Posts

Showing posts from 2022

நிகழ்வுகள்

1993 15.8.1993, தஞ்சாவூர், 47ஆவது சுதந்திர தின விழா, திருவருட் பேரவை, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மாணாக்கர் போட்டிகள், நடுவர்   1994 30.1.1994, தஞ்சாவூர், குடியரசு தின விழா, திருவருட் பேரவை, செயிண்ட் அந்தோணி பள்ளி, அருள் தியேட்டர் அருகில், மாணாக்கர் போட்டிகள், நடுவர் 8.10.1994, கோயம்புத்தூர், தமிழ்நாடு பல்கலைக்கழகப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு, கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், கலந்துகொள்ளல் 1995 7-8.10.1995, தஞ்சாவூர்,  அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,   ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 'அறிக அறிவியல்' இதழின் பங்கு”,  கட்டுரையாளர் 1996 9-10.2.1996, தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் தமிழ்க் கருத்தரங்கு, பார்வையாளர் 17-18.5.1996, கோயம்புத்தூர், தமிழக அறிவியல் பேரவை, நான்காம் கருத்தரங்கு, ‘‘மாசு படியும் தாஜ்மஹால்’’, கட்டுரையாளர்  1997 27-31.1.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் சமூகவயமாக்கம், பார்வையாளர் 24-30.3.1997, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகம்,...

சோழ நாட்டில் புத்தர் சிலைகள் : தமிழ் மரபு அறக்கட்டளை

Image
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பாக 30 நவம்பர் 2022இல் நடைபெற்ற, இணையவழி உரைத்தொடரில் சோழ நாட்டில் புத்தர் சிலைகள் என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரை தொடர்பான நிகழ்வுகளைப் பகிர்கிறேன். தமிழ் மரபுக்கு நன்றி. 26 நவம்பர் 2022இல் நடைபெறுவதாக இருந்த நிகழ்வு தவிர்க்க இயலாத காரணங்களால் 30 நவம்பர் 2022இல் நடைபெற்றது. ----------------------**--------------------- அனைவருக்கும் வணக்கம், வரும், நவம்பர் 30 ஆம் தேதி புதன்கிழமை... இந்திய / இலங்கை நேரம் மாலை 6:00 மணிக்கு... தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் ----------------------**--------------------- திசைக்கூடல் - 312 ----------------------**--------------------- இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி ----------------------**--------------------- திருவள்ளுவர் ஆண்டு 2053, கார்த்திகை 14 30-11-2022, புதன்கிழமை ----------------------**--------------------- தலைப்பு: "சோழ நாட்டில் புத்தர் சிலைகள்" - (சிறப்புரை மற்றும் கலந்துரையாடல்) சிறப்புரையாளர்: முனைவர். பா. ஜம்புலிங்கம் பௌத்த ஆய்வாளர் உதவிப் பதிவாளர் (பணிநிறைவு) தமிழ்ப...

துபாய் புத்தர்: திரு கரந்தை ஜெயக்குமார்

Image
துபாய் புத்தர் தேடிச் சோறுநிதந் தின்று – பல      சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர்      வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –  பல வேடிக்கை மனிதரைப் போல – நான்      வீழ்வே னென்றுநினைத் தாயோ?      இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும். காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள்.      இவரது உழைப்பு.      இவரது தேடல்.      ஓயாத தேடல்.      ஆய்வியல் நிறைஞர் ஆய்வுப் படிப்பிற்காகத் தேடினார்.      முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.      ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார...