மிகச் சிறந்த பொக்கிஷம்: முனைவர் க. ரவிக்குமார்

நூலாசிரியருடன் க.ரவிக்குமார் மிகச் சிறந்த பொக்கிஷம் தமிழகத்தில் புத்தர் சிலைகளை பற்றி ஆய்வு செய்வதற்கு மிகச் சிறந்த பொக்கிஷமாக விளங்குகிறது முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள சோழ நாட்டில் பௌத்தம். அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழகத்தில் பரவிய விதத்தை அசோகரின் சாசனங்கள், தமிழ் இலக்கியங்கள் வாயிலாகவும் பௌத்த பள்ளிகள் விகாரங்கள் ஏற்படுத்தப்பட்டு மதுரை, காவிரிப்பூம்பட்டினம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் சிறப்புடன் இருந்தமையை கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. வெளிநாட்டவர் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் உள்ளிட்ட சான்றுகள் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் புத்த விகாரங்கள் மூலமாக புத்த மதம் இப்பகுதியில் செழிப்புடன் இருந்தமையை இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. முதலாம் ராஜராஜன் காலத்தில் சூடாமணி விகாரம் அமைப்பதற்காக ஆனைமங்கலம் ஊரை வழங்கியதையும் முதலாம் இராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இவ்விகாரம் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை லெய்டன் செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது. நாகப்பட்டினத்தில் 350 புத்த செப்பு திருமேனிகள் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந...