சோழ நாட்டில் பௌத்தச் சுவடுகள் : ஆதிவனம்
ஈரோட்டில் நேற்று (9 அக்டோடர் 2022) நடைபெற்ற பொழிவிற்கு வாய்ப்பு தந்த ஆதிவனம் அமைப்பிற்கும், பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட ஆய்வாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும். முகநூலில் பதிந்த நண்பர்களுக்கும்.... ஆதிவனம் அமைப்பின் முகநூல் பக்கத்திலிருந்து..... நிறைய தகவல்களோடும், தெளிவான உச்சரிப்போடு பொறுமையாக, நிதானமாக பல தகவல்களை பகிர்ந்தார். பெளத்தம் பற்றி பள்ளிக் காலத்தில் படித்திருப்போம் அதன் பின்பு சில தகவல்களை கேட்டோ படித்தோ இன்னும் கொஞ்சம் அதிகமாக தெரிந்திருப்போம் ஆனால் களத்தில் நேரடியாக ஆய்வு கொண்டவர்களுடன் பேசும் போது சுவாரஸ்யம் அதிகம் ஆகுது. நிறைய புதிய தோற்ற புத்தர் சிலைகளை அறிமுகப்படுத்தினார். #முக்கியமாக_அவர்_ஒரு_புத்தர்_சிலையை_காட்டினார் . #அது_தலை_இல்லாத_புத்தர்_சிலை . அவ்வளவு அழகு...ஆம் #தலை_இல்லாமலேயே_அத்தனை_அழகாக_தெரிந்தார் . என்னே...கம்பீரம்!!! சில சிலைகள் ரொம்ப ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருப்பது வருந்த கூடிய விஷயம் தான் உண்மையை சொல்லனும்னா பெளத்தம்_சமணம் பற்றி இன்னும் நிறைய பேருக்கு குழப்பமாக தான் இருக்கும் ஏன்..சிலைகளில் கூட நம்மால் இயல்பாக வித்தியாசம் கண...