அகிம்சை நடை : 19 நவம்பர் 2017
2017 அக்டோபர் இறுதி வாரத்தில் தமிழ்ப்பண்டிதர் நண்பர் திரு மணி.மாறன் தொலைபேசிவழி தொடர்புகொண்டு "தஞ்சாவூர்ப் பகுதியிலுள்ள சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்ப்பதற்காக சமண அமைப்பினர் சென்னையிலிருந்து 5 நவம்பர் 2017 அன்று வருகின்றார்கள். திரு தில்லை கோவிந்தராஜனிடம் இதுபற்றிக் கூறியுள்ளேன். நாமும் அவர்களோடு கலந்துகொள்வோம் " என்று தெரிவித்திருந்தார். அதன்படி நாங்கள் மூவரும் செல்வதாகத் திட்டமிட்டோம். மழையின் காரணமாக அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அறிந்தோம். 19 நவம்பர் 2017இல் இப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதை திரு அப்பாண்டைராஜன் உறுதி செய்தார். அவருடைய தலைமையில் 19 நவம்பர் 2017 காலை 6.45 மணியளவில் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் தஞ்சாவூர் தெற்கு வீதியிலிருந்து வேனில் கிளம்பினோம். முன்னர் வருவதாக இருந்த மணி.மாறனும், தில்லை கோவிந்தராஜனும் விடுப்பு எடுக்க இயலா நிலை மற்றும் அவசரப்பணி காரணமாக வர இயலாமல் போனது. பயணத்தின்போது அவர் அகிம்சை நடையைப் பற்றியும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றியும் கூறிக்கொண்டே வந்தார். அவர் கூறிய பின்னர் அகிம்சை நடை தொடர்பான விவ...