Posts

கோயில்களில் புத்தர் சிலைகள்

Image
  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தர் கற்சிலைகள் உள்ளன. இவை தவிர சுமார் 10 இடங்களில் பிற சிலைகளை புத்தர் சிலைகள் என்று கூறிவருகின்றனர். இப்பகுதியில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள சிலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. சில சிலைகள் தலையின்றி உள்ளன. சில சிலைகளின் தலைப்பகுதி மட்டுமே உள்ளன. 1993 முதல் சுமார் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற களப்பணியின்போது புத்தர் சிலைகளை புத்தர் கோயிலிலும், சைவ, சமண மற்றும் அய்யனார் கோயில்களிலும், கோயில்களுக்கு அருகிலும் காணமுடிந்தது. அருந்தவபுரம் தஞ்சாவூர் மாவட்டம் அருந்தவபுரம் அருகில் திருக்கோயில்பத்தில் உள்ள சிவன் கோயிலின் திருச்சுற்றில் தலையில்லாத ஒரு புத்தர் சிலை உள்ளது. அமர்ந்த நிலையில் தியானக்கோலத்திலுள்ள இந்தச் சிலை கழுத்தில் திரிவாலி எனப்படுகின்ற மூன்று மடிப்புகள், அகன்ற மார்பு, பரந்த தோள்கள், இடது மார்பை மூடிய மேலாடை, மடியில் இடது உள்ளங்கையின்மீதுள்ள வானோக்கிய வலது உள்ளங்கையில் தர்மசக...

On foot and Hercules cycles: In search of Buddha in the Chola country

Image
In the photo caption of Manalur Buddha, the word 'Kerala' should be read as 'Tamil Nadu', in the article . Relevant links: On foot and Hercules cycles... On foot and Hercules cycles... ------------------------------------------------------------------------------------------- Thanks: MT Saju / The Federal , 2 January 2024 ------------------------------------------------------------------------------------------- Updated on 7.1.2026.

அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்: முனைவர் க.ஜெயபாலன்

Image
அருங்காட்சியகத்திற்குள் சென்று வந்த அனுபவம்... சமகாலத் தமிழ் அறிவுலகில் பௌத்தம் குறித்த ஆய்வுகளில் புத்தபகவன் சிலைகள் சார்ந்து கள ஆய்வை மேற்கொண்டு பல புதிய ஆய்வுத்தடங்களைப் பதித்து வருவதில் மிக முக்கியமானவராகக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருபவர் முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயா அவர்கள். அதிகமாக எழுத்துப்பணிகளை மேற்கொள்ளும் சிலர் கள ஆய்வுகளை மேற்கொள்வதில்லை. கள ஆய்வுகளை மேற்கொள்ளும் சிலர் எழுத்தை விரும்புவதில்லை. ஆய்வையும் மேற்கொண்டு அதே நேரம் நிறைவாக எழுதுவதிலும் ஆழமாக ஆய்வுத்துறையில் பயணிப்பதில் அழுத்தமான முத்திரையை ஐயா முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்கள் பதித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வினை மனதில் தேக்கி வைத்து அப்பொருள் தொடர்பாகவே தொடர்ந்து பயணித்து புதிய புதிய செய்திகளை கண்டறிந்து அவர் உருவாக்கிய ஒரு செம்பதிப்பான நூல் என்று "சோழ நாட்டில் பௌத்தம்" என்ற இந்த நூலைக் குறிப்பிடலாம். இந்தியாவின் நிலப்பரப்பு பெரும் பகுதியாக உள்ளதாலும், பல்வேறு மொழிகள் பண்பாடுகள் கொண்ட பகுதியாகவும் உள்ளதாலும், இந்தியாவைத் துணைக்கண்டம் என்று பல...

சோழ மண்டலத்தில் பௌத்தம் வரலாற்று ஆய்வு : டாக்டர் மு.நீலகண்டன்

Image
டாக்டர் மு. நீலகண்டன்  எழுதியுள்ள சோழ மண்டலத்தில் பௌத்தம் வரலாற்று ஆய்வு என்னும் நூல் சோழ மண்டலம் வரலாற்றுப்பின்னணி (பக்.13-33), சோழ மண்டலத்தில் பௌத்த தாக்கம் (பக்.34-44), சோழ மண்டலத்தில் பௌத்தப் பெரியோர்கள் ( பக்.45-50 ), சோழ மண்டலத்தில் பௌத்த வழிபாடு ( பக்.51-63 ), சோழ மண்டலத்தில் பௌத்த தடயங்கள் ( பக்.64-122 ), சோழ மண்டலத்தில் பௌத்தம் வீழ்ச்சி ( பக்.123-125 ) என்னும் ஆறு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. முதல் இயலில் சோழ மண்டலம் என்ற வரையறையான பிரிக்கப்படாத தஞ்சை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள், தென்னாற்காடு, புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிளைக் கொண்ட நிலப்பரப்பு, வரலாற்றுப்பின்னணியில் தமிழ்நாட்டின் எல்லைகள், கால வாரியாக சோழ மண்டல வரலாறு, சோழர் தலைநகர்கள், சங்க இலக்கியச் சான்றுகள், கல்வெட்டு சான்றுகள் ஆகியவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளன. பௌத்தத்தாக்கம் என்ற தலைப்பின்கீழ் புத்தரின் நான்கு தத்துவங்கள், தமிழ்நாட்டில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் பௌத்தத்தின் பரவல், வெளிநாட்டவர் குறிப்புகள், பௌத்த மதத்தின் செல்வாக்கு, பௌத்தர் சமயக்கல்வி ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளன. சோழ ...

அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள நூல் : முனைவர் பா.சக்திவேல்

Image
முனைவர் பா.சக்திவேல் ------------------------------------------------------------------------------------------- நன்றி: முனைவர் பா.சக்திவேல் / கொலுசு , செப்டம்பர் 2023 ------------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------- நன்றி: முனைவர் பா.சக்திவேல் / தமிழ் நெஞ்சம் , நவம்பர் 2023 ------------------------------------------------------------------------------------------- நூல் தேவைக்குத் தொடர்பு கொள்ள:  21.10.2025இல் மேம்படுத்தப்பட்டது.