Posts

Showing posts from January, 2023

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2023

Image
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியை (Chennai International Book Fair, 16-18 ஜனவரி 2023) முன்னிட்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காப்புரிமை நூற்றொகுப்பில் புது எழுத்து வெளியிட்டுள்ள  சோழநாட்டில் பெளத்தம் (பா.ஜம்புலிங்கம்), திருச்சாழல் (கண்டராதித்தன்), கூலிக்காரப் பயலுக (அறிவழகன் கைவல்லியம்) ஆகிய மூன்று நூல்கள் இடம் பெற்றுள்ளன. இதில் என் நூலும் உள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.  இச்செய்தியைப் பெருமையுடன் எனக்குத் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதோடு ஒளிப்படங்களை அனுப்பிய என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் பதிப்பாளர் புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பான திரு சுகவன முருகன்,  திரு அறிவழகன் கைவல்லியம் ஆகியோரின் முகநூல் பதிவுகள் இக்கண்காட்சிக்குச் சென்ற  எங்கள் இளைய மகன் திரு சிவகுரு அனுப்பிய புகைப்படங்கள். சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2025க்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காப்புரிமை நூற்றொகுப்பில் புது எழுத்து வெளியீடான என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் ஆங்கில நூலின் குறிப்பு ...

பேருழைப்பின் பெருவிளைச்சல் : முனைவர் சு.மாதவன்

Image
பேருழைப்பின் பெருவிளைச்சல்  2023ஆம் ஆண்டின் முதல் வாசிப்பைத் தொடங்கி வைத்த நூல் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் படைத்துள்ள சோழ நாட்டில் பௌத்தம் என்ற நூலாகும். இந்நூல் 222+X பக்கங்களைக் கொண்டது. புது எழுத்து (படிமம்) வெளியீடாக 2022 செப்டம்பரில் வெளிவந்துள்ளது. எடுத்தவுடன் முழுவதையும் புரட்டிப் பார்க்க வைக்கும் அழகியல் வடிவமைப்போடும் வழவழ தாள்களில் பளபளக்கும் கண்கொள்ளா புத்தரின் அழகிய படங்களோடும் இந்த நூல் படிப்பவரை ஈர்க்கிறது.... 177 மி.மீ X 240 மி.மீ. அளவு வடிவமைப்பு கொண்டது இந்நூல். அன்பு நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் முப்பதாண்டுகாலப் பேருழைப்பின் பெருவிளைச்சலாக வெளிவந்துள்ள இந்நூல் தமிழ் பெளத்த ஆய்வு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் நூல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை... தமிழில் பெளத்தம் என்றவுடன் நினைவுக்கு வருபவர் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களும் பேரறிஞர் சோ.ந.கந்தசாமியும் ஆவர். முதலாமவர் கள ஆய்வோடு மெய்யியல், வரலாறு, வழக்காறு ஆகியவற்றைக் கொண்டு பெளத்தமும் தமிழும் என்ற அரிய நூலைத் தந்தவர். இரண்டாமவர் மணிமேகலையில் பெளத்த மெய்யியல், அறவியல், தருக்கவியல்,பிரபஞ்...

பௌத்த சுவட்டைத் தேடி : வளையமாபுரம்

Image
2023 ஜனவரியுடன் இவ்வலைப்பூவில் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என் ஆய்விற்குத் துணைநிற்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .  சோழ நாட்டில் பௌத்தம்  (புது எழுத்து, அலைபேசி 98426 47101) என்ற என்னுடைய நூல் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்நூலின் மேலட்டையில் வளையமாபுரத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் களப்பணியின்போது கண்ட புத்தர் சிலையின் ஒளிப்படம் இடம்பெற்றுள்ளது. நூலின் வடிவமைப்பைப் பாராட்டிய நண்பர்களில் சிலர் புத்தர் சிலைக்குப் பின் அமைக்கப்பட்டுள்ள இயற்கையான காட்சி படத்திற்கு அழகூட்டுகிறது என்று கூறியிருந்தனர். இந்தச் சிலை, வயலில் இருந்தது. உள்ளது உள்ளபடியே களப்பணியின்போது அச்சிலையை ஒளிப்படம் எடுத்தேன். அதுவே அட்டையில் இடம்பெற்றுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். அங்கு சென்றுவந்த அனுபவத்தை இப்பதிவில் காண்போம். 1995 திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியின்போது (1995-97) தஞ்சாவூர் மையத்தில் சைவ சித்தாந்த வகுப்பிற்குச் சென்றேன். என் ஆய்வினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஆசிரியர் திரு சௌரிராஜன், வளையமாபுரத்தில் மூன்று புத்தர் சிலைகள் இருந்ததாகவும்...