Posts

Showing posts from 2024

ஓர் அரிய பெட்டகம் : முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Image
சோழ நாட்டில் பௌத்தம் நூலைப் பற்றிய, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். ************* ஓர் அரிய பெட்டகம் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி மலரும். அதுபோன்றுதான் மிக அரிதாக ஆண்டுகள் பல கடந்து தமிழகத்தில் பெளத்தம் பற்றிய ஓரிரு நூல்கள் மலர்கின்றன. அதுபோன்றே பெளத்தம் பற்றி ஆய்வோர் இன்று தமிழகத்தில் மிகச்சிலரே. அவர்கள் வரிசையில் முனைவர் பா. ஜம்புலிங்கம் தன் கடின உழைப்பால் பெளத்தம் பற்றி ஆய்ந்து வருவதோடு முக்கிய தரவுகளை ஒளிப்படங்களுடன் ஆவணப்படுத்தியும் வருகின்றார். அவர்தம் கடுமையான உழைப்பின் அற்புதமான வெளிப்பாடுதான் சோழநாட்டில் பெளத்தம் எனும் இந்நூல். தமிழ்ப்பதிப்பினை வழங்கும் இனிய தருணம் (நவம்பர் 2022) சங்க காலம் தொடங்கி தஞ்சையின் அரசர் செவ்வப்ப நாயக்கர் காலம் வரை (16ஆம் நூற்றாண்டு) சோழநாட்டில் உள்ள பெளத்த சமயம் சார்ந்த இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், விகாரங்கள் எனப் பல தரவுகளைக் காலவரிசைப்படி தொகுத்து ஆய்வு மேற்கொள்ளப்பெற்றுள்ளது. சோழநாட்டில் பெளத்த சமய முக்கிய கேந்திரங்களா...

இவர் புத்தர் இல்லை, பகவர்.

Image
மானுடம் அக்டோபர் 2024 இதழில் என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்ட மானுடம் இதழுக்கு நன்றி. ************************************** “கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் சிலை உள்ளது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்” என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். [1]   நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியிலுள்ள பகவத் (பகவ) விநாயகர் கோயிலின் கருவறையில் விநாயகர் சிலையும்,  முன் மண்டபத்தில் அவர் கூறிய சிலையும் உள்ளது. அவரது கருத்தை எனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வேட்டில் அப்படியே பதிவுசெய்தேன். [2]   அக்கோயிலுக்கு அருகில் பகவத் படித்துறை உள்ளது.   தஞ்சாவூர் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த தீட்சிதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் காவிரி ஆ...

தமிழக பௌத்தம் குறித்தான ஒரு கலைக்களஞ்சியம் : பேரா.கனக. அஜிததாஸ்

Image
முக்குடை செப்டம்பர் 2024 இதழில் என்னுடைய "சோழ நாட்டில் பௌத்தம்" (புது எழுத்து, 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, பேராசிரியர் கனக. அஜிததாஸ் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலப் பதிப்பின் அறிமுகமும் இடம் பெற்றுள்ளது. அவருக்கும், அவ்விதழுக்கும் என் நன்றி, ***************************************** இந்த மதிப்புரை தமிழ் மரபுத் திணை அக்டோபர் 2024 இதழிலும் வெளியாகியுள்ளது. அவ்விதழுக்கும் நன்றி. ***************************************** திரு உதயசங்கர் முகநூல் பதிவு, 17 டிசம்பர் 2024 திரு அய்யம்பேட்டை செல்வராஜ் முகநூல் பதிவு, 19 டிசம்பர் 2024 21 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல் : கரந்தை ஜெயக்குமார்

Image
  என் Buddhism in Chola Nadu (Pudhu Ezhuthu, Kaveripattinam, Krishnagiri District, Tamilnadu, India, Mobile: +91 9842647101) ஆங்கில நூலைப்பற்றி தன் வலைப்பூவில் மதிப்புரை தந்துள்ள திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு என்னுடைய நன்றி. ************************************************** ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல்           சிந்தனை.      ஒரே சிந்தனை.      சற்றேரக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை. இந்த சிந்தனையை மையப்படுத்தியத் தேடல்.      தேடல் என்றால் சாதாரணத் தேடல் அல்ல.      பேருந்து.      மிதி வண்டி.      இரண்டும் இல்லையேல் நடை.      தன் குடும்பத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த சமூகத்திற்காகத் தேடவில்லை.      தான் சார்ந்த இனத்திற்காகத் தேடவில்லை.      சுத்தமான, சுயநலமற்றத் தேடல். ...

Extraordinary Book : Supraja Kannan

Image
I feel happy to share the review of my book "Buddhism in Chola Nadu" by  Supraja Kannan, with thanks to her. ****************************************** I am thrilled to share my thoughts on this extraordinary book, “Buddhism in Chola Nadu”. Delving deep into the book will transport us to an era, where the Buddhism was at its peak. It accords a plethora of information about the history and influence of Buddhism in the Chola dynasty. Some of the fascinating factors: Before entering into the subject, the author describes the geography of Chola Nadu in detail, including its districts and significant places associated with this ancient region, providing a solid foundation for understanding the history that follows. The author’s meticulous research and references from ancient texts reveal Buddhism’s flourishing past in these areas. The careful curation of quotes and names from various literary sources, including the revered  Thirukural, Silapathigaram, and Manimegalai  makes fo...

புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் : முனைவர் மு.இளங்கோவன்

Image
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் என்னைப் பற்றியும் என் ஆய்வினைப் பற்றியும் அவரது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் தமிழகத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் தரம் குறைந்து வருகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்வது உண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் தரமான ஆய்வாளர்கள் தோன்றித் தரமான ஆய்வேடுகளை வழங்கி வருவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவ்வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகவும், சுருக்கெழுத்தராகவும் பணியைத் தொடங்கிப் படிப்படியே தம் அயராத உழைப்பாலும் ஆர்வத்தாலும் முனைவர் பட்டம் வரை ஆய்வு செய்து பட்டம் பெற்று, அப் பல்கலைக்கழத்தின் உதவிப் பதிவாளர் வரை உயர் பொறுப்புகளைப் பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கடந்துவந்த பாதை, ஆய்வுத்துறையில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் என்பது என் நம்பிக்கை. பா. ஜம்புலிங்கம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பாலகுருசாமி - தர்மாம்பாள். பெற்றோரின் கண்டிப்பால் மட்டும் பள்ளி...

Buddhism in Chola Nadu : Pudhu Ezuthu

Image
I am delighted to inform one and all that  Buddhism in Chola Nadu , the English version of my book ( Chola Nattil Bautham , Pudhu Ezuthu, Kaveripattinam, 2022)  has just come out. I wanted to publish it in Tamil and English, as soon as I was awarded a doctorate by Tamil University, Thanjavur, Tamil Nadu, two decades back. The Tamil version was published in 2022, and the English version now saw the light of the day. Many scholars and friends advised me to bring out its English version. Their encouragement and my interest in translation to bring it out in English since the beginning helped me to achieve my goal.  I take this opportunity to extend my thanks to all of them.  It took more than one year to bring out this version. I made some modifications then and there. A Buddha statue from Thanjavur Museum, Thanjavur, Tamil Nadu, and a head of Buddha found during a field study in Pazhayarai, Thanjavur district, are additions to this work. The translation has been carried...