Posts

தஞ்சை பௌத்தச் சுவடுகள்

Image
10.3.2020 அன்று தஞ்சாவூர், ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூரில் "தஞ்சையில் பௌத்தச்சுவடுகள்" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். (இ-வ)  எம்.தினேஷ்குமார், மகேந்திரன், பா.ஜம்புலிங்கம், சி.குணசேகரன்,  கே.விசாகன்    (இ-வ) பா.ஜம்புலிங்கம், எம்.தினேஷ்குமார், குணசேகரன், ஜான் அடால்ப் கோகஸ், கே.விசாகன் தத்துவம், இலக்கியம் என்பதற்கு மாறாக களப்பணியில் அடியெடுத்து வைக்க முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கருத்து கூறியது. 1993இல் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ள புத்தர் சிலைகள், காட்சிப்பேழையில் உள்ள நாகப்பட்டின புத்தச்செப்புத்திருமேனியைக் கண்டது. பல சிலைகளை ஆரம்பத்தில் புத்தரா சமணரா என்று அறிந்துகொள்ள இயலா நிலையில் சிரமப்பட்டது. அய்யம்பேட்டையில் வழிபாட்டில் இருந்த ஒரே நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது. மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் உதவியுடன் காணச...

சோழர் காலத்தில் சிறந்தோங்கிய சமணம்

Image
கி.பி.10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலைகள் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிலைகளாகும். ஜெயங்கொண்டம் (1998), காரியாங்குடி (1998), ஆலங்குடிப்பட்டி (1999), செங்கங்காடு (1999), தஞ்சாவூர் (1999), பெருமத்தூர் (1999), அடஞ்சூர் (2003), செருமாக்கநல்லூர் (2009), சுரைக்குடிப்பட்டி (2010), பஞ்சநதிக்குளம் (2010), தோலி (2011), கவிநாடு (2013), நாட்டாணி (2015) ஆகிய இடங்களில் உள்ளன. இவை தனியாகவும் முனைவர் சந்திரபோஸ், முனைவர் மணி.மாறன், திரு தில்லை. கோவிந்தராஜன், முனைவர் வீரமணி உள்ளிட்ட ஆய்வாளர்கள் மற்றும் நண்பர்கள் துணையோடும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை திகம்பர மேனியாக, அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளன. பெரும்பாலும் முக்குடையுடன் காணப்படுகின்ற இச்சிலைகளில் யட்சர்கள் உள்ளனர். இச்சிலைகள் அனைத்தும் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தவையாகும். ஜெயங்கொண்டம் (1998)  ஜெயங்கொண்டத்தில் வெள்ளாளத்தெரு-கோனார் தெரு சந்திப்பில், ஒரு சமண தீர்த்தங்கரர் சிலையைக் காணமுடிந்தது. அச்சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் முக்குடையுடன் இருந்தது. காரியாங்குடி (1998) வேதாரண்யம் பகுதி...

சோழ நாட்டில் பௌத்தம்: களப்பணி (1993-2018)

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி:   தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் பன்னாட்டுக் கருத்தரங்கம், 21, 22 ஜுன் 2019/ சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் ------------------------------------------------------------------------------------------- பிற கட்டுரைகளை வாசிக்க : கட்டுரைகள் ------------------------------------------------------------------------------------------- 19.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

In search of imprints of Buddhism : Pillaipalayam

Image
During our field study on 25 August 2019 we found a Buddha at Pillaipalayam in Ariyalur district of Tamil Nadu. Alongwith Dr M.Selvapandian and Mr Ravikumar the field work was carried out. We planned to meet at the Cross road near Gangaikondacholalpuram. I arrived earlier and as there was some delay in their arrival    due to non availability of the bus , I asked Mr Selvapandian if there were any interesting place nearby. He informed me about the sculptures found in Sengalmedu which was at a distance of 1.5 km from there. By walk I reached the place and saw the beautiful sculptures there. Then I returned. By now they also joined with me. After a brief discussion at Cross road we started searching  about the place where the Buddha was said to have been found. We were informed that from there at a distance of 3 km there was a place called Pillaipalayam (from Gangaikondacholapuram, 5 km). Some told the place name was Pillapalayam. We took an auto and started our fiel...

பௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்

Image
அண்மையில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இராஜேந்திரசோழன் அகழ்வைப்பகம் சென்றபோது, முந்தைய களப்பணிகளின்போது கண்ட அங்கிருந்த புத்தர் சிலைகளைக் காணச் சென்றேன். அங்குள்ள காட்சிப்பேழையில் உள்ள புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா? கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா? என்பதைத் தெளிவு செய்யவே இப்பதிவு.     வலங்கைமான்புத்தூர் புத்தர் அகழ்வைப்பகத்தில் மூன்று புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில்  காட்சிப்பேழையில் இருந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்ற குறிப்போடு இருந்தது. அதனடிப்படையில் ஆய்வேட்டில், உரிய நூல் மேற்கோளோடு கீழ்க்கண்டவாறு பதிந்தேன்: "புத்தர் : தஞ்சை மாவட்டம் வலங்கைமான்புத்தூரிலிருந்து சேகரிக்கப்பட்டது. பத்மாசனத்தில் தியான முத்திரையில் காணப்படுகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய நாளில் வலங்கைமான் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று இருந்ததையும், அச்சமயம் பரவி நின்றதையும் இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது. இதன் உயரம் 27 செமீ அகலம்15 செமீ ( இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம் , ஆசிரியர்கள் மா.சந்திரமூ...