Posts

Showing posts with the label பேட்டி

களப்பணியில் நிறைய சிரமங்களைச் சந்தித்தேன்

Image
உங்களைப் பற்றிய சிறுஅறிமுகம், கல்வி, பணியாற்றிய விவரங்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2.4.1959இல் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பினை அங்கு நிறைவு செய்தேன். தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபின், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக் கெழுத்தராகச் சேர்ந்து, சுமார் 35 ஆண்டு காலம் பணியாற்றி, உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றேன். தங்களின் எம்பில் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு தலைப்பு? முனைவர் பட்ட ஆய்வு எங்கே நடைபெற்றது? நெறியாளர் யார்? தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (1995) என்ற தலைப்பில் எம்பில் ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், சோழ நாட்டில் பௌத்தம் (1999) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டேன். இரண்டிற்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மைய இயக்குநர் பேராசிரியர் க.பாஸ்கரன் நெறியாளராக இருந்தார். பௌத்த ஆய்வு சிந்தனை எப்போது ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் எம்பில் பட்டத்திற்காக கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் ஆய்வு செய்ய விரும்பினேன். ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் அளிக்கவேண்டிய நிலையில், அது சிரமம் என்று உணர்ந்து தொடர்புடைய தலைப...

ஆனைமங்கலச்செப்பேடுகள் சொல்வது என்ன?

Image
சோழர் காலத்தைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் 1700-களில் டச்சு ஆளுமையின்போது நாகப்பட்டினத்துக்கு கிறிஸ்தவ மதப்பணிக்காக வந்த ஃபுளோரன்டியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்து நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழ், சம்ஸ்கிருத மொழிகளைக் கொண்ட 21 செப்பேடுகளும் சுமார் 31 கிலோ எடையுடையவை. இதில் பிணைக்கப்பட்டுள்ள செப்பு வளையத்தில் மாமன்னர் ராஜேந்திரசோழனின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.  இந்தச் செப்பேடுகளில் பௌத்த விகாரைக்கு ராஜராஜசோழன் வழங்கிய அறக்கொடைகள் வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நெதர்லாந்தில் லைடென் பல்கலைக்கழத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தச் செப்பேடுகளை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது, நெதர்லாந்தில் உள்ள லைடென் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த  சோழர் கால ஆனைமங்கலச் செப்பேடுகள் தி ஹேக் நகரில் மே 16இல் நடைபெற்ற விழாவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.  தமிழர்களின் மிகச் சிறந்த பொக்கிஷமாகப் போற்றப்படும் இந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் குறித்து தஞ்சாவூரைச் ச...

புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம்

Image
புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் தமிழகத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் தரம் குறைந்து வருகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்வது உண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் தரமான ஆய்வாளர்கள் தோன்றித் தரமான ஆய்வேடுகளை வழங்கி வருவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவ்வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகவும், சுருக்கெழுத்தராகவும் பணியைத் தொடங்கிப் படிப்படியே தம் அயராத உழைப்பாலும் ஆர்வத்தாலும் முனைவர் பட்டம் வரை ஆய்வு செய்து பட்டம் பெற்று, அப் பல்கலைக்கழத்தின் உதவிப் பதிவாளர் வரை உயர் பொறுப்புகளைப் பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கடந்துவந்த பாதை, ஆய்வுத்துறையில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் என்பது என் நம்பிக்கை. பா. ஜம்புலிங்கம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பாலகுருசாமி - தர்மாம்பாள். பெற்றோரின் கண்டிப்பால் மட்டும் பள்ளிக்குச் சென்ற இவருக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. நாளும் வகுப்பாசிரியர் “பிடிவாரண்டு” போட்டுதான் இவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்...

ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு

Image
    ஆய்வுக்கு வரையறைகள் மட்டுமல்ல எல்லைகளும் உண்டு - பா. ஜம்புலிங்கம் நேர்காணல் பா.ஜம்புலிங்கம் முப்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில், குறிப்பாக சோழநாட்டுப் பகுதியான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள புத்தர் சிலைகளையும், பௌத்தம் தொடர்பான தடயங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகிறார். கள ஆய்வு மூலம் சோழமண்டத்தில் கண்டடைந்த புத்தர் சிலைகளை தொகுத்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற நூலினை 2022-ல் வெளியிட்டுள்ளார். புத்தர் சிலைகளுக்கான தேடலில் இவர் கண்டடைந்தவற்றை தொகுக்கும் இந்த புத்தகம் தமிழக அளவில் ஒரு முன்மாதிரி. எழுத்தாளர்கள் அ மார்க்ஸ், எஸ் ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருக்கின்றனர். இதுவன்றி ஜம்புலிங்கம் நண்பர்களுடன் இணைந்து 'தஞ்சையில் சமணம்' என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.  தொடர்ந்து..தளத்தில் வாசிக்க: குருகு இணைய இதழ் ------------------------------------------------------------------------------------------- நன்றி: தாமரைக்கண்ணன்/ குருகு இணைய இதழ், 3 செப்டம்பர் 2...

பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்

Image
2021 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.  இளமைப்பருவத்தில் சில எண்ணங்களைச் சுமந்துகொண்டு வாழ்க்கையில் பயணிக்கும் அனைவரும் தாம் நினைத்தவற்றை அடைந்துவிடுவதில்லை. வாழ்க்கைச்சூழல் வேறுவேறு பாதைகளுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. இருப்பினும், எழுச்சி எண்ணங்கள் உடையோர் தமக்குக் கிடைத்த பாதையில் ஆற்றலுடன் பயணித்துப் புதிய இலக்குகளை எட்டிப் புகழ் வாழ்வில் பூரித்துப் பயணிக்கின்றனர்.   ஆய்வியல் (எம்ஃபில்) பட்டத்திற்கு கல்கியின் வரலாற்றுப்புதினங்களை ஆய்வு செய்த நினைத்தவர், பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற நாகப்பட்டின விகாரைப் பற்றிய சிந்தனையில் பௌத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய நேர்ந்து பௌத்தவியலுக்குப் பல அருங்கொடைகள் அளித்திருக்கின்றார் முனைவர் பா.ஜம்புலிங்கம். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் திருவாளர் பாலகுருசாமி-திருமதி தர்மாம்பாள் இணையருக்கு 02.04.1959இல் பிறந்தவர் பா.ஜம்புலிங்கம். தொடக்கக்கல்வியை கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இள...

துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்!

Image
இந்து மதம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில்  இ ந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பௌத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக  இ ருந்த தஞ்சையிலும் பௌத்தத்தின் தாக்கம்  இ ருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது.  இ ந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பௌத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா.ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மகாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த  சந்திப்பு  இ து. நெற்றியில் திருநீறு துலங்க நம்மை வரவேற்றார் ஜம்புலிங்கம். "தீவிர சைவ சமய பக்தரான நீங்கள் பௌத்தம் தொடர்பான ஆராய்ச்சியில்  இ றங்கியது எப்படி என்ற கேள்வியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் " என்றேன்.        'ஹா... ஹா... ' என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தார் ஜம்புலிங்கம். "சோழ நாட்டில் பௌத்தத்தின் தடத்தைத் தேடும் ஆய்வை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கினேன். அன்று முதல்  இ ன்று வரை என்னைப் பார்க்கும்...

தமிழகத்தில் புத்தர் இருக்கிறார்

Image
தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பெரண்டாக்கோட்டை என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் சாம்பான் என்ற கடவுளுக்கு வழிபாடு நடத்திவருகிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நாம் அந்த கிராமத்திற்குச் சென்று சாம்பான் வழிபாடு நடைபெறும் இடத்தில்  உள்ள சிலையைப் பார்த்தால் கண்டிப்பாக நமக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் சாம்பான் என்று சொல்லி வழிபடும் சிலை புத்தரின் சிலை. இந்த குக்கிராமத்தின் உள்ளே புதர்கள் மண்டிய அடர்ந்த காடு போன்ற திடலில் மார்பு மற்றும் கழுத்துப்பகுதிகள் உள்ளே புதைந்துள்ள நிலையில் தலையை மட்டும் வெளியே காட்டி மெல்லிய புன்னகையுடன் நம்மை வரவேற்கிறார் புத்தர். இந்த புத்தர் சிலை சாம்பான் என்ற பெயரில் காலம்காலமாக இங்குள்ள ஒரு சமூகத்தால் வணங்கப்படுகிறது. இந்த புத்தரை சாம்பானாக வணங்கும் மக்கள் "எங்களுக்கு விவரம் தெரிஞ்ச காலத்திலிருந்து இந்த சிலையை சாம்பான் சாமின்னுதான் கும்பிட்டு வருகிறோம். இந்த சாமிக்கு சிவன் ராத்திரி அன்னைக்குதான் விசேஷம். அன்னைக்கு இரவு இந்த சிலைக்கு பூசை செய்து வழிபாடு செய்வோம். அதுபோக, வருடத்திற்கு ஒருநாள்...