தஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்
தஞ்சையில் சமணம் நூலின் ஆசிரியர்களில் ஒருவராக அமைந்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். சமணம் தொடங்கி, சமணர்களின் வரலாறு, பழக்க வழக்கங்கள், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சமணத்தின் தாக்கம், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிலைகள் என்ற கண்ணோட்டத்தில் அமைந்துள்ள இந்நூலை வாசிக்கவும், கருத்து கூறவும் அன்போடு அழைக்கிறேன்.
வெளியீட்டாளர் முகவுரையிலிருந்து :
"..........இத்தகு சிறப்புமிக்க தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல சிற்றூர்களில் புதைந்தும், சிதைந்தும், காடுகளுக்கிடையில் கிடந்தவைகளையும் களப்பணியின் வாயிலாகக் கண்டறிந்து நாளிதழ்களில் அச்செய்திகள் வெளியாயின. இப்பணியில் முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன் ஆகியோர் சேர்ந்தும், தனியாகவும் ஈடுபட்டு சேகரித்த செய்திகளை "தஞ்சையில் சமணம்" என்னும் இந்நூலின் வழியே தமிழ்ச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்........." (ப.1)
மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி ஜைன மடத்தின் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகளின் ஆசியுரையிலிருந்து :
"..........பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டப் பகுதியிலே இந்த நூலின் ஆசிரியர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது கண்டறிந்தவற்றை அவ்வப்போது நாளிதழ்களில் பதிவு செய்தவைகளைத் தொகுத்தும், சமண சமயத்தின் தொன்மை, தமிழகத்தின் சமணம், தஞ்சையில் சமணமென பல வரலாற்றுச் செய்திகளைப் பதிவிட்டும், இன்றும் இப்பகுதியில் வழிபாட்டிலுள்ள சமண ஆலயங்களைப் பற்றிய செய்திகளையும் தொகுத்து ஏடகம் மையத்தின் முதல் வெளியீடாக தஞ்சையில் சமணம் என்கின்ற நூலை காய்த்தல் உவத்தல் இன்றி நல்லறச் செல்வர்கள் திரு மணி. மாறன், முனைவர் பா.ஜம்புலிங்கம், திரு கோ. தில்லை கோவிந்தராஜன் ஆகிய அறிஞர்கள் வெளியிடுகிறார்கள் என்பதை அறிந்து நூலாசிரியர் அவர்களையும் அவர்களின் இச்சீரிய தொண்டினையும் பாராட்டுகிறோம்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சமணம் பற்றிய நூல்கள் வெளிவந்துள்ள நிலையில் முதன் முதலாகத் தஞ்சையில் சமணம் என்னும் நூலை வெளிக்கொணர முயன்ற அனைவரையும் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.........." (ப.4)
தஞ்சை ஜினாலய அறங்காவலர் ச.அப்பாண்டைராஜ் அவர்களின் ஆசியுரையிலிருந்து :
"..........தொண்டை நாட்டி சமணம், செஞ்சிப்பகுதியில் சமணம், நடுநாட்டில் சமணம், பாண்டிய நாட்டில் சமணம், மதுரையில் சமணம், கொங்கு நாட்டில் சமணம், குமரிப்பகுதியில் சமணம் என தமிழகத்தில் சமணம் தொடர்பான பல தயடங்களை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளதை அறிந்த எனக்கு தஞ்சைப் பணியில் சமணம் குறித்த நூல் வெளிக்கொணர வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது......நூலாசிரியர்கள் மூவரையும் மனமாற வாழ்த்துவதோடு அரியதோர் நூலை வெளிக்கொணர்ந்த மூவருக்கும் தமிழ்ச்சமணர்கள் நன்றிக்கடன்பட்டுள்ளார்கள் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்..........." (ப.6)
முதுமுனைவர் குடவாயில் சுப்ரமணியன் அவர்களின் அணிந்துரையிலிருந்து :
"..........தமிழகத்தில் சமணம் பற்றிய ஆய்வில் தோய்ந்து அரும் தகவல்களை நமக்குத் தந்தவர் அமர மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். அவர் வழிநின்று இம்மூவரும் படைத்த ஏடகத்தின் இவ்வெளியீடு அமண் சமய வரலாறு பேசும் தகைமை சான்ற நூல் என்பதில் எந்த ஐயமும் இல்லை............" (ப.8)
இந்நூல் சமணம், தமிழகத்தில் சமணம், தஞ்சையில் சமணம், சமணச்சுவடிகள், தஞ்சையில் சமணர் சின்னங்கள், பள்ளிச்சந்தம், வழிபாட்டு முறைகள், விழாக்களும் சடங்குகளும், 24 தீர்த்தங்கரர்களின் விவரம், சமணர் யாத்த நூல்களுள் சில கல்வெட்டுகள் உள்ளிட்ட பல முதன்மைத்தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. களப்பணியில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் இருந்த இடங்களும், அவற்றின் வரலாற்றுத்தொடர்பும் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

"தஞ்சையில் சமணம்" நூலின் வெளியீட்டு விழா 29 ஜுன் 2018 அன்று மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு சிறப்பாக நடைபெற்றது.
தினமணி 6 ஆகஸ்டு 2018, வரப்பெற்றோம் பகுதி |

நூல் : தஞ்சையில் சமணம்
ஆசிரியர்கள் : முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ.தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன்
பதிப்பகம் : ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்,
விலை : ரூ.130
தஞ்சையில் சமணம் நூல் தொடர்பான பிற பதிவுகள் ;
ஏடகம் வலைப்பூ, தஞ்சையில் சமணம் நூல் வெளியீடு : வருக, வருக
ஏடகம் வலைப்பூ, தஞ்சையில் சமணம் : வெளியீட்டு விழா : 9 ஜுன் 2018
முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ, தஞ்சையில் சமணம் : நன்றி
Tracing the Jain heritage along Cauvery delta, Indian Express
30 ஆகஸ்டு 2023 அன்று மேம்படுத்தப்பட்டது.
விலை : ரூ.130
அலைப்பேசி : 94434 76597
பதிப்பாண்டு : 2018
தஞ்சையில் சமணம் நூல் தொடர்பான பிற பதிவுகள் ;
ஏடகம் வலைப்பூ, தஞ்சையில் சமணம் நூல் வெளியீடு : வருக, வருக
ஏடகம் வலைப்பூ, தஞ்சையில் சமணம் : வெளியீட்டு விழா : 9 ஜுன் 2018
முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ, தஞ்சையில் சமணம் : நன்றி
Tracing the Jain heritage along Cauvery delta, Indian Express
30 ஆகஸ்டு 2023 அன்று மேம்படுத்தப்பட்டது.
வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteஅருமையான இவ்விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது ஐயா
ReplyDeleteவிரைவில் தங்களைச் சந்தித்து, நூலின் ஒரு பிரதியைப் பெற்றுக் கொள்கிறேன் ஐயா
நன்றி
தங்களது தொண்டு மேலும் தொடர்ந்து சிறப்புற எமது வாழ்த்துகளும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteமிகச்சிறப்பான தங்கள் நூலுக்கு இந்த முன்னோட்டம் (Curtain Raiser) சிகரம் வைத்தாற்போல அமைந்துள்ளது.
ReplyDeleteதங்கள் ஈடுபாடு சேர்ந்துள்ளமையால் நூல் நன்றாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் பல களப்பணியில் ஈடுபடுத்தி வரும் தில்லை கோவிந்தன் அவர்களுடன், இணைந்த திரு.மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநலக்குறைவினால் கலந்து கொள்ள முடியவில்லை.
தங்கள் பணிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஜம்பு சார்.
ReplyDeleteஉங்கள் புத்தகப் பணியும் பிரமிக்க வைக்கிறது !!!
ஜம்புலிங்கம் ஐயாவுக்கு ஒரு வேண்டு கோள் பௌத்த சிலைகளத்தேடீருக்கிறீர்கள் சமணதீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டெடுத்து இருக்கிறீர்கள் தமிழகத்தில் சமணத்துக்கு எதிராக சைவம் இருந்திருக்கிறது என்னைப் போல் ஒரு சாதாரணனுக்கு ஒரே கன்ஃப்யூஷன் இவை குறித்து ஒரு பதிவு விளக்கங்களுடன் எழுதுவீர்களா நன்றி
ReplyDeleteமிக அருமை ஐயா.
ReplyDeleteபடிக்க ஆவலாக உள்ளது.
ReplyDeleteஅருமை 👍 பாராட்டுகள் ஐயா 💐
ReplyDeleteதங்கள் ஆர்வமும் தொண்டும் வியப்புக்குரியது. வாழ்த்துக்கள் ஐயா 💐
ReplyDelete