சோழ நாட்டில் பௌத்தம் : புது எழுத்து

 வலைப்பூவில் 150ஆவது பதிவு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995) ஆய்வினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினையும் (சோழ நாட்டில் பௌத்தம், 1999) நிறைவு செய்து, தொடர்ந்து இரண்டு மாமாங்கத்திற்கும் மேலாக களப்பணி மேற்கொண்டு வரும் நிலையில் என் ஆய்வு மேம்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கின்றேன். 

பணியாற்றிக்கொண்டே களப்பணியினை மேற்கொண்டபோது எதிர்கொண்ட சூழல் சற்றே சிரமமானது. இருப்பினும் எந்த நிலையிலும் ஆய்வேட்டில் விடுபாடு இருக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு பல இடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை களப்பணி சென்றேன். அவ்வப்போது பெற்ற அனுபவங்களை என் வலைப்பூவில் பகிர்ந்ததோடு, அதில் மாற்றங்களோ, மேம்பாடோ மேற்கொள்ளும்போது அதனை பதிவின் இறுதியில் தரும் முறையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறேன்.

நிர்வாகப் பணியாளரான என்னை ஆய்வாளராக உருவாக்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும்,  ஆய்வில் சேர்ந்த முதல் இன்றுவரை என் முயற்சிக்குத் துணை நிற்கும் அறிஞர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், ஊடகத்தினர், தகவலாளர்கள், என் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

சிறப்பாக வடிவமைத்து நூலாக்கம் செய்த புது எழுத்து திரு சுகவன முருகன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

நூல் தேவைக்குத் தொடர்புகொள்ள : 98426 47101


'
எங்கள் மூத்த மகன் பாரத் முகநூல் பதிவு:
இதுதான் Phd !!
நான் பள்ளி சென்ற காலம், அப்பா புத்தரைத் தேடி சென்றார்.
நான் கல்லூரி சென்ற காலம், அப்பா புத்தரைத் தேடி சென்றார்.
நான் வேலைக்கு சென்ற காலம், அப்பா புத்தரைத் தேடி சென்றார்.
எனக்கு கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்ற ஆன பின்னும், அப்பா புத்தரைத் தேடி சென்றார்.
இப்போது என் குழந்தைகள் பள்ளி செல்கின்றார்கள், அப்பா புத்தரைத் தேடி இன்னமும் செல்கிறார்.
ஆய்வு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்னால் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியும்.
29 வருட அப்பாவின் உழைப்பு, 1999இல் ஆய்வேடாக வெளி வந்தது. தற்பொழுது அது புத்தகம் வடிவம் பெறுகிறது.
ஒவ்வொரு சிலையும் ஒரு கதை சொல்லும். உடன் இருந்து பார்த்ததால் சொல்கிறேன். வெறும் 2 சிலையை பார்க்க அப்பா கூடவே சென்றவன் நான். உடலின் மொத்த தெம்பையும் அன்று இழந்தேன். மேற்கொண்டு என்னால் பயணம் செய்ய முடியவில்லை. கடையில் எனக்கு உணவு வாங்கி தந்தவர், அவர் சிலையை பார்க்காமல் சாப்பிடாமல் இருந்தார். இழுத்து பிடித்து 2 சிலையை பார்த்த பின் தான் அப்பா அன்று சோற்றில் கை வைத்தார்.
கள ஆய்வு, வாசிப்பு, தேடல், நீண்ட நெடிய ஓய்வில்லா தேடல் இருந்தால் மட்டுமே இது போன்ற ஆராய்ச்சிகள் சாத்தியம் ஆகும்.
"Phd பட்டம் வாங்கினால் என்ன ?!! ஆய்வுக்கு முடிவே இல்லை" யென்று அப்பா அடிக்கடி சொல்லுவார்.14 நவம்பர் 2022இல் மேம்படுத்தப்பட்டது.

Comments

 1. தங்களது பணி மேலும் சிறக்கவும், நூல் வடிவம் பெற்றமைக்கும் வாழ்த்துகள்.

  150-ஆவது பதிவுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. அருமை... வாழ்த்துகள் ஐயா...

  ReplyDelete
 3. அருமை ஐயா
  தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 4. தங்களின் பணி தொடர வாழ்த்துகள்

  ReplyDelete

Post a Comment