சோழ நாட்டில் பௌத்தம் : அறிமுக விழா : தமிழ்ப் பல்கலைக்கழகம்
என் வாழ்வில் நினைவில் நிற்கும் நாளாக 21 பிப்ரவரி 2023 அமைந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச்சுருக்கெழுத்தராக 16 ஆகஸ்டு 1982இல் சேர்ந்து, உதவிப்பதிவாளராக ஏப்ரல் 2017இல் பணி நிறைவுபெற்றேன். பணி நிறைவு பெற்ற நாளில்...நன்றியுரை பணி நிறைவு பெற்ற நாளில்...விடை பெறல் அதற்குப் பின் சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் அறிமுக விழாவிற்காக 21 பிப்ரவரி 2023இல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். பணியாற்றிய நிறுவனத்தில் மேடையேறி அக்கால, இக்கால நிகழ்வுகளையும், நூலைப் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்தபோது என் மனம் சற்றே நெகிழ்ச்சியடைந்ததை உணர்ந்தேன். என் நூலைப் பற்றிய முதல் விழா, அதுவும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று, அதில் கலந்துகொண்டதை எனக்குக் கிடைத்தற்கரிய பெரும்பேறாகக் கருதுகிறேன். 21 பிப்ரவரி 2023இல் நூல் அறிமுக விழாவிற்கு வரும் துணைவேந்தர், பதிவாளர் (பொ) உள்ளிட்டோர் விழாவில் தலைமையுரையாற்றிய தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், ஒரு நூலில் எந்த மாதிரியான செய்திகளைக் கூறலாம் என்பதற்கும் அவற்றைத் தொகுப்பாகவும், கோர்வையாகவும்,...