Posts

பௌத்த சுவட்டைத் தேடி: குழுமூர்

Image
ஜனவரி 2005 எனது ஆய்வினைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்து அறிமுகமானவர்களில் ஒருவர் திரு அரும்பாவூர் செல்வபாண்டியன். தொலைபேசியில் தன்னை அறிமுகப்படுத்தி பேசியபோது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய பட்டியலில் நான் பார்க்காதது செந்துறை வட்டத்தில் குழுமூர் என்னுமிடத்தில் உள்ள புத்தர் சிலை. எழுத்தாளர் பழமலய் அவர்கள் எழுதியுள்ள (இது எங்க சாமி, ஆனந்தவிகடன், 31.10.2004) கட்டுரையில் இச்சிலையைப் பற்றிக் கூறியுள்ளதாகத் தெரிவித்து, அதன் நறுக்கினை எனக்கு அனுப்பிவைத்திருந்தார். ஜூன் 2006 அந்த புத்தரைக் காணும் வாய்ப்பு கிடைக்க ஒரு வருடத்திற்கு மேலானது. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மருதையான்கோயில் என்ற பேருந்து நிறுத்தத்திற்கு வரக்கூறினார். அதன்படி தஞ்சாவூரிலிருந்து அரியலூர் சென்றுவிட்டு (அரியலூர்-செந்துறை-குழுமூர் பேருந்து வரத் தாமதமானதால்) அப்போது நின்றுகொண்டிருந்த திட்டக்குடி/பெரம்பலூர் பேருந்தில் சென்று மருதையான் கோயில் நிறுத்தத்தில் இறங்கினேன். அங்கிருந்து தொடர்புகொண்டபோது அவர் பைக்கில் வந்தார். அவருடன் துங்கபுரம் வழியாக குழுமூர் சென்றேன். ப...

ஆபுத்திர காவியம் : மு.கு.ஜகந்நாதராஜா

Image
பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் எழுதியுள்ள ஆபுத்திரன் வரலாறு கூறும் காவியமான ஆபுத்திர காவியம் படித்தேன். முழுக்க முழுக்க காவிய நடையில் அமைந்துள்ள இந்நூலில் ஆபுத்திரனின் வரலாற்றைத் தந்துள்ளார் ஆசிரியர். முன்னுரையில் அவர் மணிமேகலையின் காவியச் சிறப்பை எடுத்துரைத்துள்ளார். "மணிமேகலை காவியம் மட்டுமே பசிக்கொடுமை பற்றியும் அதைத் தீர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. உலகம் முழுதும் ஒன்றே எனும் உயர்ந்த கருத்தை நிலைநாட்ட உருவாக்கப்பட்டுள்ளது. மணிமேகலையில் வரும் எந்தத் துணைப் பாத்திரங்களும், பசிப்பிணியை மையப்படுத்தியே படைக்கப்பட்டுள்ளன" (ப.12) என்றும், "காவிய உலகில் மணிமேகலைக்கு தனிச் சிறப்புண்டு" என்றும் "இதன் பெருமையை தமிழர்களைவிட பிற மொழியினர் மொழிபெயர்ப்பு மூலமாக அறிந்து பாராட்டியுள்ளனர்" என்றும் கூறுகிறார்.   பன்ம ொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா ".......மணிமேகலையில் புத்தரைப் போற்றுகிறதே தவிர அவரது வாழ்க்கைச் சம்பவமோ, ஜாதகக் கதைகளையோ பற்றி குறிப்பிட்டாலும் அதனை மையப்படுத்தி காவியம் எழுதவில்லை. அது தனித்தன்மையுடைய மாதவியின் மக...

பௌத்த சுவட்டைத் தேடி : பரசுராமர் குளம்

Image
8 மார்ச் 2014  இன்று மதியம் முதல் எனக்கு தொடர்ந்து நண்பர்களிடமிருந்தும், அறிஞர்களிடமிருந்தும் தொலைபேசி அழைப்புகள். "தஞ்சாவூரில் ஏதோ சமணர் சிலை கண்டுபிடித்துள்ளார்களாம், பார்த்தீர்களா? சிலர் புத்தர் என்றும் கூறிக்கொள்கிறார்கள்". தொடர்ந்து மாலை செய்தித்தாளில் 'தஞ்சையில் இன்று மீன் வலையில் சிக்கிய சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்' என்ற தலைப்பில் செய்திவெளியாகியிருந்தது.  வலையில் இரு சிலைகள் சிக்கியதாகவும் அதில் ஒன்று மகாவீரர் சிலை என்றும் இன்னொரு சிலை 11 முகங்களைக் கொண்ட பிரம்மமூர்த்தி சிலை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தியுடன் காணப்பட்ட புகைப்படத்தைப் பார்த்தபோதே ஒரு சிலை புத்தர் சிலை, மகாவீரர் சிலை அல்ல என்பதை உணரமுடிந்தது.  9  மார்ச்  2014 மறுநாள் காலையில் செய்தித்தாள்களில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் சாலையின் அருகில் உள்ள குளத்தில் (ராமநாதபுரம் ஊராட்சி, காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பரசுராமர் குளம்) மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீனவர் வலையில் இரு சிலைகள் சிக்கியதாக செய்தி வெளியாகியிருந்தது. சில செய்தித்தா...

கௌதம புத்தர்: கு.வெ.பாலசுப்பிரமணியன்

Image
 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதியுள்ள  கௌதம புத்தர் என்ற நூல் மூலமாக நம்மை நிகழ்வுகள் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். வரலாற்றுக் கதைச்சுருக்கத்தைத் தொடர்ந்து (பக்.13-16) நாடக உறுப்பினர்களை அறிமுகப்படுத்துகின்றார் ஆசிரியர் (பக்.17-18). காட்சியின் தொடக்கத்தில் புத்தரின் அறநெறிகளைத் தம்ம பதம், மஜ்ஜிம நிகாயம், சம்யுக்த நிகாயம், அங்குத்த நிகாயம், சுத்த பிடகம், மணிமேகலை,  சுத்த நிகாயம் போன்ற நூல்களிலிருந்து  தந்துள்ளார். புத்தரைக் குறித்துப் பல நூல்களிலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்நாடகத்தை உருவாக்கியுள்ளதாகவும், நிகழ்ச்சிகளில் தன் கற்பனைக்கு இடமில்லை என்றும், உரையாடலில் பாத்திரத்தைச் செழுமைப்ப்டுத்த மொழிநடையில் தன் கற்பனை தன்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்திருக்கலாம் என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார்.24 காட்சிகளில் புத்தரின் வாழ்வினை மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகின்றார். ஒவ்வொரு காட்சிக்குள் நுழையும்போதும் படிக்கின்ற உணர்வைவிட களத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  இந்த உரைநடை நாடகத்திலிருந்து சில நிகழ்வுகளைக...

தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்: பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்

Image
பௌத்தம் தொடர்பாக பதிவுகள் அருகிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியாகியுள்ள ஓர் அரிய நூல் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம்.   24.3.2013இல் சென்னையில் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 35 தமிழ்க்கட்டுரைகளையும், ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் பின்வரும் நோக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது: "உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இதை நீக்கியாக வேண்டும். இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன. இவைகளை உலகம் அறியவேண்டும். இக்கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் உலகத்திற்கே பௌத்தத்த...