Posts

Showing posts from 2011

சமண சுவட்டைத் தேடி : பூதலூர், திருவையாறு வட்டங்கள்

Image
மே 2007இல் வளையமாபுரத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் சிற்பம் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அச்செய்திக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த பூண்டி புட்பம் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் த.லட்சுமணமூர்த்தி அவர்கள் திருக்காட்டுப்பள்ளி அருகே தன் சொந்த ஊரான டி.கள்ளிக்குடியில் ஒரு சமணரைப் புத்தர் என்று கூறி அங்குள்ளோர் வழிபடுவதாகக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் சூன் 2003இல் அடஞ்சூர் என்னுமிடத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் என்றழைக்கப்படும் சமணரைப் பற்றிக் கூறியிருந்தேன். அவர் சொன்ன சிற்பத்தைப் பார்க்கும் வாய்ப்பு உடனடியாக அமையவில்லை. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3.11.2011 அன்று களப்பணி சென்றபோது இது பற்றிக் கூறியிருந்தேன். அடுத்த களப்பணியில் அச்சிற்பத்தைப் பார்க்கச் செல்லலாம் என முடிவெடுத்து பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஓரிரு நாளில் அவ்விடத்திற்குச் சென்றுவிட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிற்பம் திருட்டுப் போய்விட்டதாக உள்ளூரில் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தார். சிற்பம் இருந்த இ...

சமண சுவட்டைத் தேடி: திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்

Image
எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன்.  எனது கட்டுரைகளில் அத்தொகுப்பு பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணர் சிற்பங்களைப் பார்க்க விரும்பி முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டனர்.  எனது ஆய்வு பௌத்தம் தொடர்பானதாக இருப்பினும், எனது வலைப்பூவில் களப்பணியில் கண்ட சமணர் சிற்பங்களைப் பற்றி ஓர் இடுகை இட்டிருந்தேன். அதனடிப்படையில் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன். எனது மேற்பார்வையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற திட்டத்தை மேற்கொள்ளும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைத்தபோது அவரும் மனமுவந்து எங்களுடன் இணைந்துகொண்டார். 3.11.2011 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டோம். அப்போது ஒரு புதிய சமணர் சிற்பத்தைக் கண்டுபிடித்தோம். அதனைப் பத்திரிக்கைகள் மூலமாக வெளிவுலகிற்குக...

குடந்தையில் பௌத்தம்

Image
    தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில்  ஆய்வியல் நிறைஞர்  பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வைத் தொடங்கியபோது பௌத்தம் தொடர்பான பதிவுகளைத் தேடி களப்பணி மேற்கொண்டேன்.  அவ்வாறான ஒரு களப்பணியின்போது கும்பகோணம் அருகே புத்தர் கோயில் இருந்ததற்கான ஒரு கல்வெட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதை அறிந்தேன்.  கும்பகோணம் பகுதியில் பௌத்தம் இருந்ததற்கான அந்த அரிய சான்றை மையமாகக் கொண்டு கட்டுரை எழுதினேன். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பொழில் இதழில் வெளியான என்னுடைய முதல் கட்டுரை அதுவேயாகும். அக்கட்டுரையே இம்மாத இடுகையாகும். என்னுடைய அந்த கட்டுரையையும், பிற கட்டுரைகளையும் வெளியிட்டு வரும் தமிழ்ப் பொழில் இதழுக்கு நன்றி. இனி பௌத்தச் சுவட்டைத் தன்னகத்தே கொண்ட கும்பகோணத்திற்குப்  பயணிப்போம்...........  குடந்தையின் பெருமை      எப்போதும் வற்றாத நீர்ப்பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபய நாடு, கிள்ளி நாடு, செம்பியர் நாடு, அகளங்க நாடு, பெருநீர் நாடு, பொன்னிநாடு எனப்...

பௌத்தச் சுவட்டைத் தேடி : கோபிநாதப்பெருமாள்கோயில்

Image
சோழ நாட்டில் பட்டீஸ்வரம் பகுதியில் அதிகமான எண்ணிகையிலான புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து என்னால் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் 1993இல் தேட ஆரம்பித்து பட்டீஸ்வரம் பகுதியில் இரு சிலைகளைக் கண்டுபிடித்தபோது பெற்ற மகிழ்ச்சி ஆகஸ்டு 2011இல் அச்சிலைகளைத் தேடிப் போய் அவை காணாமல் போனதை அறிந்ததும் மறைந்துவிட்டது. அது தொடர்பான  அனுபவப் பதிவு.              அக்டோபர் 1993 பட்டீஸ்வரம் கிராம தேவதை கோயிலில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி அவரது பௌத்தமும் தமிழும் என்ற நூலில் கூறிய செய்தியை அடிப்படையாகக்கொண்டு துர்க்கையம்மன் கோயில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாகத் தேடி கடைசியில் பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் உள்ள முத்துமாரியம்மன்கோயிலில் புத்தரைத்தேடி கண்டுபிடித்து அது தொடர்பான செய்தியை ஆய்வேட்டில் சேர்த்திருந்தேன்.அக்டோபர் 1993 முதல் தேட ஆரம்பித்து அக்டோபர் 1998இல்தான் அதனைக் கண்டுபிடிக்க முடிந்தது.  அவ்வாறு அதனைத்தேடி சென்றபோது பட்டீஸ்வரம் பகுதியில் இன்னும் சில சிலைகள் இருப்பதாகத் தெரிய வரவே, பழையாறை, ச...

களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள்

Image
-முனைவர் பா.ஜம்புலிங்கம் 1993 முதல் பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி களப்பணி சென்றபோது கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிற்பங்கள்  1.கங்கைகொண்டசோழபுரம் 2.காரியாங்குடி 3.கோட்டைமேடு 4.பெருமாத்தூர் 5.செங்கங்காடு 6.தஞ்சாவூர் 7.அடஞ்சூர் 8.செருமாக்கநல்லூர் 9.சுரைக்குடிப்பட்டி 10.பஞ்சநதிக்குளம் 11.தோலி (நவம்பர் 2011) 1 முதல் 6 வரை    (மேற்கோள்) புத்தரது சிற்பங்களைத் தேடிக் களப்பணிக்குச் சென்றபோது கங்கைகொண்டசோழபுரம் (உயரம் 20"), திருவாரூர் வட்டம் தப்ளாம்புளியூர் அருகே காரியாங்குடி (16"), புதுக்கோட்டை ஆலங்குடிப்பட்டி அருகேயுள்ள கோட்டைமேடு (40"), திருத்துறைப்பூண்டி வட்டம் செங்கங்காடு (16"), குன்னம் வட்டம் பெருமத்தூர் (24"), தஞ்சாவூர் மேலவீதி வடக்குவீதி சந்திப்பில் மூல அனுமார் கோயில் பின்புறம் (34") போன்ற இடங்களில் பல அளவிலா சமணர் சிற்பங்களைக் காணமுடிந்தது. கோட்டை மேட்டில் இச்சமணரை சிவநாதர் என்று கூறுகின்றனர். செங்கங்காட்டில் புத்தர் என்று கூறி வழிபாடும் செய்து வருகின்றனர். (பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேட...

Buddha statues in the vicinity of other temples in the Chola country*

Image
-Dr.B.Jambulingam             Buddhism came to Tamil Nadu during the 3rd century BC and it prevailed in the Chola country up to the 16th century AD, which is vouchsafed by an inscription found in Kumbakonam. Buddha viharas were found in many places including Poompuhar and Nagapattinam. The remnant of a vihara is still intact in Poompuhar. Sixty-four Buddha statues were identified in the Chola country comprising of  Thanjavur, Nagapattinam, Tiruvarur, Pudukottai, Trichy, Karur, Perambalur and Ariyalur districts during field study undertaken by the author since 1993. Among these 60 statues were in seated posture, and the rest from Cholanmaaligai, Poompuhar, Thiruvalanchuzhi and Sundarapandianpattinam were in standing posture. According to earlier researchers Buddha statues were found at Alangudipatti, Ayyampet, Chettipatti, Kottappadi, Kurumbur, Manganallur, Valikandapuram and Vellanur of Pudukottai. Howeve...

கட்டுரைகள், அணிந்துரைகள், யுட்யூப் பதிவுகள்

கட்டுரைகள் :  பௌத்தம் 1. ‘‘தஞ்சை நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள்”, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-4, மார்ச்-டிசம்பர், 1994, பக்.98-102  2. ‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஏப்ரல் 1996, துணர் 70, மலர் 1, பக்.560-563 3. ‘‘பௌத்தத்தில் வாழ்வியல்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஜனவரி 1997, துணர் 70, மலர் 8, பக்.905-912 4. ‘‘இந்து மதத்தில் புத்த மதத்தின் தாக்கம்’’, தமிழியல் ஆய்வு, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், 1997, பக்.147-151 5. ‘‘சைவமும் பௌத்தமும்’’, ஆறாம் உலகச் சைவ மாநாடு, தஞ்சாவூர், ஆய்வுச்சுருக்கம், 1997, ப.88 6. ‘‘ தஞ்சையில் பௌத்தம் ’’, தமிழ்ப்பொழில், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், மே 1998, துணர் 72, மலர் 1, பக்.3-8 7. ‘‘தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்’’, திருச்சி வானொலி நிலையம் ஒலிபரப்பு, 15  ஜூன்  1998 (பதிவு 10  ஜூ ன் 1998) 8.  ‘‘பௌத்தத்தில் மனித நேயம்’’, மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2 ஆகஸ்டு 1998 (கருத்தரங்கில் அளிக்கப...