Posts

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் (1998-2003)

Image
பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் களப்பணி மேற்கொண்டபோது பல சமண தீர்த்தங்கரர் சிற்பங்களையும், அவற்றில் பெரும்பாலானவை புத்தர் என அழைக்கப்படுவதையும் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட களப்பணியும், சிற்ப அமைப்பில் காணப்பட்ட கூறுகளும் புத்தர் மற்றும் சமணர் சிற்பங்களுக்கான  வேறுபாட்டை உணர்த்தின. 1993இல் ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப்பட்டத்திற்குப் பதிவு செய்தபின் சோழ நாட்டில் காணப்படுகின்ற புத்தர் சிற்பங்களைப் பற்றிய செய்திகள் நூல்களிலிருந்தும், கட்டுரைகளிலிருந்தும் தொகுக்கப்பட்டன.  முதலில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தர் சிற்பங்களைக் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பல இடங்களில் தனியாக உள்ள சிற்பங்களைத் தேடும் முயற்சி ஆரம்பமானது.   புத்தரது சிற்பங்களைத் தேடிக் களப்பணிக்குச் சென்றபோது கங்கைகொண்டசோழபுரம் (உயரம் 20"), திருவாரூர் வட்டம் தப்ளாம்புளியூர் அருகே காரியாங்குடி (16"), புதுக்கோட்டை ஆலங்குடிப்பட்டி அருகேயுள்ள க...

பௌத்த சுவட்டைத் தேடி: சுந்தரபாண்டியன்பட்டினம்

Image
ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, கரூர், வன்னிச்சிப்பட்டினம், வெள்ளனூர் சுந்தரபாண்டியன்பட்டினம் ஆகியவை புதுக்கோட்டைப்பகுதியில் புத்தர் சிற்பங்கள் இருந்த இடங்களாகும். ஆலங்குடிப்பட்டி களப்பணி அனுபவத்திலிருந்து சற்று வித்தியாசமானது சுந்தரபாண்டியன்பட்டினம் அனுபவம். இங்கு புத்தர் இருக்கும் இடத்தினை முன்கூட்டியே அறிந்து சென்றபோது பெற்ற அனுபவம் இம்மாதப்பதிவு. அக்டோபர் 1993 எனது ஆய்வுக்கான தலைப்பு உறுதி செய்யப்பட்டபின் புத்தர் சிற்பங்களைத் தேட ஆரம்பித்தபோது என் மனதில் கல்லூரிப்படிப்பை முடித்து வெளியே வந்த நாள்கள் நினைவிற்கு வந்தன. படிப்பை முடித்ததும் வேலை தேடும் படலத்தில் இறங்கிய போது பார்க்கும் ஒவ்வொருவரிடமும் என் தன்விவரக்குறிப்பினைக் கொடுப்பதையும், பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வேலைக்காக விண்ணப்பம் அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறே பௌத்தம் தொடர்பான தலைப்பு உறுதி செய்யப்பட்டபின் நான் சந்திக்கும் நண்பர்களிடமும், அறிஞர்களிடமும் புத்தர் சிற்பங்கள் எங்கெங்கு இருக்கின்றன எனக் கேட்க ஆரம்பித்தேன். பலர் பௌத்த ஆய்வு தொடர்பாக பிற அறிஞர்கள் எழுதியுள்ள கட்டுரைகளைய...

கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிலை

Image
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலிலுள்ள ஒரு சிற்பம் அரை நூற்றாண்டிற்கும் மேலாக புத்தர் என்று கூறப்பட்டுவருகிறது. அது புத்தரா அல்லது வேறு சிற்பமா என்பதைப் புரிந்துகொள்ள களப்பணி எவ்வாறு உதவியாக இருந்தது என்பதை அறிந்துகொள்ள கும்பகோணத்திற்குப் பயணிப்போம்.   அக்டோபர் 1993  ஆய்வியல் நிறைஞர் ஆய்விற்காகப் பதிவுசெய்த பின் கும்பகோணம் பகுதியிலுள்ள புத்தர் சிற்பங்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன்.மயிலை சீனி வேங்கடசாமி தன் பெளத்தமும் தமிழும் (1940) நூலில், கல்வெட்டு அறிக்கையை மேற்கோள் காட்டி கும்பகோணம் என்ற உட்தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்ததைக் கண்டேன்: "கும்பகோணம் நாகேசுவரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டுகள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்". டி.என்.வாசுதேவராவ் (1979) மயிலை சீ...

சமண சுவட்டைத் தேடி: ஆலங்குடிப்பட்டி

Image
சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர், சமண தீர்த்தங்கரர் சிற்பங்களுக்கிடையேயான வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத்தரைக் கண்டுபிடிக்க பல முறை களப்ப...

களத்தில் இறங்கும் முன் அறிமுகம்

Image
(முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். சோழ நாட்டில் காணப்படும் பௌத்தச் சுவடுகளைப் பற்றிக் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். தன்னுடைய களப்பணியில் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் இனி நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். இந்த வாரம் அறிமுகத்துடன்... 1993இல் தொடங்கி தொடர்ந்து நான் மேற்கொண்டு வரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது பல அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். களத்தில் இறங்கும் முன்பாகச் சிந்திக்கத் தொடங்கியபோது ஆய்வு செய்ய விரும்பும் என்னுடைய விருப்பத்திற்கு வந்த ஆதரவைவிட மாற்றுக் கருத்துகள் அதிகம் இருந்தன. பல நண்பர்களும் ஆய்வாளர்களும், ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது.   தம்பி, நீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும். உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல். ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவசியமா இதுல தலையிடாதே. உன்னால முடியாது. வேலையும் பாத்துக்கிட்டு, ஆய்வும் செய்...