தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் : பிக்கு போதிபாலா, க.ஜெயபாலன், இ.அன்பன்

பௌத்தம் தொடர்பாக பதிவுகள் அருகிவரும் இக்காலக்கட்டத்தில் வெளியாகியுள்ள ஓர் அரிய நூல் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம்.  24.3.2013இல் சென்னையில் தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 35 தமிழ்க்கட்டுரைகளையும், ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இக்கருத்தரங்கம் பின்வரும் நோக்கங்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதாக தொகுப்பாளர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது:

"உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இதை நீக்கியாக வேண்டும். இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன. இவைகளை உலகம் அறியவேண்டும். இக்கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் உலகத்திற்கே பௌத்தத்தைப் போதித்தவர்கள் தமிழர்களே என்று மெய்ப்பிக்கிறது. எனவே, பௌத்தத்தை மீண்டும் மீட்டெடுக்கவேண்டும். அது தமிழ்ச் சமூக மறுமலர்ச்சிக்குப் பல வகைகளில் வித்திடும்". (ப.III)
 

பௌத்தம் தொடர்பான பல்வேறு தளங்களில் ஒரு சிறப்பான பரந்துபட்ட பார்வையைத் தருகிறது இந்நூல். பௌத்தம் என்ற நிலையில் அனைத்து வகைப் பொருண்மைகளும் இடம்பெற்றுள்ள முறை நூலின் சிறப்பை மேம்படுத்துகிறது. 25 நூற்றாண்டு காலப் பௌத்தத்தை மிகவும் தெளிவாகத் தொகுத்து முன்வைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. 

பௌத்தம் தொடர்பான பதிவுகள் ஆரம்பித்த காலம் முதல் அண்மையில் இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் வரை அனைத்தும் நுணுகி ஆராயப்பட்டுள்ளன. பௌத்தம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் நபர்களையும், அமைப்புகளையும் பற்றி தந்துள்ள முறையில் பௌத்த வரலாறு பற்றிய கையேடாக அமைந்துள்ளது இந்நூல். அசோகர் காலம் தொடங்கி இன்றைய ஆய்வாளர் மேற்கொண்டுள்ள ஆய்வு வரை மிகவும் துல்லியமாகவும், நிதர்சனமாகவும் தரப்பட்டுள்ள விதம் படிப்பவர் மனதில் பௌத்தம் பற்றிய தேடலுக்கான சிறப்பான விடையாக அமைகின்றது.

பண்பாடு (கட்டுரை எண்.1,2,20,24,29,35,38), கலை (3,17,36), இலக்கியம் (4,8,9,10,13,16,18,21,25,28,37,39), காப்பியம் (5,6,7) சமயம் (11,12,14,30,31,32,40), மொழி (15), தத்துவம் (19, 23), வரலாறு (22,26,27,33,34) என்ற பல்வேறு நிலைகளில் அமைந்துள்ள கட்டுரைகளில் அறிஞர்களின் புலமையையும் தேர்ச்சியையும் முழுமையாகக் காணமுடிகிறது.

நவீன பௌத்த இலக்கிய வரலாறு (பக்கம்.33), அசோகர் காலப் பௌத்தம் (ப.204), அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை (ப.153), தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் (பக்.1, 184), இரட்டைக் காப்பியங்கள் தொடங்கி (ப.45) இன்று வரை பௌத்தம் (ப.253), அயோத்திதாசரின் தமிழ்ப் பௌத்தம் (ப.139) என்று பல்வேறு நிலைகளில் பௌத்தம் தொடர்பான எவ்வித விடுபாடுமின்றி விவாதிக்கப்பட்டுள்ள விதம் இத்துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சாதனைகளையும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பொறுப்புகளையும் எடுத்துரைக்கிறது. 

பௌத்தம் தொடர்பான முழுமையான நூல் இல்லை என்றும், பௌத்தத்தில் எழுதுவதற்கு எவரும் இல்லை என்றும் கூறிக்கொள்வோர் இந்நூலை அவசியம் பார்க்க வேண்டும், படிக்கவேண்டும், உணரவேண்டும்.

இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக கருத்தரங்கைச் செம்மையாக நடத்தி அதில் படிக்கப்பட்ட கட்டுரைகளைச் செப்பம் செய்து அரிதின் முயன்று நூல் வடிவம் தந்து சிறப்பாகப் பணியை முடித்துள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். அண்மைக்காலத்தில் இவ்வாறாக ஒரு நூல் பௌத்தம் தொடர்பாக வெளிவந்துள்ளது பௌத்த அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். 

ஓர் அரிய, பெரிய பணியை மேற்கொள்ளும்போது சிறு குறைகள் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. அந்நிலையில் கட்டுரை எண்.39இன் தொடர்ச்சியே கட்டுரை எண்.40 ஆகும். கட்டுரை எண்.42 (41 அல்ல) கருத்தரங்க நிறைவரங்கம் தொடர்பானது. தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பான இந்நூலின் முகப்பட்டையிலும், பின் அட்டையிலும் கருத்தரங்கத் தலைப்பான தமிழ்ப்பண்பாட்டில் பௌத்தம் என்பது தொடர்பான கருத்தை உணர்த்தும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள், சிற்பங்கள் அல்லது ஓவியங்களை வெளியிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 

நிறைவாக, நிறைகளை நோக்கும்போது குறைகள் மிகக் குறைவே என்பதை மனதில் கொள்வோம். பன்முகப் பார்வையில் பல நூற்றாண்டு காலப் பௌத்தத்தின் பெருமையை உணர்த்தும் இந்நூலைப் படிப்போம். பாதுகாப்போம்.

நூல் : தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்
தொகுப்பாசிரியர்கள்: முனைவர் பிக்கு போதிபாலா, முனைவர் க.ஜெயபாலன்,
உபாசகர் இ.அன்பன்
பதிப்பகம் : காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு,
டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600 024
தொலைபேசி : 044-23726882, 9840480232
பதிப்பாண்டு : முதல் பதிப்பு 2013
பக்கங்கள் : VIII+381 = 389
விலை : ரூ.350

-------------------------------------------------------------------------------------------
களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகள் (1993-2012) 
என்ற என் கட்டுரை இத்தொகுப்பில் வெளியாகியுள்ளது. 
-------------------------------------------------------------------------------------------

15 மார்ச் 2015இல் மேம்படுத்தப்பட்டது.    

Comments

  1. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான முயற்சி... வாழ்த்துக்கள் ஐயா.

    மேதின வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  2. தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்
    நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான முக்கியமான தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ள கட்டுரைகளின் அருமையான தொகுப்பை வாங்கிப் ப்டிக்கவுள்ளதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

      Delete
  3. வரப்பிரசாதம் என்பது 100% உண்மை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நூலைப்படிக்கும்போது அத்தகைய உணர்வை என்னால் உணர முடிந்தது. தங்களின் அன்பான வருகைக்கு நன்றி.

      Delete
  4. அய்யா வணக்கம்
    தங்களின் மேலான நூல் மதிப்புரைக்கு பணிவான
    வணக்கம் நன்றி .சிறு குறைகளை சுட்டிகட்டியமை மிக மிக நன்றி .
    கௌதம புத்தர் நாடகம 30 மே வெள்ளிகிழமை 6.30 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்கவிருக்கிறது

    இது புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை வரலாற்று பதிவு.
    .குறிப்பாக இந்நூல் பாபசஹெப் டாக்டர் அம்பேத்கரின் புத்தரும் அவர் தம்மமும் நூலினை தழுவியது மேலும் கருத்துகளை வரவேற்போம்
    அன்புடன்
    எ .அன்பன்

    ReplyDelete
    Replies
    1. கௌதம புத்தர் நாடகம் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். தங்களின் வருகையும் வாழ்த்தும் எனக்கு மன நிறைவைத் தருகிறது. நன்றி.

      Delete
  5. அன்பின் ஜம்புலிங்கம் - அருமையான க்ருத்துரை - தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம் - நூலினைப் பற்றிய விளக்கவுரை நன்று நன்று -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. எனது கருத்துரை மீதான தங்களின் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  6. உண்மை. பௌத்தம் பற்றிய ஒரு மேலோட்டமான கருத்துதான் பலரிடையே காணப் படுகிறது, கொஞ்ச நஞ ஆர்வமும் உங்கள் பதிவுகளை படித்த பிறகே புரிந்தது. நூலை வாங்கிப்படிக்க வேண்டும் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையும், மேலான கருத்தும் இந்நூல் தொடர்பான மதிப்புரைக்கு அணி சேர்க்கின்றன. நன்றி.

      Delete
  7. அறிமுகத்துக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. புத்த பூர்ணிமா தினத்தன்று (14.5.2014) வரப்பெற்ற தங்களது வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  8. தங்களின் பணிபாராட்டத்தக்கது.இன்னும் நிறைய தெரிந்துகொள்ள விருப்பத்தை தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. எனது எழுத்து தங்களது விருப்பத்தைத் தூண்டியதறிந்தும், புத்த பூர்ணிமா தினத்தில் அதைப் பகிர்ந்தது மேலும் மகிழ்ச்சி.

      Delete
  9. தங்களைப்பாராட்ட எமக்கு வயதில்லை ஐயா வணங்குகிறேன், பதிவுடன் தங்களை.....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  10. தங்களின் ஈடுபாடு அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகளின் வழியாகச் சந்திப்போம். நன்றி.

    ReplyDelete
  11. நல்ல நூல் பற்றிய நல்ல அறிமுகத்திற்கு நன்றி. இரண்டாம் பத்தியில் "இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன" என்று வருவது out of context ஆகப் படுகிறது. தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பிற நாடுகளில் பாதுகாக்கப்படுகின்றன- என்றும் வருகிறது. இதற்கு ஆதாரங்கள் உண்டா?

    ReplyDelete
  12. தொகுப்பாளர் உரையில் இப்பதிவு உள்ளது. முன்னது out of context எனக் கருதப்பட்டாலும்கூட, பின்னதுக்கு ஆதாரங்களைத் தொகுப்பாளர்கள் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். பௌத்தம் பரவியுள்ள வெளிநாடுகளுடன் அவர்கள் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அவர்கள் இவை பற்றி அறிந்திருக்கவும், இவ்வாறான கருத்தினைக் கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. ஐயா வணக்கம்,
    பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  14. நன்றி அய்யா, இந்த புத்தகத்தை ஞாயிறன்று வாங்கிவிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. பௌத்தம் பற்றிய பன்முகப் பார்வை கொண்டுள்ள இந்நூலைத் தாங்கள் வாங்கியதறிந்து மகிழ்ச்சி.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. நல்ல நூலறிமுகம்...!
    நல்ல நூலின் அறியும்...!!

    இந்நூலில் எனது கட்டுரையானது " பெளத்த மும் சமணமும்" எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது...

    அத்தோடு எனது நூலான , " தமிழ் அற இலக்கியங்களும் பெளத்த சமண அறங்களும்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பல ஒப்பீட்டுக் கருத்துக்கள் என் நூலினைச் சுட்டாமலே எடுத்தாளப்பட்டுச் சிலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர்...

    ஒருசிலர் மேற்கோள் காட்டியும் உள்ளனர்.. -- முனைவர் சு.மாதவன்

    ReplyDelete

Post a Comment