ஓர் அரிய பெட்டகம் : முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சோழ நாட்டில் பௌத்தம் நூலைப் பற்றிய, முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் மதிப்புரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவருக்கு நன்றியுடன். ************* ஓர் அரிய பெட்டகம் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி மலரும். அதுபோன்றுதான் மிக அரிதாக ஆண்டுகள் பல கடந்து தமிழகத்தில் பெளத்தம் பற்றிய ஓரிரு நூல்கள் மலர்கின்றன. அதுபோன்றே பெளத்தம் பற்றி ஆய்வோர் இன்று தமிழகத்தில் மிகச்சிலரே. அவர்கள் வரிசையில் முனைவர் பா. ஜம்புலிங்கம் தன் கடின உழைப்பால் பெளத்தம் பற்றி ஆய்ந்து வருவதோடு முக்கிய தரவுகளை ஒளிப்படங்களுடன் ஆவணப்படுத்தியும் வருகின்றார். அவர்தம் கடுமையான உழைப்பின் அற்புதமான வெளிப்பாடுதான் சோழநாட்டில் பெளத்தம் எனும் இந்நூல். தமிழ்ப்பதிப்பினை வழங்கும் இனிய தருணம் (நவம்பர் 2022) சங்க காலம் தொடங்கி தஞ்சையின் அரசர் செவ்வப்ப நாயக்கர் காலம் வரை (16ஆம் நூற்றாண்டு) சோழநாட்டில் உள்ள பெளத்த சமயம் சார்ந்த இலக்கியக் குறிப்புகள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், விகாரங்கள் எனப் பல தரவுகளைக் காலவரிசைப்படி தொகுத்து ஆய்வு மேற்கொள்ளப்பெற்றுள்ளது. சோழநாட்டில் பெளத்த சமய முக்கிய கேந்திரங்களா...