Posts

கட்டுரைகள், அணிந்துரைகள்/Articles, Forewords

நூல்கள்/இதழ் /இணையதளங் களில் வெளியான கட்டுரைகள் Articles published in Books/Journals/other sites பௌத்தம் தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள் ,  தமிழ்க்கலை , தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-4, மார்ச்-டிசம்பர், 1994, பக்.98-102 குடந்தையில் பௌத்தம் ,  தமிழ்ப்பொழில் , ஏப்ரல் 1996, துணர் 70, மலர் 1, பக்.560-563  பௌத்தத்தில் வாழ்வியல் ,  தமிழ்ப்பொழில் , நவம்பர் 1996, துணர் 70, மலர் 8, பக்.905-912  இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம் ,  தமிழியல் ஆய்வு , ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 1997, பக்.147-151  சைவமும் பௌத்தமும் , ஆறாம் உலகச் சைவ மாநாடு, தஞ்சாவூர், ஆய்வுச்சுருக்கம் , 1997, ப.88 தஞ்சையில் பௌத்தம் ,  தமிழ்ப்பொழில் , மே 1998, துணர் 72, மலர் 1, பக்.3-8  தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம், திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பு, 15.6. 1998 (பதிவு 10.6. 1998) பௌத்தத்தில் மனித நேயம், மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2.8.1998 (கருத்தரங்கில் அளிக்கப்பட்டது) மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செ...

தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள் : தமிழ்க்கலை

Image
தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள் சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும்  பௌத்த சமய வரலாற்றில் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. பூம்புகார் பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையையும் அதன் வணிகம், பண்பாடு தொடர்பான பெருமைகளையும்  பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது. கி.மு.3ஆம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்தது. அவருடைய மகன் மகேந்திரன் பௌத்த சமயத்தைப் பரப்புவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தின் வழியாக இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். வட இந்தியாவில் பர்கூத் என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்தூண் காகந்தி (பூம்புகார்) நகரைச் சேர்ந்த சோமா என்ற பிக்குணியால் தானமாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது (நாகசாமி, 1975 : 2).   மணிமேகலையின் வேண்டுகோள்படி சோழ மன்னன் கிள்ளிவளவன் பௌத்த சமயத்தில் சேர்ந்ததையும், சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளி (கி.பி.150-200), மணிமேகலை பௌத்த மந்திர சக்தியால் வேற்றுருவம் கொண...

சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை : தமிழ்க்கலை

Image
சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை மயிலை சீனி.வேங்கடசாமி (1940), பி,ஆர்.சீனிவாசன் (1960), டி.என். இராமச்சந்திரன் (1965), சி.மீனாட்சி (1979), டி.என்.வாசுதேவராவ் ஆகியோர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக சுமார் 20 இடங்களைக் குறிப்பிட்டுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இப்பகுதியினைச் சார்ந்த 16 புத்தர் சிலைகளின் புகைப்படங்களைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப்பகுதியில் 19 புத்தர் சிலைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆய்வாளர்கள் ஆங்காங்கே சில புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து வரலாற்றுலகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளனர்.  1993இல் பௌத்த ஆய்வு தொடங்கிய நாள் முதல் இன்று வரை சோழ நாட்டில் இவற்றைப்போல இரு மடங்கு எண்ணிக்கையிலான புத்தர் சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் களப்பணி மேற்கொண்டபோது நேரடியாகக் ...