Posts

தஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்

Image
தஞ்சையில் சமணம் நூலின் ஆசிரியர்களில் ஒருவராக அமைந்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். சமணம் தொடங்கி, சமணர்களின் வரலாறு, பழக்க வழக்கங்கள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சமணத்தின் தாக்கம், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்ற கண்ணோட்டத்தில் அமைந்துள்ள இந்நூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன். வெளியீட்டாளர் முகவுரையிலிருந்து : "..........இத்தகு சிறப்புமிக்க தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல சிற்றூர்களில் புதைந்தும், சிதைந்தும், காடுகளுக்கிடையில் கிடந்தவைகளையும் களப்பணியின் வாயிலாகக் கண்டறிந்து  நாளிதழ்களில் அச்செய்திகள் வெளியாயின. இப்பணியில் முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன் ஆகியோர் சேர்ந்தும், தனியாகவும் ஈடுபட்டு சேகரித்த செய்திகளை  "தஞ்சையில் சமணம்" என்னும் இந்நூலின் வழியே தமிழ்ச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்......... "  (ப.1) மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி ஜைன மடத்தின் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகளின் ஆசியுரையிலிருந்து : ".......... பழ...

சமண சுவட்டைத் தேடி : சோழ நாட்டு சமணக்கோயில்கள்

Image
28 மே 2018 அன்று சோழ நாட்டிலுள்ள சமணக் கோயில்களில் மூன்று கோயில்களுக்கு  திரு அப்பாண்டைராஜன், திரு மணி.மாறன், திரு தில்லைகோவிந்தராஜன் உடன் ஆகியோருடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. முன்னரே இக்கோயில்களுக்குச் சென்றிருந்தபோதிலும் சில மாற்றங்களை இக்கோயில்களில் காணமுடிந்தது. நாங்கள் எழுதி வெளிவருகின்ற தஞ்சையில் சமணம் நூலுக்காக செய்திகளைத் திரட்டும் வகையில் இவ்வுலா அமைந்தது. கும்பகோணம் சந்ர ப்ரப பகவன் ஜினாலயம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில்  சந்ரப்பிரப பகவான் சமணக்கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயில் கருங்கற்கலால் வடிக்கப்பட்டுள்ளது. தூண் அமைப்பும், நிலைக்கால் மேலுள்ள பகுதியும் சோழர் கட்டுமானப்பகுதியிலிருந்து எடுத்து வந்து அமைக்கப்பட்டுள்ளது.  கோயில் நுழைவாயில், 2014 தற்போதைய களப்பணியில் மணி.மாறன், தில்லை. கோந்தராஜன், அப்பாண்டைராஜன் கருவறையில் மூலவர் சந்திரப்பிரபா திருமேனி வெள்ளைப் பளிங்குக்கல்லால் உள்ளது. மூலவர் கருவறை கட்டுமானம் தாராசுரம் சோழர் காலத்து கட்டுமானத்தை ஒத்துத் திகழ்கிறது. இக்கட்டுமானத்திற்கான கற்கள் அனைத்தும் இடிபாடுற்ற சோழ...

பௌத்த சுவட்டைத் தேடி: ராசேந்திரப்பட்டினம்

Image
13 மே 2018 சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ வாசகரான சீர்காழியைச் சேர்ந்த திரு செல்வகுமார் ராசேந்திரப்பட்டின புத்தர் சிற்பம் காணாமல் போய்விட்டதாகக் கேள்விப்பட்டதாகவும், அதன் புகைப்படம் இருப்பின் அனுப்பிவைக்கும்படியும் கூறினார். 2007இல் திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது காணப்பட்ட இந்த சிற்பத்தைப் பற்றி நாளிதழில் வந்த செய்தியை அனுப்பிவைப்பதாகக் கூறினேன். 14 மே 2018 மறுநாள்,  வலைப்பூ வாசகரான  திரு அருள்முத்துக்குமரன் முகநூலில் தன் பக்கத்தில் அந்த புத்தர் சிற்பத்தைப் பார்க்கச் சென்றதையும், அது இரண்டு ஆண்டுக்கு முன்பாக திருடப்பட்டுவிட்டதாக அறிந்ததையும் குறிப்பிட்டு, திரு திருவள்ளுவன் அவர்களைச் சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்திருந்தார். ஆய்வில் சேர்ந்த காலம்  முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த களப்பணியின்போது சோழ நாட்டில் பல புதிய புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிற்பங்களைக் காணமுடிந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற களப்பணி, நண்பர்கள் மற்றும் அறிஞர்களின் ஆர்வம் காரணமாக அவர்களுடைய உதவியுடன் ஆய்வு எல்லைக்கு அப்பாலும் சில சிற்பங்க...

சமண சுவட்டைத் தேடி: அடஞ்சூர்

Image
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது புத்தர் என்று கூறப்பட்ட சமணர் சிலையை தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகில் அடஞ்சூரில் பார்த்தோம். அச்சிலையின் புகைப்படம் தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலரில் செய்தியாக வெளியானதும், அது ஒன்றே தற்போது சான்றாக இருப்பதும் மறக்க முடியாத அனுபவமாகும். 28 மார்ச் 2003 தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர் பூதலூரைச் சேர்ந்த திரு சி.வீரமணி*, பூதலூர் பகுதியில் ஒரு புத்தர் சிலை இருப்பதாகக் கூறினார். ஆய்வின்போது பல நண்பர்களும், அறிஞர்களும், மாணவர்களும் இவ்வாறாக உதவி செய்து வந்துள்ளனர். அவ்வகையில் அவர் கூறிய புத்தர் சிலையைப் பார்க்கத் தயாரானேன். 1 ஏப்ரல் 2003   மறுநாளே அச்சிலையைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம். அதன்படி அவருடன் அடஞ்சூர் சென்றேன். பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் சிவந்தி திடல் அருகே உள்ள அடஞ்சூர் உள்ளது. சிவந்தி திடல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலில் அமர்ந்த நிலையிலான சிலையைக் காண்பித்தார். அருகில் உள்ளோர் அச்சிலையை புத்தர் என்றனர...

சோழ நாட்டில் பௌத்தம் : ஏடகம்

Image
ஏடகம் அமைப்பு மாதந்தோறும் நடத்துகின்ற ஞாயிறு முற்றத்தின் மார்ச் மாதச் சொற்பொழிவு 11.3.2018இல் நடைபெற்றது. வழக்கம்போல ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் எழுதிவரும் நிலையில் இம்மாதப் பதிவாக, என்னுடைய உரையினைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.  8.10.2017இல் தொடங்கப்பட்ட ஏடகம், ஞாயிறு முற்றம் சார்பாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பான சொற்பொழிவுகளை நடத்திவருகிறது. அவ்வகையில் என் களப்பணி தொடர்பாக உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன். இவ்விழாவில் தலைமையுரையாற்றிய அறந்தாங்கி நகராட்சி ஆணையர் பே.வே.நவேந்திரன், தமிழகத்தில் பௌத்தம் தொடர்பான இலக்கியச் சான்றுகளையும், பூம்புகார் மற்றும் நாகப்பட்டின புத்த விகாரைகளைப் பற்றியும்  எடுத்துரைத்தார். வரவேற்புரை : ஆதிபராசத்தி தணிக்கைக்குழு உறுப்பினர் திரு கு.சிவராஜா தலைமையுரை :  அறந்தாங்கி நகராட்சி ஆணையர் திரு பே.வே.நவேந்திரன் நன்றியுரை : முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி டி. பவானி நிகழ்ச்சித்தொகுப்பு : செல்வி இராச.பாரதிநிலா அடுத்து சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த தஞ்...