புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம்

புத்தர் சிலை ஆராய்ச்சியாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம் தமிழகத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் தரம் குறைந்து வருகின்றது என்று கல்வியாளர்கள் குறைபட்டுக்கொள்வது உண்டு. இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆயினும் தரமான ஆய்வாளர்கள் தோன்றித் தரமான ஆய்வேடுகளை வழங்கி வருவதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவ்வகையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சராகவும், சுருக்கெழுத்தராகவும் பணியைத் தொடங்கிப் படிப்படியே தம் அயராத உழைப்பாலும் ஆர்வத்தாலும் முனைவர் பட்டம் வரை ஆய்வு செய்து பட்டம் பெற்று, அப் பல்கலைக்கழத்தின் உதவிப் பதிவாளர் வரை உயர் பொறுப்புகளைப் பெற்ற முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள் கடந்துவந்த பாதை, ஆய்வுத்துறையில் ஈடுபட விரும்பும் ஆய்வாளர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் என்பது என் நம்பிக்கை. பா. ஜம்புலிங்கம் அவர்கள் 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் கும்பகோணத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் பாலகுருசாமி - தர்மாம்பாள். பெற்றோரின் கண்டிப்பால் மட்டும் பள்ளிக்குச் சென்ற இவருக்குப் படிப்பில் நாட்டம் இல்லை. நாளும் வகுப்பாசிரியர் “பிடிவாரண்டு” போட்டுதான் இவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்...