Posts

தமிழகத்தில் புத்தர் இருக்கிறார்

Image
தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பெரண்டாக்கோட்டை என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாம்பான் என்ற கடவுளுக்கு வழிபாடு நடத்திவருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நாம் அந்த கிராமத்திற்குச் சென்று சாம்பான் வழிபாடு நடைபெறும் இடத்தில்  உள்ள சிலையைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாம்பான் என்று சொல்லி வழிபடும் சிலை புத்தரின் சிலை. இந்த குக்கிராமத்தின் உள்ளே புதர்கள் மண்டிய அடர்ந்த காடு போன்ற திடலில் மார்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் உள்ளே புதைந்துள்ள நிலையில் தலையை மட்டும் வெளியே காட்டி மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் புத்தர். இந்த புத்தர் சிலை சாம்பான் என்ற பெயரில் காலம்காலமாக இங்குள்ள ஒரு சமூகத்தால் வணங்கப்படுகிறது. இந்த புத்தரை சாம்பானாக வணங்கும் மக்கள் "எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்திலிருந்து இந்த சிலையை சாம்பான் சாமின்னுதான் கும்பிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்குதான் விசேஷம். அன்னைக்கு இரவு இந்த சிலைக்கு பூசை செய்து வழிபாடு செய்வோம். அதுபோக, வருடத்திற்கு ஒருநாள்...

வெற்றிக்கான வழி இலக்கு நோக்கிய பயணம் : சும்மா வலைப்பூ

Image
வலைப்பதிவர் திருமதி தேனம்மை லெஷ்மணன், அவரது தளத்தின் சாட்டர்டே போஸ்ட் பதிவிற்காக என்னிடம் ஒரு கட்டுரை கேட்டிருந்தார். என் பௌத்த ஆய்வினை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரையை அவரது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். அவர் என்னை அறிமுகப்படுத்திய விதம் என்னை நெகிழவைத்துவிட்டது.  எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.  இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ...

பௌத்த சுவட்டைத் தேடி : கங்கைகொண்ட சோழபுரம்

Image
10 பிப்ரவரி 1997 சோழ நாட்டில் பௌத்தம் என்ற எனது ஆய்வில் திருச்சி மாவட்டமும் அடங்கும் என்ற நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களுக்கு களப்பணி செல்லத் திட்டமிட்டேன். தஞ்சாவூரில் பல இடங்களைச் சுற்றியதால் ஓரளவு என்னால் திட்டமிட முடிந்தது. திருச்சியில் பார்க்வேண்டியவை மற்றும் பார்க்க வேண்டியவர்கள் என்ற நிலையில் திட்டமிட்டு தொல்லியல் துறை பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் சென்றேன்.  அப்போது திருச்சி அருங்காட்சியக் காப்பாளர் திரு ராஜமோகன் அவர்களுடன் விவாதித்ததில் எனக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று, அரியலூர் கோட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரு புத்தர் சிலை என்பதுதான். நான் களப்பணி சென்ற காலத்தில் அரியலூர் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. ஆய்வின் களம் என்ற நிலையில் அரியலூர் செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன்.   டி.என்.வாசுதேவராவ் (1979) ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாகக் குறிப்பிட்ட இடங்களில் அரியலூர் புத்தரும் ஒன்று. புதுச்சேரி பிரெஞ்சு ஆ...

பௌத்த சுவட்டைத் தேடி : சுத்தமல்லி

Image
ஆகஸ்டு 1999 பௌத்த ஆய்வு தொடர்பாக களப்பணி மேற்கொண்டபோது தமிழகத்திலுள்ள பல அருங்காட்சியகங்களுக்குச் சென்று சோழ நாட்டு புத்தர் சிலைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கச் சென்றேன். களத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவத்திலிருந்து வித்தியாசமானது அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளைக் காணும்போது கிடைக்கும் அனுபவம். அவ்வகையில் சுத்தமல்லி சிலையைக் கண்டேன். இந்த சுத்தமல்லி எந்த மாவட்டத்தில் தற்பொழுது உள்ளது என்ற ஆர்வத்தை உண்டாக்கியது இந்தக் களப்பணி. வாருங்கள் பயணிப்போம். சுத்தமல்லி புத்தர் (அரசு அருங்காட்சியகம், சென்னை) சென்னை எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகம் சென்றபோது சோழ நாடு தொடர்பான மூன்று புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. அவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழி (நின்ற நிலை புத்தர்), எரையூர் (அமர்ந்த நிலை) மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி (அமர்ந்த நிலை) என்ற குறிப்புடன் இருந்தன. முதன்முதலாக நின்ற நிலையிலான புத்தரின் கற்சிலையை அங்குதான் கண்டேன். சுத்தமல்லி புத்தர் சிலை 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற குறிப்போடு (Accession No.1432/62) காணப்பட்டது. தஞ்...

புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் : எஸ்.ஏ.எதிரிவீர

Image
கடந்த பதிவில் களப்பணி சென்றுவந்த நிலையில் தற்போது பௌத்தக் கொள்கைகள் தொடர்பான ஒரு நூலைப் பார்ப்போம். ஆய்வில் சேர்ந்த காலகட்டத்தில் நான் படித்த நூல்களில் ஒன்று பௌத்த அடிப்படைக் கொள்கைகளைக் கொண்ட புத்த தம்மம் அடிப்படைக்கொள்கைகள் என்னும் நூல்.  பௌத்தக் கொள்கைகளை மிகவும் எளிதாக இந்நூல் முன்வைக்கிறது. புத்தரும் பவுத்தமும், புத்தரின் வாழ்க்கை, தம்மம், சில அடிப்படை போதனைகள், நான்கு உன்னத வாய்மைகள், உன்னத எண்வழிப்பாதை, மனித ஆளுமையின் பகுப்பாய்வு, இருப்பின் உண்மை நிலை, மறுபிறப்பு, தியானம், நிப்பாணம், அறவோர், சங்கம் போன்றவை உள்ளிட்ட 21 தலைப்புகளைக் கொண்டமைந்துள்ளது. இந்நூலில் காணப்படும் சில கருத்துகளைக் காண்போம். புத்தரின் போதனைகள் கற்கத்தக்கன. பயிலத்தக்கன. உணரத்தக்கன. நடைமுறைப்படுத்துதலும், உணர்தலும் வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் வை உடனுக்குடன் பயனளிக்கின்றன. (ப.8) ஒருவர் ஒரு கயிற்கைக் கண்டு பாம்பென எண்ணிக்கொண்டால் அங்கே அச்சம், சலனம், கவலை, துன்பம் அனைத்தும் தோன்றுகிறது. இருந்தாலும், அது உண்மையில் ஒரு துண்டுக்கயிறே என்று அவர் அறியமுற்படும்போது அச்சம், சலனம், கவலை, துன்பம் ஆகிய எதுவ...