தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (தஞ்சாவூர் முன்னாள் மாவட்ட ஆட்சியரகம்) பொ.ஆ.10- 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புத்தர் சிலை இருப்பதாகவும், என் பௌத்த ஆய்வுக்காக அதனைப் பார்க்கும்படியும் கூறியிருந்தார். சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான ஆய்வின்போது ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் புத்தர் கற்சிலைகளைக் காணமுடிந்தது. அவ்வாறான ஆதாரங்கள் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, செப்டம்பர் 2022) இடம் பெற்றுள்ளது. அந்நூலில் சோழ நாட்டில் உள்ள 63 புத்தர் சிலைகளைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அருங்காட்சியகங்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றியும் குறிப்புகளும் அந்நூலில் இடம்பெற்றுள்ளன. மதகரம், பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த புத்தர் கற்சிலைகள் தஞ்சாவூர் கலைக்கூடத்திலும், மாத்தூரைச் சேர்ந்த புத்தர் சிலை தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும், சோழன் மாளிகையைச் சேர்ந்த இரு புத்தர் சிலைகள் மராத்தியர் அரண்மனை அகழ்வைப்பகத்திலும் உள்ளன. சோழன்மாளிகையைச் ச...