் அகழ்வைப்பகத்தில் மூன்று புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில்  காட்சிப்பேழையில் இருந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்ற குறிப்போடு இருந்தது. அதனடிப்படையில் ஆய்வேட்டில், உரிய நூல் மேற்கோளோடு கீழ்க்கண்டவாறு பதிந்தேன்: "புத்தர் : தஞ்சை மாவட்டம் வலங்கைமான்புத்தூரிலிருந்து சேகரிக்கப்பட்டது. பத்மாசனத்தில் தியான முத்திரையில் காணப்படுகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய நாளில் வலங்கைமான் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று இருந்ததையும், அச்சமயம் பரவி நின்றதையும் இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது. இதன் உயரம் 27 செமீ அகலம்15 செமீ ( இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் , ஆசிரியர்கள் மா.சந்திரமூ...