Posts

Showing posts from July, 2023

இராசேந்திர சோழரின் 1009ஆம் ஆண்டு முடிசூட்டுப் பெருவிழா

Image
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மைப்பிரிவும் தமிழ்த்துறையும், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவும் இணைந்து 15 ஜூலை 2023ஆம் நாள் இராசேந்திர சோழரின் 1009ஆவது ஆண்டு முடிசூட்டுப் பெருவிழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கத்தினை நடத்தின . முக்கிய விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து நட்ராஜ் நாட்யா குழுவினரின் நாட்யாஞ்சலி நடைபெற்றது. திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் ஆர்.திருமுருகன் முன்னிலையில், சட்டக்கல்விப்புல முதன்மையர் பேரா.ப.ச.வேல்முருகன் தலைமையுரை ஆற்றினார். தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆ.ஜான் பீட்டர் உரையாற்றினார். மதிய அமர்வில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் முனைவர் துளசேந்திரன், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், இந்தியத்தொல்லியல் துறை கல்வெட்டியல் பிரிவின் இயக்குநர் (பணி நிறைவு) திரு ப...

சோழ நாட்டில் பௌத்தம் : நூல் அறிமுகம் : அனந்தபுரம் கோ.கிருட்டினமூர்த்தி

Image
இந்தியாவில் பௌத்தம் (புத்தம்) ஒரு மதமாக மாற்றப்பட்டுள்ளது.  பௌத்தம் ஒரு நெறி. வாழ்க்கை நெறி-முறை. அறிவியல் நெறி. சிந்திக்கத்தூண்டும் நெறி. இந்து பண்பாட்டின்மீது மாற்று சிந்தனையில் பண்பாட்டை சிந்திக்க வைத்த நெறி. மெய்யியல் காண்பது அறிவு என்று வைத்த நெறி. இயற்கையோடும், உலக உயிர்களோடும், செடி கொடிகளோடும், இன்னும் பல இயற்கைப்பொருள்களோடும் வாழத்தூண்டி வழிகாட்டிய நெறி. பௌத்தம், சிந்தனை வழியாகத்தான் அகப்பொருளையும், புறப்பொருளையும் தெளிவாக உணரமுடியும் என்றது. கௌதம புத்தருக்கு முன்னேயும் புத்தர் இருந்தனர் என நம்பப்படுகிறது. 24 புத்தர்களைக் கடந்துதான் கௌதம புத்தர் புது நெறியை உருவாக்கினார். மண்டிக்கிடந்த குப்பைகளை எரிக்கச் செய்யும் சிந்தனையை வளர்த்தவர் புத்தர். மாசு படிந்த பல அடுக்குகளைக் (சாதியடுக்குகளை) கொண்டு பூமியை தூய்மைப்படுத்த முயன்றவர். இன்னும் பல கூறலாம். அசோகன், தன் போர் வெற்றிக்குப் பிறகு பௌத்த நெறியை அறிந்து தெளிந்தான்.  பௌத்தத்தைப் பரப்பவும் முயன்றான். அது அவனால் முடிந்தது.  அவனுக்குப் பிறகும் நடந்தது.  பெருமளவு மக்கள் பௌத்தத்தை (புத்த நெறியை) ஏற்றனர். இயற்கை உணர்...

பௌத்த சுவட்டைத் தேடி : கீழக்குறிச்சி, வெள்ளனூர்

Image
15 ஏப்ரல் 2023இல் திருச்சி அருகில் கீழக்குறிச்சி புத்தரைப் பார்க்க களப்பணி மேற்கொள்ள முடிவெடுத்து, அத்துடன் திருச்சி அருங்காட்சியக புத்தர் சிலைகளையும், வெள்ளனூர் புத்தர் சிலையையும் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு. டிசம்பர் 1999இல் முனைவர் பட்ட ஆய்வேட்டின் கணினித் தட்டச்சுப்பணி நடைபெற்று வந்த நிலையில், திருச்சியில் தலையில்லாத புத்தர் சிலையும் அதனருகில் ஒரு கல்வெட்டும் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி (கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தப்பள்ளி, தினமணி, 15 நவம்பர் 1999) வெளியானது.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  ஆய்வேட்டினை அளிக்க வேண்டிய சூழலில்,  இவை பற்றி செய்திகளையும் திரட்டி உரிய ஒளிப்படங்களுடன் ஆய்வேட்டில் இணைத்தேன்.  "திருச்சி நகருக்குத் தென்கிழக்கே 12 கிமீ தொலைவில் உள்ள கீழக்குறிச்சி என்னும் சிற்றூரில் கி.பி.11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரது கற்சிலையையும், பௌத்தப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டையும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது....இக்கல்வெட்டில் செந்தாமரைக்கண்ணநல்லூர் என்ற இந்த ஊர் முழுவதும் இறையிலியாகப் பௌத்தப்...