Posts

Showing posts from 2019

சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) : Shanlax

Image
21, 22 ஜுன் 2019 ஆகிய நாள்களில் தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் தமிழும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க இதழில் வெளியான சோழ நாட்டில் பௌத்தம் : களப்பணி (1993-2018) என்ற தலைப்பிலான என் கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன். கட்டுரையைக் கேட்டு வாங்கி அனுப்பிவைத்த திரு ஈ.அன்பன், வெளியிட்டு உதவிய முனைவர் க.ஜெயபாலன், இதழை அனுப்பிவைத்த முனைவர் ச. பாலச்சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

In search of imprints of Buddhism : Pillaipalayam, Ariyalur district, Tamil Nadu

Image
During our field study on 25 August 2019 we found a Buddha at Pillaipalayam in Ariyalur district of Tamil Nadu. Alongwith Dr M.Selvapandian and Mr Ravikumar the field work was carried out. We planned to meet at the Cross road near Gangaikondacholalpuram. I arrived earlier and as there was some delay in their arrival    due to non availability of the bus , I asked Mr Selvapandian if there were any interesting place nearby. He informed me about the sculptures found in Sengalmedu which was at a distance of 1.5 km from there. By walk I reached the place and saw the beautiful sculptures there. Then I returned. By now they also joined with me. After a brief discussion at Cross road we started searching  about the place where the Buddha was said to have been found. We were informed that from there at a distance of 3 km there was a place called Pillaipalayam (from Gangaikondacholapuram, 5 km). Some told the place name was Pillapalayam. We took an auto and started our fiel...

பௌத்த சுவட்டைத் தேடி : வலங்கைமான்புத்தூர்

Image
அண்மையில் மேற்கொண்ட களப்பயணத்தின்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இராஜேந்திரசோழன் அகழ்வைப்பகம் சென்றபோது, முந்தைய களப்பணிகளின்போது கண்ட அங்கிருந்த புத்தர் சிலைகளைக் காணச் சென்றேன். அங்குள்ள காட்சிப்பேழையில் உள்ள புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்ததா? கங்கைகொண்டசோழபுரத்தைச் சேர்ந்ததா என்பதைத் தெளிவு செய்யவே இப்பதிவு.      வலங்கைமான்புத்தூர் புத்தர் அகழ்வைப்பகத்தில் மூன்று புத்தர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில்  காட்சிப்பேழையில் இருந்த புத்தர் வலங்கைமான்புத்தூரைச் சேர்ந்தது என்ற குறிப்போடு இருந்தது. அதனடிப்படையில் ஆய்வேட்டில், உரிய நூல் மேற்கோளோடு கீழ்க்கண்டவாறு பதிந்தேன்: "புத்தர் : தஞ்சை மாவட்டம் வலங்கைமான்புத்தூரிலிருந்து சேகரிக்கப்பட்டது. பத்மாசனத்தில் தியான முத்திரையில் காணப்படுகிறது. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பண்டைய நாளில் வலங்கைமான் பகுதியில் புத்தர் கோயில் ஒன்று இருந்ததையும், அச்சமயம் பரவி நின்றதையும் இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது. இதன் உயரம் 27 செமீ அகலம்15 செமீ (இராசேந்திர சோழன் அகழ்வைப்பகம், ஆசிரியர்கள் மா....

பௌத்த சுவட்டைத் தேடி : பிள்ளைபாளையம், அரியலூர்

Image
25 ஆகஸ்டு 2019 அன்று மேற்கொள்ளப்பட்ட களப்பணியின்போது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள பிள்ளைபாளையம் என்னுமிடத்தில் புத்தர் சிலையினைக் கண்ட அனுபவத்தை இப்பதிவில் காண்போம். பௌத்த, சமண மற்றும் பிற சிற்பங்களைத் தேடி களப்பணி மேற்கொள்ளும் நண்பர் முனைவர் ம.செல்வபாண்டியன் பெரம்பலூரிலிருந்தும்,  முனைவர் பட்ட ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் திருச்சியிலிருந்தும் வந்தனர். நான் தஞ்சாவூரிலிருந்து அவர்களோடு இணைவதாக முடிவெடுத்து, கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள குறுக்கு ரோட்டில் சந்தித்துப் பின்னர் களப்பணியைத் தொடங்கத் திட்டமிட்டோம். தஞ்சாவூரிலிருந்து கீழப்பழுவூர்-ஜெயங்கொண்டம் -கங்கைகொண்டசோழபுரம் குறுக்கு ரோடு என்ற வகையில் நான் வந்து சேர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டேன். பேருந்து கிடைக்காததால்  அவர்கள் அங்கு வர தாமதமாக, அருகில் வேறு ஏதாவது இடம் இருக்கிறதா என்று திரு செல்வபாண்டியன் அவர்களிடம் கேட்டேன். அவர் முதலாம் இராஜேந்திரசோழன் வெற்றியின் அடையாளமாக கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவந்த சிற்பங்களை கீழச்செங்கல்மேட்டில் காணலாம் என்றார். அதன்படி அங்கிருந்து 1.5 கிமீ தொலைவில் இருந்த அவ...

பௌத்த சுவட்டைத் தேடி : திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்

Image
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது திருப்பராய்த்துறையில் முதன்முதலாகக் காணப்படுகின்ற புத்தர் சிலையாகும்.  திருப்பராய்த்துறை புத்தர்  புகைப்படம் நன்றி : பிரெஞ்சு ஆய்வு நிறுவனம், பாண்டிச்சேரி  தகவல் உதவி : திரு க.ரவிக்குமார் ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் உடன் பா.ஜம்புலிங்கம் புத்தர், திருப்பராய்த்துறை, கி.பி.10ஆம் நூற்றாண்டு,  என்ற குறிப்புடன் அந்த சிலை உள்ளது.  திருப்பராய்த்துறை புத்தர் சிலைக்குப் பின்புறம் பிரபை உள்ளது. மார்பில் ஆடையும், தலையில் தீச்சுடரும் உள்ளன.  முகம் தெளிவாகத் தெரியவில்லை.   வழக்கமாக புத்தர் சிலைக்குள்ள பிற கூறுகள் இதில் உள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பௌத்த எச்சங்களின் சமூக மற்றும் கலாச்சார மதிப்பு  (Social and cultural values of Buddhist remnants in Tiruchirappalli district), என்ற தலைப்பில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகின்ற ஆய்வாளர் திரு க.ரவிக்குமார் (8344856826)  திருச்சி அருகேயுள்ள திரு...

பௌத்த சுவட்டைத் தேடி : பேட்டைவாய்த்தலையில் மற்றொரு புத்தர்

Image
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையில் வயலில், அடையாளம் தெரியாத வகையில் முகம் வெள்ளையடிக்கப்பட்ட நிலையில், ஒரு புத்தர் சிலை இருந்ததை அண்மையில் அறியமுடிந்தது. இது பேட்டவாய்த்தலையில் இருந்த இரண்டாவது புத்தர் சிலையாகும். புத்தர் சிலைகளைத் தேடி களப்பணி மேற்கொண்டபோது வரலாற்றறிஞர் திரு கலைக்கோவன் அவர்கள் கூறிய தகவல்களில் ஒன்று பேட்டைவாய்த்தலையில் ஒரு புத்தர் சிலை உள்ளது என்பதாகும். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் பேட்டைவாய்த்தலையில் சென்று பல இடங்களில் தேடி பின்னர் சிலை இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. மார்பில் உள்ள ஆடையின் மூலமாக அது புத்தர் என்பதை உறுதி செய்யமுடிந்தது. மத்யார்ஜுனேஸ்வர் கோயிலின் முன்பாக இருந்த புத்தர். புகைப்படம் : பா.ஜம்புலிங்கம்  திருச்சி-கரூர் சாலையில் பேட்டைவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலின் முன்பாக அச்சிலை இருந்தது. அப்பகுதியில் முன்பு மூன்று சிலைகள் இருந்ததாகவும், இரண்டு சிலைகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும் சிலர் கூறினர். (சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.152) சிலையைப் பார்த்துவிட்டு, திருச்சி அர...

தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி

Image
மதுரையில் 20 மே 2019 அன்று தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைத் தந்ததோடு விழாவினைத் தொடங்கிவைத்த திரு ஸ்டாலின் ராஜாங்கம், அறிமுக உரையாற்றிய திரு அன்புவேந்தன், உடன் உரையாற்றிய பெண்ணியலாளர் கீதா நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.  இவ்விழாவினைப் பற்றிய செய்திகளையும், புகைப்படங்களையும் நண்பர்கள் முகநூலில் பகிர்ந்ததைப் பதிவதில் மகிழ்கின்றேன், அவர்களுக்கு நன்றியுடன்.     விழாவினை ஒருங்கிணைத்த பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம் அறிமுகவுரையாற்றிய திரு அன்புவேந்தன் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பெண்ணியலாளர் கீதா,  திரு காளிங்கன் உடன்     பள்ளியைத் தொடங்கிவைத்து உரையாற்றல், அருகில் பெண்ணியலாளர் கீதா       பெண்ணியாளர் கீதா உரையாற்றல் திரு காளிங்கன், திரு அன்புவேந்தன், பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பெண்ணியலாளர் கீதா உடன்   ...