பௌத்த சுவட்டைத் தேடி : திருநாட்டியத்தான்குடி
23 ஏப்ரல் 1995 கும்பகோணம் என் . சேதுராமன் அவர்களுடன் ஆய்வு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது தஞ்சாவூரில் பௌத்தம் தொடர்பாக அவர் கூறுகின்ற செய்திகளை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாகப்பட்டினத்தில் புத்தர் விகாரை , நாகப்பட்டினம் வெளிப்பாளையம் , கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் , சோழபுரம் , திருநாட்டியத்தான்குடி , திருமலைராயன்பட்டனம் , அம்மன்குடி , நாகேஸ்வரர் கோயில் அருகே பகவர் , மன்னார்குடி , பட்டீஸ்வரம் , புத்தமங்கலம் , திருச்சோபுரம் , போதிமங்கை போன்ற இடங்களைப் பற்றியும் கூறியிருந்தார் . மார்ச் 2003 முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் , திரு வி . கண்ணன் , திரு கணேசன் ஆகியோருடன் களப்பணி சென்றபோது திருநாட்டியத்தான்குடியில் மூங்கில் தோப்பில் ஒரு புத்தர் சிலையைக் காணமுடிந்தது . பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் இருந்த சிலையின் வலது கையும் தீச்சுடரும் உடைந்த நிலையிலும் , கழுத்தும் , முகமும் சற்றுச் சிதைந்த நிலையிலும் இருந்தன . உள்ளங்கையில் தர்ம சக்கரத்தைக் காணமுடிந்தது . இப்பகுதியில் மழை வராமலிருக்கும்போது , ம...