பௌத்த சுவட்டைத் தேடி: ஆவுடையார்கோயில்
புதுக்கோட்டை, தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் திரு ஆ.மணிகண்டன், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் தான் கண்டுபிடித்த தலையில்லாத ஒரு புத்தர் சிலையைக் காண அழைக்கவே அவருடைய குழுவினருடன் 16 ஆகஸ்டு 2025இல் களப்பணி சென்றேன். அச்சிலையைப் பற்றியும், அது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளையும் காண்போம்.
வரலாற்றறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும் (1957) நூலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடிப்பட்டி, செட்டிப்பட்டி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவ்விடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடியவில்லை.
இரு புத்தர் சிலைகள் இங்கு இருந்ததாக பதிவுகள் உள்ளன. சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் தொல்லியல் பிரிவின் முன்னாள் காப்பாட்சியரான
பி.ஆர்.சீனிவாசன், “தென்னிந்தியாவில் புத்தர் சிலைகள்” (1960) என்ற கட்டுரையில் கரூரில்
உள்ளதாகக் குறிப்பிடும் ஒரு புத்தர் சிலை, நிலவளமுடைய அய்யனார் கோயிலில் உள்ளது. புதுக்கோட்டை,
அரசு அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் முனைவர் ஜெ.ராஜா முகமதுவால் வன்னிச்சிப்பட்டினத்தில்
2002இல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலை, 2008இல் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை இம்மாவட்ட பௌத்த சமய வரலாற்றுக்கு முக்கியமான சான்றாக அமைந்துள்ளது.
நாளிதழ், சமூக வலைதளங்களில் செய்திகள்
![]() |
![]() |
தினமலர், புதுக்கோட்டை, 27 ஆகஸ்டு 2025 |
![]() |
தினமலர், சென்னைப் பதிப்பு, 27 ஆகஸ்டு 2025 |
![]() |
மக்கள் குரல், 27 ஆகஸ்டு 2025 |
- "புத்தர் சிலை இங்கே, தலை எங்கே?....." நக்கீரன், 26 ஆகஸ்டு 2025
- "கருங்கல்லால் ஆன புத்தர் சிலை கண்டுபிடிப்பு..", சன் டிவி, 26 ஆகஸ்டு 2025
- தலையில்லா புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 26 ஆகஸ்டு 2025
- "ஆவுடையார்கோயில் வரலாற்றில் புதிய திருப்பம்...." பப்ளிக், 26 ஆகஸ்டு 2025
- "கர்ணன் படத்தில் பார்த்த அதே பொக்கிஷம்", பிகைண்ட்வுட்ஸ் தளம், 27 ஆகஸ்டு 2025
- "Headless Buddha statue Discovery at Avudayarkovil...", Three Star Spot, 27 August 2025
தங்களின் வருகையால் நாங்கள் பெருமிதமடைகிறோம்
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteதங்கள் களப்பணி தொடர வாழ்த்துகள்.
சிறப்பான தகவல்கள் ஐயா. படங்களுடனும், பிற ஆய்வாளர்களின் ஆய்வுக் கருத்துகளுடனும் கட்டுரை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது ஐயா
ReplyDeleteதங்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் முனைவர் அவர்களே....
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteதங்களின் தேடல் தொடரட்டும்
சிறப்பு...
ReplyDeleteநற் தகவல் ...
அடியேனும் அறிந்து கொண்டேன்.. தம்பியின் தேடல் தொடரட்டும்....