அயோத்திதாசர் ஆதவன் விருது

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் 19ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் ஏப்ரல் 2025இல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் அயோத்திதாசர் ஆதவன் விருது எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா நாளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழைப் பெற்றேன். 24 ஜூன் 2025 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 4.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. விழா, அழைப்பிதழில் உள்ள நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளபடி சிறப்பாக நடைபெற்றது. என்னுடைய ஏற்புரையில் இவ்விருதிற்காக என்னைத் தேர்ந்தெடுத்த எழுச்சித்தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தேர்வுக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், விருதுகள் பெற்ற சக ஆளுமைகளுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். இவ்விழாவில் நிகழ்வில் பல துறைகளைச் சார்ந்த ஆளுமைகளைச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். ...