Posts

Showing posts from November, 2023

அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள நூல்: முனைவர் பா.சக்திவேல்

Image
தமிழ் நெஞ்சம் நவம்பர் 2023 இதழிலும், கொலுசு செப்டம்பர் 2023 இதழிலும் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, காவேரிப்பட்டிணம், 2022, அலைபேசி 98426 47101) நூலைப் பற்றிய, முனைவர் பா.சக்திவேல் அவர்களின் மதிப்புரை வெளியாகியுள்ளது. அவருக்கும், வெளியிட்ட இதழ்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ******************* முனைவர் பா.சக்திவேல்   23 டிசம்பர் 2024இல் மேம்படுத்தப்பட்டது.

மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று : சோழர்கள் இன்று

Image
மத நல்லிணக்கத்துக்கு புத்தர் ஒரு சான்று என்ற தலைப்பில் சோழர்கள் இன்று நூலில் வெளியாகியுள்ள என்னுடைய கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், தொகுப்பாசிரியருக்கு நன்றியுடன்.  மனித குல வரலாற்றில் பொது ஆண்டுக்கு முந்தைய (கி.மு.) ஆறாம் நூற்றாண்டு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நூற்றாண்டில்தான் ஹெராக்கிளிட்டஸ், செராஸ்டர், கன்பூசியஸ் என்று பல்வேறு நாடுகளிலும் பல ஞானிகள் தோன்றினர். அப்போதுதான் புத்தரும் தோன்றினார். அசோகர் காலத்திலேயே தமிழ் நிலத்தில் பௌத்தத்தைப் பரப்ப தூதர்கள் அனுப்பப்பட்டதை நாம் அறிய முடிகிறது. பௌத்தத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும், சமயத்தின் பரவலுக்கும் பொதுவாகத் தமிழகமும், சிறப்பாகக் காஞ்சீபுரமும் ஆற்றிய தொண்டு சிறியதல்ல என்று கூறுவர். சோழ நாட்டுக்கும் நாம் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். சோழ நாட்டில் கிடைக்கும் புத்தர்கள் தமிழகத்தில் சோழ நாட்டில்தான் அதிகமான புத்தர் சிலைகளும் நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளும் காணப்படுகின்றன. மண்ணிலிருந்து கிடைக்கும் பல சிலைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை; அதாவது, நாம் சோழர் காலம் என்று குறிப்பிடும் ப...