Posts

தம்ம பதம் : ப.ராமஸ்வாமி

Image
புத்த பெருமான் அருளிய அறநெறிகளைக் கொண்டது தம்ம பதம் . பௌத்தத் திருமுறைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்நூல் ப.ராமஸ்வாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இரட்டைச் செய்யுட்கள், கருத்துடைமை, சிந்தனை, புஷ்பங்கள், பேதை, ஞானி, முனிவர், ஆயிரம், தீயொழுக்கம், தண்டனை, முதுமை, ஆன்மா, உலகம், புத்தர், களிப்பு, இன்பம், கோபம், குற்றம், சான்றோர், மார்க்கம், பலகை, நரகம், யானை, அவா பிக்கு, பிராமணன் என்ற 26 தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.    இந் நூலில் உள்ள அறநெறிக்கருத்துகள் சிலவற்றைப் பார்ப்போம்.   இரட்டைச் செய்யுள் (ஒவ்வொரு கருத்தும் இரண்டு சூத்திரங்களால் விளக்கப் பெற்றது) கூரை செம்மையாக வேயப்படாத வீட்டினுள் மழை நீர் பாய்வதுபோல் நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்துவிடுகின்றன. (13) கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல் நன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் நுழைய முடியா. (14) பேதை   எந்தக் காரியத்தைச் செய்தால் பின்னால் மனம் இன்பமடையுமோ, எதன் பயனை உள்ளக்களிப்போடு அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அதுவே நற்செயல். (10)  ஞானி   நன...

பௌத்த சுவட்டைத் தேடி : பரிநிர்வாண புத்தர் சிலை

Image
சோழ நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது அமர்ந்த நிலை மற்றும் நின்ற நிலையிலான புத்தர் சிலைகளைப் பார்த்துள்ளேன். எனது பௌத்த ஆய்வினைப் பாராட்டும் நண்பர்களில் ஒருவரான முனைவர் இரா. பாவேந்தன் பரிநிர்வாண புத்தர் சிலையின் புகைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பினைத் தந்துள்ளார். அச்சிலையைப் பற்றி அறிய அழைக்கிறேன். ஏப்ரல் 19 அன்று கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக தமிழ் உதவிப்பேராசிரியரும், துணைவேந்தரின் தொழில்நுட்ப மற்றும் தனி அலுவலுருமான நண்பர் முனைவர் இரா. பாவேந்தன் அவர்கள் தன் முகநூல் பதிவாக கீழ்க்கண்ட கிடந்த நிலையிலான புத்தரைப் பற்றிய ஒரு பதிவினை எழுதியிருந்தார். முன்பொரு முறை இந்த புத்தர் சிலையின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அப்போது புகைப்படத்தோடு எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. "அரிய புத்தர் சிற்பம் ... கண்டுபிடிக்க உதவுங்கள்.. தமிழகத்தில் அழிந்து வரும்/அழிக்கப்பட்டு வரும் பெளத்த கலை வரலாற்று பொக்கிஷங்களில் இந்த படத்தில் உள்ள சிற்பம் என் கவனத்தை கவர்ந்தது. கடந்த ஆண்டு இந்த புகைப்படத்தை என் முக நூலில் வெளியிட்டேன். ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரிடம் எந்...

பௌத்த சுவட்டைத் தேடி : வயலக்காவூர்

Image
இளம்போதி என்னும் வலைப்பூவில் எழுதி வரும் திரு ஏழு. கலைக்கோவன், ஒரு புகைப்படத்தை அனுப்பி அது புத்தரா, சமண தீர்த்தங்கரரா என்று கேட்டுள்ளார். புத்தர் சிலைகளின் அமைப்பைப் பற்றியும், காஞ்சீபுரம் பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளைப் பற்றியும் அவர் எழுதி வருகிறார்.  அச்சிலையைப் பார்க்க சோழ நாட்டிலிருந்து காஞ்சீபுரம் மாவட்டத்திற்குப் போவோம் வாருங்கள்.   காஞ்சீபுரம் வட்டம் வாலாஜாபாத் வட்டம், நெய்க்காடுபாக்கம் வயலக்காவூர் என்னுமிடத்தில் உள்ள அ ச்சிலை புத்தரா தீர்த்தங்கரரா என்ற ஐயத்தை பின்வரும் அடையாளங்கள் உண்டாக்குகின்றன என்று அவர் கூறியுள்ளார். 1) தோள் பட்டைக்கு மேல் உள்ள உருவம் 2) சீவர ஆடை 3) கையில் பூ போன்று உள்ளது. ஆனால் தாமரையா என்று சொல்ல முடியவில்லை. தெளிவாக இல்லை. தமிழகத்தில் சோழ நாட்டை (ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை) எனது களமாகக் கொண்டு புத்தர் சிலைகளையும், சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் பார்த்த நிலையில் ஓரிரு சிலைகளை மட்டுமே பிற பகுதிகளில் பார்த்துள்ளேன். பல இடங்களில் இருந்தும் இதுபோன்ற கடிதங்கள் வரும் நிலையில் அதிகமான பணியின் ...

மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம்

Image
மகாமகம் காணும் கும்பகோணத்தில் பௌத்தம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள குடமூக்கு என்னும் பெயர் பெற்று விளங்கும் கும்பகோணம் நகரில் இரு சான்றுகள் பௌத்தம் தொடர்பாக இருந்ததாக அறிஞர்கள் விவாதிக்கின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பௌத்த ஆய்வு தொடர்பாக 1993 முதல் புத்தர் சிலைகளைத் தேடிச் சென்றபோது பல இடங்களில் புத்தர் சிலைகளைக் காணமுடிந்தது. புதிய புத்தர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் கும்பகோணம் நகரில் புத்தர் சிலைகளைக் காணமுடியவில்லை.  பகவ விநாயகர் கோயிலில் ஒரு சிற்பமும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டும் பௌத்தம் தொடர்பானவையாகக் கருதப்படுகின்றன. பகவ விநாயகர் கோயிலில் உள்ள சிற்பம் புத்தர் இல்லை என்பதையும், கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு பௌத்தத்தின் பெருமை பேசுகின்ற கல்வெட்டு என்பதையும் களப்பணி மூலம் அறிய முடிந்தது. மகாமகம் கொண்டாடப்படும் இவ்வினிய வேளையில் கும்பகோணத்தில் பௌத்தம் தொடர்பான இச்சான்றுகளைக் காண்போம். கும்பகோணம் பகவ விநாயகர் கோயில் வர...

பௌத்த சுவட்டைத் தேடி: திருக்கோயில்பத்து

Image
தஞ்சாவூர் அருகே  திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை   வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன்  மார்ச் 2015இல்  கண்டுபிடித்துள்ள செய்தியை ( தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி , 6 மார்ச் 2015 ) நாளிதழில் கண்டேன்.  தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.  1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும். 14 புத்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்)...