அசைக்க முடியாத வரலாற்று ஆவணம்: திரு கரந்தை ஜெயக்குமார்
என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலினைப் பற்றிய மதிப்புரையை தன்னுடைய வலைப்பூவில் பகிர்ந்த திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. இந்நூலுக்கான முதல் மதிப்புரை இதுவே என்பதில் மகிழ்ச்சி. -------- துபாய் புத்தர் தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போல – நான் வீழ்வே னென்றுநினைத் தாயோ? இவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், முண்டாசுக் கவிஞனின், இந்தப் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வரும். காரணம், வேடிக்கை மனிதராய் வீழ்ந்துவிடாமல், இப்புவியில், தான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை, அழுத்தமாய் விட்டுச் செல்ல, இவர் மேற்கொள்ளும் முயற்சிகள். இவரது உழைப்பு. இவரது தேடல். ஓயாத தேடல...