Posts

பௌத்த சுவட்டைத் தேடி : உள்ளிக்கோட்டை

Image
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையில் 2004இல் நான் பார்த்த இளவரசனை மறுபடியும் அண்மையில் காணச்சென்றபோது பெற்ற அனுபவத்தை அறிய உள்ளிக்கோட்டை செல்வோம். நவம்பர் 2004 மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை என்னுமிடத்தில் புத்தர் சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்ல உரிய வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். அவ்வாறான பெயரில் ஒரு ஊரைப் பற்றி நான் அதுவரை அறிந்திருக்கவில்லை. காத்திருந்த நாள் வந்தது. தஞ்சாவூர்- மன்னார்குடி-பட்டுக்கோடை என்ற நிலையில் மன்னார்குடி-பட்டுக்கோட்டை சாலையில் வடசேரி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் பேருந்தில் உள்ளிக்கோட்டை சென்றேன். வழக்கம்போல் பேருந்தைவிட்டு இறங்கியதும் புத்தரைப் பற்றி விசாரித்தேன். வயதான பெண்மணி ஒருவர் "இளவரசனைப் பார்க்கவந்தியா, சந்தோசமா இருக்குப்பா" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் எனது நடையைத் தொடர்ந்தேன். அருகில் மற்றொருவரிடம் கேட்டபோது அவர், "குதிரையில வேகமாக வந்த இராஜகுமாரனைப் பார்க்க நீங்கள் வந்ததறிந்து மகிழ்ச்சி. இப்பகுதியில் ஆன்மீகத்தில் ஈடுபட்டு தொண்டு செய்துகொண்டிருக்கும் தவத்திரு மாதவகுமாரசுவா...

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலை

Image
மார்ச் 1998 திருச்சிப் பகுதியின் களப்பயணத்தின்போது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்களைச் சந்தித்தேன். திருச்சியில் காணப்படும் புத்தர் சிற்பங்களைப் பற்றிக் கூறினார். அவர் கூறிய இடங்களில் ஒன்று திருச்சி-கோயம்புத்தூர் சாலையில் திருச்சிக்கு மேற்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள பேட்டைவாய்த்தலை.அங்கு செல்ல உரிய நாளை எதிர்நோக்கியிருந்தேன். செப்டம்பர் 1998 திட்டமிட்ட ஒரு நாளில் பேருந்தில் அங்கு சென்றேன். பிற இடங்களைப் பார்த்துவிட்டு, அவ்வூரைச் சென்றடைய மாலை நேரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி, புத்தர் சிலை உள்ள இடத்தைப் பற்றி பல இடங்களில் விசாரித்தேன். அப்போது மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்புறம் ஒரு சிலை உள்ளதாகக் கூறினர். பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் கோயில் இருந்தது. பேருந்து வசதி இல்லாத நிலையில் அருகிலிருந்த கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டேன். வெளியூர்க்காரர்களுக்கு மிதிவண்டி தருவதில்லை என்ற பதில் வந்தது. ஆய்வு தொடர்பாக நான் வந்த விவரத்தைக் கூறி அதற்கான கடிதத்தைக் காண்பித்தேன். "ஆய்வுன்னா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது, தர முடியாதுன்னா தரமுடியாது" என...

பௌத்த சுவட்டைத் தேடி: பட்டீஸ்வரம்

Image
என் ஆய்வு தொடங்கிய நாள் முதல் என்னை அதிகம் ஈர்த்த இடங்களில் ஒன்று பட்டீஸ்வரம் பகுதி. ஏனெனில் அப்பகுதியில் அதிகமான புத்தர் சிற்பங்கள் இருந்ததற்கான பதிவுகள் உள்ளன. பட்டீஸ்வரம் அருகே கோபிநாதப்பெருமாள்கோயில் என்னுமிடத்தில் ஒரு தோப்பில் அருகருகே இரு புத்தர் சிலைகளை முந்தைய களப்பணியில் பார்த்தோம். மறுபடியும் தற்போது பட்டீஸ்வரம் போவோம் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள புத்தரைப் பார்க்க.   அக்டோபர் 1993 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்து, ஆய்வியல் நிறைஞர் ஆய்வு மேற்கொள்ள தொடங்கிய காலகட்டம். எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புரியாமல் இருந்த நிலையில் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் (1940) நூல் எனக்கு முதன்முதலாகத் துணைக்கு வந்தது. அவர் அந்நூலில் புத்தர் சிற்பங்கள் உள்ளதாகக் கூறிச் சில இடங்களைக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் தற்போது புத்தர் சிற்பங்கள் இருக்கிறனவா என்பதை உறுதி செய்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றேன். அவ்வாறாக அவர் சோழ நாட்டில் புத்தர் சிற்பங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட இடங்களில் ஒன்று கும்பகோணம் அருகிலுள்ள பட்...

பௌத்த சுவட்டைத் தேடி : கண்டிரமாணிக்கம்

Image
மறுபடியும் மிக அழகான புத்தர் சிற்பத்தைக் காணும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. இந்த சிற்பம் சோழ நாட்டில் காணப்படுகின்ற 66ஆவது புத்தர் சிற்பமாகும். நான் பார்த்த பெரிய சிற்பங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த வாரம் இச்சிற்பத்தைப் பார்த்தபோது பெற்ற பிரமிப்பையும், தற்போது இச்சிற்பம் உள்ள நிலையை அறிந்தபின் பெற்ற வேதனையையும் பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன். வாருங்கள் கண்டிரமாணிக்கம் செல்வோம். 23 ஜூலை 2012 கண்டிரமாணிக்கம் அருகே புத்தர் சிற்பம் இருப்பதாகத் தனக்குத்தகவல் வந்துள்ளதாக வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்ரணியம் அவர்கள் தெரிவித்தார். மறுநாளே அவருடன் அங்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. 24 ஜூலை 2 012  திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள கண்டிரமாணிக்கம் என்னும் ஊருக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குறிப்பிட்ட இடத்தை நெருங்கும்போது தினத்தந்தி நிருபர் திரு சிவராமன் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் திரு காளிமுத்து ஆகியோர் எங்களுடன் சேர்ந்துகொண்டனர். புத்தர் சிற்பம் இருந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்சென்றனர். மேட்டுத்தெருவில் திரு மணிகண்டன் வீட்டுக் கட...

சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்

Image
------------------------------------------------------------------------------------------- நன்றி: தமிழ்ப்பொழில் ,  துணர் 76, மலர் 5, நவம்பர் 2002 ------------------------------------------------------------------------------------------- கீழ்க்கண்ட   நூலின் பதிப்பாசிரியர் கேட்டபடி அவரிடம் தரப்பட்டு, அது வெளிவராத நிலையில் இக்கட்டுரை  தமிழ்ப்பொழில் இதழுக்கு அனுப்பப்பட்டு, நவம்பர்2002இல்  வெளியானது.  பல வருடங்களுக்குப் பின்  தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் என்ற நூலில் இக்கட்டுரை   வெளியானதை நண்பர்கள் மூலமாக அறிந்தேன்.  ------------------------------------------------------------------------------------------- நன்றி: தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் / பதிப்பாசிரியர் ம.சா.அறிவுடைநம்பி ------------------------------------------------------------------------------------------- பிற கட்டுரைகளை வாசிக்க : கட்டுரைகள் ------------------------------------------------------------------------------------------- 18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.