Posts

Showing posts from March, 2025

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பௌத்தம்

Image
சோழ நாட்டில் பௌத்த விகாரம், செப்பேடு, கல்வெட்டு, செப்புத்திருமேனி, சிலை, கோயில் என்ற பல நிலைகளில் சான்றுகளைக் கொண்ட பெருமையினைக் கொண்டது நாகப்பட்டினம் மாவட்டமாகும். நாகப்பட்டினத்தில் பொ.ஆ.720இல் பல்லவ மன்னர் நரசிம்மபோத்தவர்மன் காலத்தில், வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகப்பட்டினத்திற்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசர் விருப்பப்படி ஒரு பௌத்தக்கோயில் கட்டப்பட்டது. பொ.ஆ.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னரான ஸ்ரீமார விஜயோத்துங்கவர்மன், முதலாம் ராஜராஜன் அனுமதியுடன் நாகப்பட்டினத்தில் ஒரு பௌத்த விகாரத்தைக் கட்டியதாக பெரிய ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. இதற்கு முதலாம் ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரையும், அதன் வருவாயையும் கொடையாக வழங்கினான். அவரது மகன் முதலாம் ராஜேந்திரன் இந்நிவந்தத்தை உறுதிப்படுத்தினான். முதலாம் குலோத்துங்கன் மேலும் சில ஊர்களைத் தந்ததாக சிறிய லெய்டன் செப்பேடு கூறுகிறது. அப்போது இந்த விகாரம் ராஜராஜப்பெரும்பள்ளி என்றழைக்கப்பட்டது. இச்செப்பேட்டில் ராஜேந்திரச்சோழப்பெரும்பள்ளி என்ற மற்றொரு பௌத்த விகாரமும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்செப்பேடுகள் ...