Posts

களத்தில் இறங்கும் முன் அறிமுகம் : தமிழ் இன்று வலைப்பூ

Image
(முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். சோழ நாட்டில் காணப்படும் பௌத்தச் சுவடுகளைப் பற்றிக் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார். தன்னுடைய களப்பணியில் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் இனி நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். இந்த வாரம் அறிமுகத்துடன்... 1993இல் தொடங்கி தொடர்ந்து நான் மேற்கொண்டு வரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது பல அனுபவங்களை நான் பெற்றிருக்கிறேன். களத்தில் இறங்கும் முன்பாகச் சிந்திக்கத் தொடங்கியபோது ஆய்வு செய்ய விரும்பும் என்னுடைய விருப்பத்திற்கு வந்த ஆதரவைவிட மாற்றுக் கருத்துகள் அதிகம் இருந்தன. பல நண்பர்களும் ஆய்வாளர்களும், ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது.   தம்பி, நீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும். உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல். ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவசியமா இதுல தலையிடாதே. உன்னால முடியாது. வேலையும் பாத்துக்கிட்டு, ஆய்வும் செய்...

சமண சுவட்டைத் தேடி : பூதலூர், திருவையாறு வட்டங்கள்

Image
மே 2007இல் வளையமாபுரத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் சிற்பம் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அச்செய்திக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த பூண்டி புட்பம் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர்  த.இலட்சுமணமூர்த்தி, திருக்காட்டுப்பள்ளி அருகே தன் சொந்த ஊரான டி.கள்ளிக்குடியில் ஒரு சமணரைப் புத்தர் என்று கூறி அங்குள்ளோர் வழிபடுவதாகக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் ஜூன் 2003இல் அடஞ்சூர் என்னுமிடத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் என்றழைக்கப்படும் சமணரைப் பற்றிக் கூறியிருந்தேன். அவர் சொன்ன சிற்பத்தைப் பார்க்கும் வாய்ப்பு உடனடியாக அமையவில்லை.  திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3.11.2011இல் களப்பணியின்போது இது பற்றிக் கூறியிருந்தேன். அடுத்த களப்பணியில் அச்சிற்பத்தைப் பார்க்கச் செல்லலாம் என முடிவெடுத்து இலட்சுமணமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஓரிரு நாளில் அவ்விடத்திற்குச் சென்றுவிட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிற்பம் திருட்டுப் போய்விட்டதாக உள்ளூரில் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தார். சிற்பம் இருந்த இடத்தையாவது பார்க்க வேண்டும் என...

சமண சுவட்டைத் தேடி : திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்

Image
எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன்.  எனது கட்டுரைகளில் அத்தொகுப்பு பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணர் சிற்பங்களைப் பார்க்க விரும்பி முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டனர்.  எனது ஆய்வு பௌத்தம் தொடர்பானதாக இருப்பினும், எனது வலைப்பூவில் களப்பணியில் கண்ட சமணர் சிற்பங்களைப் பற்றி ஓர் இடுகை இட்டிருந்தேன். அதனடிப்படையில் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன்.  எனது மேற்பார்வையில் ஓர் ஆய்வுத்திட்டத்தை (G.Thillai Govindarajan, Jainism in Thanjavur district, Tamil Nadu , Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 110 011, Project Report, May 2010) மேற்கொண்ட திரு கோ. தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைத்தபோது அவரும் மனமுவந்து எங்களுடன் இணைந்துகொண்டார். 3.11.20...

குடந்தையில் பௌத்தம் : தமிழ்ப்பொழில்

Image
குடந்தையில் பௌத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில்  ஆய்வியல் நிறைஞர்  பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வைத் தொடங்கியபோது பௌத்தம் தொடர்பான பதிவுகளைத் தேடி களப்பணி மேற்கொண்டேன்.  அவ்வாறான ஒரு களப்பணியின்போது கும்பகோணம் அருகே புத்தர் கோயில் இருந்ததற்கான ஒரு கல்வெட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதை அறிந்தேன்.  கும்பகோணம் பகுதியில் பௌத்தம் இருந்ததற்கான அந்த அரிய சான்றை மையமாகக் கொண்டு கட்டுரை எழுதினேன். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பொழில் இதழில் வெளியான என்னுடைய முதல் கட்டுரை அதுவேயாகும். அக்கட்டுரையே இம்மாத இடுகையாகும். என்னுடைய அந்த கட்டுரையையும், பிற கட்டுரைகளையும் வெளியிட்டு வரும் தமிழ்ப் பொழில் இதழுக்கு நன்றி. இனி பௌத்தச் சுவட்டைத் தன்னகத்தே கொண்ட கும்பகோணத்திற்குப்  பயணிப்போம்...........  குடந்தையின் பெருமை எப்போதும் வற்றாத நீர்ப்பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபய நாடு, கிள்ளி நாடு, செம்பியர் நாடு, அகளங்க நாடு, பெருநீர் நாடு, பொன்னிநாடு எனப் பல பெயர்கள் உண்டு. இந்நாட்டி...

பௌத்தச் சுவட்டைத் தேடி : கோபிநாதப்பெருமாள்கோயில்

Image
சோழ நாட்டில் பட்டீஸ்வரம் பகுதியில் அதிகமான எண்ணிகையிலான புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து என்னால் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் 1993இல் தேட ஆரம்பித்து பட்டீஸ்வரம் பகுதியில் இரு சிலைகளைக் கண்டுபிடித்தபோது பெற்ற மகிழ்ச்சி ஆகஸ்டு 2011இல் அச்சிலைகளைத் தேடிப் போய் அவை காணாமல் போனதை அறிந்ததும் மறைந்துவிட்டது. அது தொடர்பான  அனுபவப் பதிவு.              அக்டோபர் 1993 பட்டீஸ்வரம் கிராம தேவதை கோயிலில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி அவரது பௌத்தமும் தமிழும் என்ற நூலில் கூறிய செய்தியை அடிப்படையாகக்கொண்டு துர்க்கையம்மன் கோயில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாகத் தேடி கடைசியில் பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் உள்ள முத்துமாரியம்மன்கோயிலில் புத்தரைத்தேடி கண்டுபிடித்து அது தொடர்பான செய்தியை ஆய்வேட்டில் சேர்த்திருந்தேன்.அக்டோபர் 1993 முதல் தேட ஆரம்பித்து அக்டோபர் 1998இல்தான் அதனைக் கண்டுபிடிக்க முடிந்தது.  அவ்வாறு அதனைத்தேடி சென்றபோது பட்டீஸ்வரம் பகுதியில் இன்னும் சில சிலைகள் இருப்பதாகத் தெரிய வரவே, பழையாறை, ...