பௌத்தம்-களப்பணி

14.9.2013 அன்று ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரி  (Rotary Club of Thanjavur Cauvery) சார்பாக நடைபெற்ற வாராந்திரக் கூட்டத்தில் "பௌத்தம்-களப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். 

  • அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலுவலகப்பணியாளர்கள் பகுதி நேர முனைவர்ப் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஆய்வியல் நிறைஞர் பட்டம் மேற்கொண்டபின் எளிதாக முனைவர்ப் பட்டம் மேற்கொள்ளும் சூழல்.
  • தஞ்சாவூரில் அருங்காட்சியகங்களில் முதன்முதலாக புத்தர் சிலைகளின் அமைப்பைக் காண்பதற்காக களப்பணி மேற்கொண்டது.
  • அய்யம்பேட்டையில் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியை திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அவர்களின் துணையுடன் கண்டது.
  • திருச்சி மாவட்டம், மங்கலத்தில் மீசையுடன் உள்ள புத்தரைக் கண்டுபிடித்து அச் செய்தி நாளிதழ்களில் வெளியானது.
  • மூல அனுமார் கோயில் பின்புறம் இருந்த சமணர் சிலையை முனைவர் வீ.ஜெயபால் அவர்களின் உதவியுடன் காணச்சென்றது.


போன்றவை உள்ளிட்ட பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். 

ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரியில்  கலந்துகொண்டு உரையாற்றியது ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக அமைந்தது.

 
-------------------------------------------------------------------------------------------
நன்றி: ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் காவேரி
-------------------------------------------------------------------------------------------

Comments