Posts

தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளி தொடக்க விழா

Image
மதுரையில் 20 மே 2019 அன்று தமிழ்ப்பௌத்த ஆய்வுப்பள்ளியின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியைத் தொடங்கிவைக்கும் அரிய வாய்ப்பினைத் தந்ததோடு விழாவினைத் தொடங்கிவைத்த பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், அறிமுக உரையாற்றிய திரு அன்புவேந்தன், உடன் உரையாற்றிய பெண்ணியலாளர் வ.கீதா நிகழ்வில் கலந்துகொண்ட நண்பர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், முகநூலில் பகிர்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.      விழாவினை ஒருங்கிணைத்த ஸ்டாலின் ராஜாங்கம் அறிமுகவுரையாற்றிய அன்புவேந்தன் (இடமிருந்து ) வ.கீதா, பா.ஜம்புலிங்கம், காளிங்கன், ஸ்டாலின் ராஜாங்கம்      தமிழ்ப் பௌத்த ஆய்வுப்பள்ளியைத் தொடங்கிவைத்து உரையாற்றல்       பெண்ணியாளர் கீதா உரையாற்றல் (இடமிருந்து)  காளிங்கன்,  அன்புவேந்தன், ஸ்டாலின் ராஜாங்கம், பா.ஜம்புலிங்கம்,  வ,கீதா, அருள் முத்துக்குமரன்      ஸ்டாலின் ராஜாங்கம் உடன்  அருள் முத்துக்குமரன் உடன்  ...

காமதேனு கட்டுரையில் மேற்கோள்

Image
17.2.2019 நாளிட்ட காமதேனு இதழில் நீரோடிய காலம் என்ற தலைப்பில் ஆசை எழுதி வரும் தொடரில் சமணர்களின் அட்சய திருதியை என்ற தலைப்பில்  கட்டுரை வெளியாகியுள்ளது.  சமணம் பற்றிய திரு அப்பண்டைராஜ் அவர்களின் பேட்டியைக் கொண்டுள்ள அப்பதிவில் எங்களுடைய நூல் (முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்,  தஞ்சையில் சமணம்,  ஏடகம், தஞ்சாவூர், 2018) மேற்கோளாக சுட்டப்பட்டுள்ளது.   கட்டுரையினையும், மேற்கோளையும் பகிர்வதில் மகிழ்கிறேன்.   ------------------------------------------------------------------------------------------- நன்றி: ஆசை /நீரோடிய காலம், சமணர்களின் அட்சய திருதியை,  காமதேனு /17 பிப்ரவரி 2019 (கட்டுரையில் மேற்கோள்) ------------------------------------------------------------------------------------------- 13 பிப்ரவரி 2025இல் மேம்படுத்தப்பட்டது.

துபாய் புத்தரும் மீசை வைத்த புத்தரும்!

Image
இந்து மதம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட பல மதங்களின் தாயகம் இந்தியா. இவற்றில்  இ ந்தியாவுக்கு வெளியிலும் ஆதிக்கம் செலுத்திய மதம் பௌத்தம். அன்றைய காலத்தில் ஒரு குட்டி காஸ்மோபாலிட்டனாக  இ ருந்த தஞ்சையிலும் பௌத்தத்தின் தாக்கம்  இ ருந்து, காலப்போக்கில் அருகிப்போய்விட்டது.  இ ந்தச் சூழலில் தஞ்சை மண்ணில் பௌத்தத்தின் சுவடுகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆய்வாளராகிய முனைவர் பா.ஜம்புலிங்கத்தைச் சந்திக்கச் சென்றோம். தஞ்சை சரஸ்வதி மகாலில் தனது நண்பரைப் பார்க்க வந்திருந்த ஜம்புலிங்கத்துடன் நிகழ்ந்த  சந்திப்பு  இ து. நெற்றியில் திருநீறு துலங்க நம்மை வரவேற்றார் ஜம்புலிங்கம். "தீவிர சைவ சமய பக்தரான நீங்கள் பௌத்தம் தொடர்பான ஆராய்ச்சியில்  இ றங்கியது எப்படி என்ற கேள்வியிலிருந்து நம் உரையாடலைத் தொடங்கலாம் என்று நினைக்கிறேன் " என்றேன்.        'ஹா... ஹா... ' என்று சிரித்தபடி பேச ஆரம்பித்தார் ஜம்புலிங்கம். "சோழ நாட்டில் பௌத்தத்தின் தடத்தைத் தேடும் ஆய்வை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கினேன். அன்று முதல்  இ ன்று வரை என்னைப் பார்க்கும்...

பொன்னி நாட்டில் பௌத்தம்

Image
  சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை வழங்கிய வேர்கள் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்வு 25 நவம்பர் 2018 காலை மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியில் இராமலிங்க விலாஸில் நடைபெற்றது. சரோஜினி ராமலிங்கம் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் திருமதி சரோஜினி முன்னிலை வகித்தார். சிறப்புரையாக பொன்னி நாட்டில் பௌத்தம் தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். காவிரியால் சோழ நாடு பொன்னி என்றழைக்கப்படுகிறது என்பதில் தொடங்கி, களப்பணியின் மீதான ஆர்வம், அதன்மூலமாகவே புதிதாகச் செய்திகளை வரலாற்றுலகிற்கு அளிக்க முடியும் என்ற எண்ணம் உதித்தமை தொடங்கி பௌத்தம் தொடர்பாக அரிய தேடல்களே இருந்த நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய களத்தில் காணப்பட்ட சுமார் 70 புத்தர் சிலைகள், புத்தர் வழிபாடு, வழிபாடு தொடர்பான நம்பிக்கை, பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் உள்ளிட்டவற்றைப் பேசினேன். மயிலாதுறைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்த நிலையில் மாணவர்களுக்கும் வரலாற்றின் மீதான ஆர்வம் தேவை என்பதன் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தேன். (பேச்சின் ம...

தஞ்சையில் சமணம் : பாராட்டு விழா

Image
தஞ்சையில் சமணம்  நூலினை வெளியீட்டமைக்காக நூலாசிரியர்கள் என்ற நிலையில் எங்களை தஞ்சாவூர் கரந்தட்டாங்குடியிலுள்ள ஆதீஸ்வரசுவாமி கோயில் எனப்படுகின்ற ஜினாலயத்தில் சமணப்பெருமக்கள் பாராட்டினர்.  தஞ்சை ஜினாலய அறங்காவலர் திரு ச.அப்பாண்டைராஜ் அவர்களின் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. திரு தஞ்சை வி.சுகுமாரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.   பஞ்சகல்யாணப்பெருவிழா, கோயில் ஆண்டு விழா, நூலாசிரியர்களுக்குப் பாராட்டு விழா என்ற முப்பெரும் விழாவாக 5 ஆகஸ்டு 2018 அன்று நடைபெற் நிகழ்வின்போது சமணப்பெருமக்களும் அறிஞர்களும் எங்களையும், களப்பணியின்போது நாங்கள் மேற்கொண்ட சிரமங்களையும் சுட்டிக்காட்டி எங்களுடைய முயற்சியைப் பாராட்டி, எங்களை கௌரவித்தனர். அவர்கள் எங்களைப் பாராட்டிய விதம் எங்களை நெகிழ வைத்துவிட்டது.     அப்பாண்டைராஜ் தலைமையுரையாற்றுகிறார். மேடையில்  பா.ஜம்புலிங்கம், மணி.மாறன், வி.சுகுமாரன், தில்லை கோவிந்தராசன் (இடமிருந்து வலமாக)   பத்மமாலினி நன்றியுரை ஏற்புரையில் கள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு எங...